அய்யா, வணக்கம்!
(பூர்வ பீடிகை: வரும் தமிழ் வருடப் பிறப்புக்கு (2011-பொங் கலுக்கு), சென்னை வருகிறேன். அப்படி வரும்பொழுது 'திராவிடர் கழகத்தில்' சேர விரும்புகிறேன். ஆகையால், திராவிடர் கழகத்தில் சேரும்முறையை அறிந்துகொள்ள விரும்புகிறேன். மேலும் சென்னை வரும்போது, தமிழர் தலைவர் அய்யா அவர்களை, என் வாழ்க்கை இணை நல ஒப்பந்தத்தை நடத்தித் தருமா றும் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன்.)
என் பெயர் ஹரிஷ், புனைபெயர் பொன்னியின் செல்வன் நான், தற்போது வெளிநாட்டில் (துபாய்) வசித்து வருகிறேன். மென்பொருள் வல்லுநராகப் பணிபுரிகிறேன்.
துபாய்க்கு வந்து ஒன்றரை வருடம் ஆகிறது. இந்தியாவில் இருந்தவரையில் திராவிடர் கழகத் தைப் பற்றியோ, தந்தை பெரியார் பற்றியோ அதிகம் தெரிந்திராத ஓர் அற்ப மனிதனாகத்தான் இருந்திருக் கிறேன் - என்று எண்ணும்போது, மிக வருத்தமாக இருக்கிறது. இத்தனைக் கும், உறவினர்களில் பலரும் திரா விடர் கழகத்தில் ஈடுபட்டவர்கள்; பெரியார் கொள்கையை பின்பற்றிய வர்கள் என்று அறியும்போது; எப் படி, இதுவரை திராவிடர் கழகத் தைப் பற்றியும், தந்தை பெரியாரைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமால் விட்டோம்? என்று வியப்பாகவும், வருத்தமாகவும் இருக்கிறது.
துபாயில் இருக்கும்போதுதான், 'விடுதலை' நாளிதழை இணையத்தில் வாசிக்கத் தொடங்கினேன். அதற்கு முன்வரை, 'விடுதலை'யை யாரும் அறிமுகப்படுத்தியது இல்லை. விடுதலை நாளிதழை வாசிக்க ஆரம்பித்ததுமே, மற்ற நாளிதழுக் கும், விடுதலைக்கும் நிறையவே மாறுபாடுகள் இருப்பது தெளி வாகப் புரிந்தது. அது முதற்கொண்டு, விடுதலையை தவறாமல் படித்து வருகிறேன்.
தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களின் சொற் பொழிவுகளை பெரியார் வலைக் காட்சியில் தொடர்ச்சியாக கண்டும், கேட்டும் வருகிறேன்.
தமிழர் தலைவர் அய்யா அவர் களின் அறிவுமிக்க சொற்பொழிவு களும், ஆழமான கருத்துகளும், 'வரும் முன்னர் காவாதான் வாழ்கை' எனப்படுவது போல், வரவிருக்கும் தீங்குகளை, சூழ்ச்சிகளை முன்கூட் டியே தெரியப்படுத்துதல் எனப் பல விஷயங்கள் பிரமிப்பை ஏற்படுத்து கின்றன.
பெரியார் வலைக்காட்சியில் தமிழர் தலைவரின் அனைத்து சொற் பொழிவுகளையும் கண்டும், கேட் டும் முடித்தாயிற்று. இது விஷயமாக ஒரு சிறு வருத்தம்; விடுதலை நாளிதழில் தமிழர் தலைவர் அவர் களின் பல சொற்பொழிவுகள் வெளி யாகின்றன.
ஆனால், பெரியார் வலைக்காட்சி யில் அவை எல்லாம் வருவதில் லையே? தமிழர் தலைவரின் அனைத்து சொற்பொழிவுகளையும் பெரியார் வலைக்காட்சியில் கொண்டு வந் தால் சிறப்பாக இருக்குமே!
என் போன்றவர்கள் தந்தை பெரியார் வழியில் நடக்க காரண மாக இருந்த, இருக்கின்ற அந்தச் சொற்பொழிவுகளை உடனுக்குடன் வலைக்குக் கொண்டு வந்தால் சிறப்பாக இருக்குமே! இதை அருள் கூர்ந்து கவனத்தில் கொண்டால் திராவிடர் கழகம் மென்மேலும் வளருமே; பகுத்தறிவும் பெருகுமே!
தந்தை பெரியார் இல்லை என் றால் நம் போன்றவர்களின் கல்விக் கண் திறந்திருக்குமா? என்று எண் ணிப் பார்த்தால் மலைப்பாய் இருக் கிறது! தஞ்சையில் பிறந்து வளர்ந்த தால் பல்வேறு நிலையிலும் மத நல்லிலக்கணத்தோடு வாழ்ந்து வந்தாலும், இப்போது சிந்தித்துப் பார்த்தால் பெற்றோர், மூதாதைய ருக்குப் பல உரிமைகள் மறுக்கப் பட்ட நிலையில் இருந்திருக்கிறார் களே என்று எண்ணும் போது மிகுந்த வேதனையும், வருத்தமும் தருகிறது.
தந்தை பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவக் கொள்கையை சிந்தித்து பார்த்தால் அதுதான் சமூக நீதிக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த அய்யமுமில்லை. இந்த வருடம் இந்தியா வந்தபோது, பெரியார் திடலில் உள்ள திராவிடன் புத்தக நிலையத்தில் இருந்து, பெரியார் களஞ்சியம் முழுமையும் வாங்கி வந்துள்ளேன். இப்போது, பெரியார் களஞ்சியம் மதம் தொகுதியைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இது வரை, நான்கு தொகுதிகளை படித்து முடித்தாயிற்று. புத்தகத்தைப் படிக் கும்போது தோன்றும் எண்ணங் களையும், அவ்வப்போது தோன்றும் கேள்விகளையும் கூட, குறிப்பு எடுத்து வருகிறேன். பிறிதொரு நாளில் திராவிடர் கழகப் பொறுப் பாளரிடம் கலந்துரையாடி தெளிவு பெறவேண்டும் என்பதற்காக.
அய்யா, பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியாரின் நினைவிடத்தை பார்த்த பொழுது மெய்சிலிர்த்தது. தந்தை பெரியாரின் கருத்துகள், எவ்வளவு ஆழமாகவும், எதார்த்த மாகவும், உரிமைக்காகவும், மனித நேயத்துடனும், சகோதர மனப்பான் மையுடனும், அன்பை பறைசாற்றுவ தாகவும் இருக்கிறது என்று எண் ணும்போது புல்லரிக்க வைக்கிறது. விடுதலையும், உண்மையும், பெரியார் வலைக்காட்சியும், தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்களும் இருப்பதால்தான், என் போன்றோர் தந்தை பெரியாரின் கொள்கைக்கு ஆட்படமுடிந்தது.
பெரியாரின் கருத்துகளை அறிந்து உணர்ந்து கொண்ட பின் னர், இயன்ற வரையில் பெரியாரின் கொள்கைகளை நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பரப்பி வருகி றேன். மேலும், எனது வலைப் பூவிலும் பெரியாரின் சிந்தனை களைத் தெளித்து சீர்மைபடுத்து கிறேன். எனது வலைப்பூ: http://ponniyinselvan-katturai.blogspot.com/
பெரியார் கொள்கையாலும், விடுதலை படித்ததாலும் ஊக்கம் கொண்டு தீட்டிய சில சிந்தனைத் துளிகள் கீழே உள்ளன.
http://ponniyinselvan-katturai.blogspot.com/2010/09/blog-post.html
http://ponniyinselvan-katturai.blogspot.com/2010/05/blog-post.html
http://ponniyinselvan-katturai.blogspot.com/2010/03/blog-post 06.html
http://ponniyinselvan-katturai.blogspot.com/2010/03/blog-post.html
http://ponniyinselvan-katturai.blogspot.com/2010/01/blog-post.html
பெரியாரியல் பயிலரங்கம், இத ழாளர் பயிற்சி போன்றவற்றில் கலந்து கொள்ள வேண்டும் எனும் ஆர்வமிருந்தாலும், தற்போது வேலை நிமித்தமாக வெளிநாட்டில் இருப்பதால் கலந்து கொள்ளும் வாய்ப்பு அமையப் பெறவில்லை.
சில வருடம் முன்னர் அறி யாமையால் திருப்பதி சென்றி ருந்தேன். கையில் காப்பு வாங்கிப் போட்டுக் கொண்டு வந்தேன். அது ஏதோ காக்கும் சக்தி(!) என்ற மாய எண்ணத்தினால்!
ஆனால் விடுதலையையும், உண்மையையும், பெரியார் வலைக்காட்சியில் காணொளி களைக் கண்டு கேட்டபின்னர், காக்கும் சக்தி காப்பில் இல்லை - அதுவும் குறிப்பாக கடவுள் என்ற மாய எண்ணத்திலும் இல்லை என்பதைத் தெரிந்து, தெளிந்து கொண்டேன்.
தமிழர் தலைவர் அய்யா அவர்கள், சென்ற வருடம் ஒரு நிகழ்ச்சிக்காக துபாய் வந்தபோது, அய்யாவின் கைகளால் அந்தக் காப்பை (திருப்பதி சென்று வந்த வுடன் போட்டுக் கொண்டது) கழற்றி எறிந்தது மூளைக்கு விடுதலை அடைந்த உணர்வைத் தந்தது!
உண்மையுடன்
- ஹரீஷ்
துபாய்
http://www.viduthalai.periyar.org.in/20101021/news11.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment