Pages

Search This Blog

Friday, November 12, 2010

2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு: முறைகேடு நடைபெறவில்லை உச்சநீதிமன்றத்தில் அரசு மனு தாக்கல்

புதுடில்லி, நவ.12- `2ஜி' ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக கூறி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கில், தொலைத் தொடர்பு துறை நேற்று உச்சநீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தது.
`2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட் டில் முறைகேடு நடந்த தாக கூறி உச்சநீதிமன் றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த வழக்கில் மத்திய தொலைத் தொடர்பு துறையின் சார்பில் நேற்று உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப் பட்டது.
அதில், 1999 ஆம் ஆண்டு மத்திய அமைச் சரவையாலும், நாடாளு மன்றத்தாலும் அங்கீ கரிக்கப்பட்ட தேசிய தொலைத்தொடர்பு கொள்கையின் அடிப் படையிலும், தொலைத் தொடர்பு ஆணையத் தின் பரிந்துரையின்படி யும், பிரதமர் தலைமை யில் இயங்கும் திட்டக் குழுவின் நெறிமுறை களின் படியுமே `2ஜி' அலைவரிசையும் உரி மங்களும் வழங்கப்பட் டதாகவும், இதில் எந்த முறைகேடும் நடைபெற வில்லை என்றும் தொலைத் தொடர்பு துறை தெரி வித்துள்ளது.
1999 ஆம் ஆண்டு வருவாயில் பங்கு எனும் அடிப்படையில் கொள்கை வகுக்கப் பட்டு நடைமுறைக்கு வந்தபோது, மத்திய கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரி, 2001 ஆம் ஆண்டு அரசுக்கு அள விட முடியாத அளவுக்கு வருவாய் இழப்பு ஏற் பட்டதாக கடுமையான அறிக்கையை தாக்கல் செய்ததாகவும், ஆனால் அந்த அறிக்கை நாடா ளுமன்றத்தில் சமர்ப்பிக் கப்பட்ட போது அவ் வறிக்கை மீது எந்த நட வடிக்கையும் எடுக்கப் படவில்லை என்றும், எனவே 1999 ஆம் ஆண்டு முதல் அதே கொள்கை யைத்தான் மத்திய அரசு தொடர்ந்து கடைப் பிடித்து வருவதாகவும் மனுவில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
1999 ஆம் ஆண்டு கொள்கையை தொடர்ந்து வந்த எல்லா அரசுகளும், அமைச்சர் களும் கடைபிடித்ததன் விளைவாக தொலை அடர்த்தி உயர்ந்தும், கட்டணம் குறைந்தும் வருவதாகவும் அந்த மனு வில் தெரிவிக்கப்பட் டுள்ளது.
குறிப்பாக 2007 ஆம் ஆண்டுக்குப பிறகு வழங் கப்பட்ட புதிய உரிமங் கள் வாயிலாக 30 கோடி யாக இருந்த தொலை பேசி எண்ணிக்கை 70 கோடியாக உயர்ந்துள் ளது எனவும், உலகி லேயே குறைந்த கட்ட ணமாக ஒரு நொடிக்கு ஒரு பைசாவுக்கு குறை வான தொலைபேசி கட்டணம் இந்தியாவில் உள்ளதாகவும், எனவே அரசு எடுத்த கொள்கை முடிவான `எல்லோருக் கும் குறைந்த செலவில் தொலைத்தொடர்பு' என்ற இலக்கு எட்டப் பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட் டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கு - மத்திய அரசின்  பதில் மனுவில் கூறப்பட்டுள்ள விவரங்கள்

புதுடில்லி, நவ. 12- ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (11.11.2010) தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:

*இரண்டாம் தலைமுறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வது பற்றி மத்திய அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்துச் செயல்படுத்தியுள்ளது. அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிடுவது கிடையாது. இந்த விசயத்திலும் அது தொடர்ந்து கடைப்பிடிக்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

*ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும், மதிப்புத் தொகையும் அரசின் கொள்கை முடிவுகளில் வருபவை. இவற்றை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாது.

1999 ஆம் ஆண்டில் மத்திய அரசு எடுத்த அதே முடிவு

*1999ஆம் ஆண்டில் மத்திய அரசு எடுத்த புதிய தொலைத் தொடர்புக் கொள்கை யின் அடிப்படையில் ஒதுக்கீடு நடைபெற்றுள்ளது. அய்ந்தாண்டுத் திட்டங் களில். அடையாளம் காணப்பட்ட நெறி முறைகளும் டிராய் (கூசுஹஐ) அமைப்பின் பரிந்துரைகளும் கொண்டுதான் செயல்படுத்தப் பட்டுள்ளன.

*செல்பேசிக் கட்டணங்கள் குறைக்கப்பட்டு நெருக்கடியான அலைவரிசைகள் இலகுவாக்கப்பட்டு சேவை வழங்கப்படவேண்டும் என்பதுதான் புதிய போட்டியாளர்களை அனுமதித்ததற்கான காரணம் - இதனால் னுடீகூ கட்டண வருவாய் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டுள்ளது.

*இப்புதிய முறையினால், அரசின் வருவாய் அதிகமாகிக் கொண்டே வருகிறது. 2002-03ஆம் ஆண்டில் ரூ.5,384 கோடியாக இருந்த ஸ்பெக்ட்ரம் உரிமக் கட்டணம் 2009-10 ஆம் ஆண்டில் ரூ.13,723 கோடியாக உயர்ந்து வந்துள்ளது. அரசின் வருவாய்ப் பங்கு 2010 மார்ச் வரை ரூ.77,938 கோடி வசூலாகி யுள்ளது. அரசின் துறைகளில் மிக அதிகமான வரியில்லாத வருவாயாக இதுவே அமைந்துள்ளது.

*இதனால் ஒரு நிமிடத்திற்கு ஒரு ரூபாய் என்றிருந்த செல்பேசிக் கட்டணம் வெறும் 30 பைசா வாகக் குறைக்கப் பட்டுள்ளது. நொடிக்கு நொடி கட்டண முறை எல்லா நிறுவனங்களிலும் அறிமுகமாயுள்ளது.

*ருஹளு உரிமங்கள் மற்றும் 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகள் 2003 நவம்பர் மாதத்திலிருந்து வெளிப்ப டயான முறையில் கடைப் பிடிக்கப்பட்டு வரும்முறை யாகும். 31-10-2003 இல் மத்திய அமைச்சரவை எடுத்த முடிவின்படி எத்தகைய மாறுதலும் இல்லாமல் அப்படியே கடைப்பிடிக்கப்பட்டு வருவதாகும்.

*இம்முறைதான் உலகம் முழுவதும் உள்ள நாடுகளில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தந்த நாட்டின் பொருளாதார நிலைகளுக்கேற்ப, தனியார் துறையினர் அனுமதிக்கப்படுகின்றனர். 1994 இல் நம் நாட்டில் தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை தனியார் துறையினரும் பங்கு பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

*ஊஆகூளு முறையிலிருந்து ருஹளுடு முறைக்கு மாற்றிக் கொள்ள அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதற்கான உரிம முறை படிப்படியாகச் செயல்படுத்தப் பட்டது. 1994 நவம்பரில் டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னையிலும் முதல் கட்டமாக அமல் நடத்தப்பட்டது. இரண்டாம் கட்டமாக 1995 டிசம்பரில், ஏல முறையில் 18 தொலைத் தொடர்பு வட்டங்களுக்கு உரிமம் அளிக்கப் பட்டது. 10 ஆண்டுகளுக்கு ஏலம் விடப்பட்டது. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உத்திரவாதம் அளிக்கப்பட்டு, கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது எனவும் உறுதி அளிக்கப்பட்டது.

*க்ஷளுடீ சேவைக்காக 1995 ஜனவரியில் ஒப்பந்தப் புள்ளிகள் 15 ஆண்டுகளுக்குக் கோரப்பட்டன. 1997 செப்டம்பரில் 5 நிறுவனங்களுக்கும், 1998 மார்ச்சில் ஒரு நிறுவனத்திற்கும் உரிமம் வழங்கப்பட்டது.

*தொலைபேசிக் கட்டணம் மிக அதிகமாக இருந்த காரணத்தால், போதுமான, எதிர்பார்த்த அளவுக்கு வணிகம் நடைபெறாததால், 1994 ஆம் ஆண்டின் தொலைத் தொடர்புக் கொள்கை பலன் தரவில்லை. தொலைத் தொடர்புத் துறையே பாதிக்கப்படும் நிலை உருவாகியது.

டிராய் நிறுவனத்தின் முடிவு

*1997 இல் கூசுஹஐ சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி 1998 நவம்பர் 20 இல் உயர்நிலைக் குழு அமைக்கப் பட்டது. 1-4-1999 இல் புதிய தொலைத் தொடர்புக் கொள்கை உருவாக்கப்பட்டு 1-8-1999 முதல் நடை முறைப்படுத்தப் பட்டது.

* டிராய் அமைப்பின் பரிந்துரைப்படி மட்டுமே, புதிய நிறுவனங்கள் அனுமதிக்கப்படலாம் என்றும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, செயல்பாடு ஆய்வு செய்யப் படவேண்டும் எனவும் விதிகள் அமைக்கப் பட்டன.

*அப்போதிருந்த நிறுவனங்களுக்கு நிலையான உரிமக் கட்டணம் முறை 1-8-1999 முதல் வழங்கிட மத்திய அரசு 1999 ஜூலையில் முடிவு செய்தது.

இந்திய தலைமைத் தணிக்கை அதிகாரி

*இந்தியத் தலைமைத் தணிக்கை அதிகாரி மத்திய அரசின் முடிவு பற்றிப் பாதகமான கருத்துகளைத் தெரிவித்தார். தணிக்கை ஆட்சேபணைகளை எழுப் பினார். குறை கூறப்பட்ட நடவடிக்கைகள் கூட, அரசின் கொள்கை முடிவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட வையே என்பதும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பொதுக் கணக்குக் குழு எதுவும் கூறவில்லை.

*2001 அக்டோபரில் டிராய் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு ஒப்புதலுடன் 17 உரிமங்கள் வழங்கப்பட்டன. நுழைவுக் கட்டணத்திற்காக ஏலமுறையில் உரிமங்கள் வழங்கப்பட்டன. ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்படுமென உறுதியளிக்கப்பட்டது.

வழிகாட்டும் நெறி முறை என்ன கூறுகிறது?

*10ஆம் அய்ந்தாண்டுத் திட்டம் 2002 இல் அறிவிக்கப் பட்டது. இத்திட்டங்கள் திட்டக் கமிஷனால் தயாரிக்கப்பட்டு பிரதமர் தலைமையில் உள்ள தேசிய வளர்ச்சிக் கவுன்சிலால் ஒப்பளிக்கப்படும் திட்டங் களாகும்.

*இதன்படி, தொலைதொடர்புத் துறை, வரு மானத்தை இரண்டாம் பட்சமாகக் கருதி, ஸ்பெக்ட்ரம் கொள்கைளை மேம்படுத்தும் முடிவுகளை எடுக்கும் திட்டமாக இருக்க வேண்டும் என்று வழிகாட்டும் நெறிமுறைகளை வகுத்துள்ளது.

*மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, வழி முறைகளைக் காண்பது டிராய் அமைப்பின் கடமை.

*இது போலவே, 11 ஆம் அய்ந்தாண்டுத் திட்டத் திலும் முடிவுகள் 2008 இல் எடுக்கப்பட்டுள்ளன. சூடுனு, ஐடுனு உரிமங்களுக்கான கட்டணங்கள் 15 விழுக்காடி லிருந்து 6 விழுக்காடாகக் குறைக்கப்பட்டன.

*27-10-2003 இல் டிராய் ஒருங்கிணைந்த உரிம முறை பற்றிய பரிந்துரைகளைச் செய்தது. ஸ்பெக்ட்ரம் கட்டணம், ஒதுக்கீடு பற்றி முடிவுகள் எடுக்கப்படா விட்டால், தற்போதைய நிறுவனங்கள் ஒருங்கிணைந்த உரிம முறை (ருடுசு) க்கு மாறிவிடுவார்கள் என்றும் அது தெரிவித்தது. ஏல முறை மாற்றப்பட வேண்டும் எனக் கூறியது.

*ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் விடப்படக்கூடாது என டிராய்பரிந்துரைத்தது. இப்பரிந்துரை இதற்கென அமைக்கப்பட்ட அமைச்சரவைக் குழுவின் முன் (நிதி அமைச்சர் இக்குழுவின் தலைவர்) வைக்கப்பட்டது.

உரிமம் வழங்கல் தொடர்பாக டிராய் தந்த பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு விதிமுறைகளில் மாற்றம் செய்யவும் அதிகாரம் கோரப்பட்டது.

*அதன்படி 11-11-2003 இல் திருத்தங்கள் வெளியிடப்பட்டன. உரிமம் வழங்கி புதிய விதிமுறைகள் விளம்பரப்படுத்தப்பட்டன. 11 ஆம் அய்ந்தாண்டு திட்டத்தின்படி உரிமம் கோருபவர்கள் முன் அனுபவம் பெற்றிருக்கத் தேவை இல்லை என்பது குறிப்பிடத் தக்கது.

முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை

*அதன்படியே, முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் உரிமைங்கள் வழங்கப்பட வேண்டும்.


* 13-5-2005 இல் டிராய் மீண்டும் சில பரிந்துரை களைச் செய்தது. ஸ்பெக்ட்ரம் ஆண்டுக் கட்டணம் 6 இலிருந்து 4 விழுக்காடு எனக் குறைக்கப்பட வேண்டும் என்றது.

* அந்நிய மூலதனம் 74 விழுக்காடாக உயர்த்தப் பட்ட நிலையில் கட்டணத்தை 10, 8, 6 விழுக்காடு என உயர்த்தலாம் என 14.12.2005இல் டிராய் பரிந்துரைத்தது.எனவே,

* 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஏலம் விடப்படக் கூடாது எனும் முடிவு 10, 11 ஆம் அய்ந்தாண்டுத் திட்டங்களின் முடிவுகளின்படி நடந்துள்ளது.

* முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை என்று வழங்கப்பட்டுள்ளது.

* 2001 இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணமே புதிய நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பது காரணமாகத் தொலைபேசிக் கட்டணம் கணிசமாகக் குறைந்தது. உலகத்திலேயே மிகக் குறைவான கட்டணம் இங்கேதான் உள்ளது. அரசின் வருவாயும் அதிகமாகியுள்ளது.


* 2ஜி சேவை பொது மக்களுக்கு மிகவும் தேவைப் படுவது. 3 ஜி சேவை சற்று உயர்தரமானது. எனவே இரண்டையும் ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல.

* 25.9.2007 முடிய 232 விண்ணப்பங்களும் அதற்குப் பிறகு 1.10.2007 வரை 343 விண்ணப்பங்களும் வந்துள்ளன. எனவே 25-9-2007 வரை வந்தவை மட்டுமே பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் என டிராய் பரிந்துரைத்ததை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது.

* உரிமம் வழங்குவது தொடர்பாக சட்ட அமைச்சகம் எந்தப் பரிந்துரையும் செய்யவில்லை. 25.9.2007-க்குப் பிறகு வந்த விண்ணப்பங்கள் பற்றி, அமைச்சர் குழுவின் ஆலோசனைகளைப் பெறலாம் எனக் கூறிய கருத்து நடை முறை பற்றியதுதானே தவிர, கொள்கை முடிவு பற்றி அல்ல.

* நிதித்துறைச் செயலாளர் 27-11-2007 இல் எழுப்பிய வினாவுக்கு 29-11-2007 இல் விடை அளிக்கப்பட்டது. அதன் பின் எதுவும் நிதித்துறையால் எழுப்பப்படவில்லை. 30-11-2007 இல் நிதி உறுப்பினர் ஓர் அய்யம் எழுப்பினார். தொலைத் தொடர்புக் குழு உறுப்பினராகவும் அவர் உள்ளார். தொலைத் தொடர்புக் குழு டிராய் பரிந்துரையை ஏற்றுக் கொண்டுவிட்ட நிலையில், இவரது அய்யம் சரியல்ல.

பிரதமர் கருத்து அலட்சியப்படுத்தப்படவில்லை

* பிரதமரின் கருத்து அலட்சியப்படுத்தப்பட்டது என்பது கற்பனை. உரிமம் வழங்குவது பற்றிய நடவடிக் கைகள்அனைத்தும் உடனுக்குடன் பிரதமரின் முதன்மைச் செயலாளருக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளன. 26-12-2007 இல் அமைச்சரே பிரதமருக்கு எழுதி தாமதமோ விதி மீறலோ இல்லாதவகையில் அரசின் முடிவுகள் நடை முறைப்படுத்தப்பட்டுள்ளன என்பதைத் தெரிவித்துள்ளார்.

பொய்ப் பரப்புரை

*எனவே எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு பொய்ப் பரப்புரை செய்கின்றன. ஏகபோக முதலாளித்துவ ஏடுகளும் மின்னணு ஊடகங்களுமே ஊதி ஊதிப் பெரிதாகக் காட்டிட முயலுகின்றன. ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது.


அரசின் கொள்கை முடிவுப்படியும், 5 ஆண்டுத் திட்ட நெறிமுறைத் திட்டங்களின்படியும், டிராய் அமைப்பின் பரிந்துரைகளை அமைச்சரவைக் குழு ஏற்றுக் கொண்ட முடிவுகளின்படியும் 2 ஜி உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பது தெளிவு.
ஸ்பெக்ட்ரம் விவகாரம்: மத்திய அமைச்சர் விளக்கம்

புதுடில்லி, நவ.12- `ஸ்பெக்ட்ரம் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் இருப்ப தால் நாம் இறுதி முடிவு எடுத்து விடமுடியாது' என்று நாடாளுமன்றத் தில் மத்திய அமைச்சர் பவன்குமார் பன்சால் கூறினார்.

`2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக் கீட்டில் நடந்த முறை கேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரம்பற்றி நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் பாரதீய ஜனதா, அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்று 2 ஆவது நாளாக நாடா ளுமன்றத்தில் வற்புறுத் தின.

இதனால் அமளி ஏற் பட்டதால் சபை திங்கள் கிழமை வரை ஒத்தி வைக்கப்பட்டது.

அதன்பின்னர் வெளியே வந்த உள் துறை அமைச்சர் ப.சிதம் பரத்திடம் இந்த பிரச் சினை பற்றி செய்தியா ளர்கள் கருத்து கேட்ட னர்.

ப. சிதம்பரம் பேட்டி அப்போது அவர் கூறியதாவது:-

`2ஜி' ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீடு தொடர்பான மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியின் (சி.ஏ.ஜி) விசாரணை அறிக்கை ஏற்கெனவே அரசிடம் தாக்கல் செய் யப்பட்டுள்ளது. நாடா ளுமன்ற கூட்டுக் குழுவை போன்று கருதப்படும் பொதுக்கணக்கு குழு இந்த அறிக்கையை ஆய்வு செய்து நாடாளுமன்றத் துக்கு அறிக்கை வழங் கும். பின்னர் அதன்மீது விவாதம் நடைபெறும். அப்படி இருக்கும் போது நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எதற்கு? இதை புரிந்து கொள்ள முடியவில்லை.

- இவ்வாறு ப.சிதம் பரம் கூறினார்.

பவன்குமார் பன்சால்

இதே கருத்தை நாடா ளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன் குமார் பன்சாலும் தெரி வித்தார்.

அவர் கூறியதாவது:-

ஊழல் ஒரு முக்கிய மான பிரச்சினை. மத்திய கணக்கு தணிக்கை தலைமை அதிகாரியின் அறிக்கையை பொதுக் கணக்கு குழு பரிசீலிக்க இருக்கிறது. அதன் பிறகு அந்தக் குழு தனது அறிக்கையை நாடாளு மன்றத்தில் தாக்கல் செய் யும். அதன்பிறகு அந்த அறிக்கையின்மீது நாடா ளுமன்றத்தில் விவாதம் நடைபெறும்.

பொதுக்கணக்கு குழுவின் தலைவராக பாரதீய ஜனதா கட் சியை சேர்ந்த முரளி மனோகர் ஜோஷிதான் இருந்து வருகிறார். நாடா ளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைக் கோருவதன் மூலம் பொதுக்கணக்கு குழு வின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி மீது அவர்களுக்கு (பாரதீய ஜனதா) நம்பிக்கை இல்லை என்று தெரி கிறது. மேலும் பொதுக் கணக்கு குழு நாடாளு மன்ற கூட்டுக் குழுவை விட அதிகாரம் மிக்கது ஆகும். நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் தலை வராக ஆளும் கட்சியை சேர்ந்தவர்தான் இருப் பார். எனவே நாடாளு மன்ற கூட்டுக் குழு விசா ரணை கோருவதற்குப் பதிலாக பொதுக் கணக்கு குழு தனது விசார ணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோர லாம்.

இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் விசார ணையில் இருப்பதால் ஒரு கருத்தை மட்டும் வைத்துக் கொண்டு நாம் இறுதி முடிவு எடுத்து விட முடியாது. யாரா வது குற்றம் செய்து இருப் பதாகத் தெரிய வந்தால் அவர்கள் தண்டிக்கப் பட வேண்டும்.

இவ்வாறு பவன் குமார் பன்சால் கூறினார்.

இதற்கிடையே, தி.மு.க. எம்.பி.யும் அக் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான டி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று டில்லியில் செய் தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

டி.கே.எஸ். இளங்கோவன் கருத்து

ஸ்பெக்ட்ரம் அலை வரிசை ஒதுக்கீட்டில் இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் விதி முறைகளின்படிதான் அமைச்சர் ஆ.இராசா செயல்பட்டுள்ளார். அப் படி இருக்கும் போது அவர் ஏன் பதவிவிலக வேண்டும். இந்த பிரச் சினை குறித்து சி.பி.அய். விசாரணை நடத்தி வரு கிறது. எனவே அது முடி யும் வரை காத்து இருக்க வேண்டும்.

- இவ்வாறு டி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.

இதற்கிடையே கவி ஞர் கனிமொழி எம்.பி. நேற்று டில்லியில் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்துப் பேசினார்.

ஸ்பெக்ட்ரம் விவகா ரத்தில் தி.மு.க.வின் நிலை பற்றி பிரணாப் முகர்ஜி யிடம் அவர் விளக்கிக் கூறியதாக கூறப்படுகிறது.

http://www.viduthalai.periyar.org.in/20101112/news02.html
http://www.viduthalai.periyar.org.in/20101112/news05.html

No comments:


weather counter Site Meter