Pages

Search This Blog

Saturday, October 30, 2010

வரதட்சணைக் கொலைகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் உச்சநீதிமன்றம் கண்டிப்பு

- வரதட்சணைக் கொடுமை காரணமாக நடைபெறும் கொலை களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டிப் புடன் தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த சத்தியநாராயண திவாரி என்பவர் தனது மனைவி கீதா என்பவரை கடந்த 2000 ஆம் ஆண்டு நவம் பர் 3ஆம் தேதி அன்று கொலை செய்தார். திவாரியும் அவருடைய தாயாரும் சேர்ந்து கீதா வின் கழுத்தை நெரித் துக் கொன்று, தீ வைத்து எரித்தனர். கொலை செய்யப்படும் போது, கீதாவின் வயது 24 ஆகும்.

இது தொடர்பாக, இந்திய தண்டனைச் சட்டம் 304-பி பிரிவின் கீழ் வரதட்சணைக் கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த செசன்சு நீதிமன்றம், திவாரி மற்றும் அவரு டைய தாயார் இருவரை யும் விடுதலை செய்தது. அதை எதிர்த்து காவல் துறை தரப்பில் மேல் முறையீடு செய்யப் பட்டது. அந்த மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், இரண்டு பேருக்கும் ஆயுள் தண் டனை விதித்து தீர்ப் பளித்தது.

இந்த தண்டனையை எதிர்த்து திவாரி மற்றும் அவருடைய தாயார் இருவரும் உச்சநீதி மன்றத்தில் மேல் முறை யீடு செய்தனர். அந்த மனுவை நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, கியான் சுதா மிஸ்ரா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்தது. விசா ரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது.

அப்போது, வரதட் சணைக் கொலைகளுக்கு எதிராக நீதிபதிகள் கடு மையான கருத்துகளைக் கூறினார்கள். அந்தக் கொலைகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெரி வித்தனர். திவாரி மற்றும் அவருடைய தாயார் இரு வருக்கும் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தனர்.

தீர்ப்பளித்தபோது, நீதிபதிகள் கூறியதாவது:-

வரதட்சணைக்காக மணமகளைக் கொல் லும் கொடூரச் செயல் களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண் டும். மேல்முறையீடு செய்துள்ள குற்றவாளி களுக்கு அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க மறுப்ப தற்கு எந்த காரணமும் இல்லை. உண்மையில், இதுபோன்ற வரதட் சணைக் கொலைகளுக்கு இந்திய தண்டனை சட் டம் 302ஆம் பிரிவின் (கொலை) கீழ் வழக்குப் பதிவு செய்து மரண தண்டனை வழங்க வேண்டும். ஆனால், இந்த வழக்கைப் பொறுத்த வரை 302ஆம் பிரிவில் குற்றஞ்சாற்று பதிவு செய்யப்படவில்லை. வரதட்சணை கொடுமை சட்டப்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள் ளது. எனவே, எங்களால் மரண தண்டனை விதிக்க முடியவில்லை. இதுபோன்ற மணமகள் எரிப்பு வழக்குகள் அனைத்துமே அரிதி லும் அரிதான வழக்குக ளாகவே கருதி மரண தண்டனை விதிக்க வேண்டும்.

பெண்களிடம் மரி யாதை காட்டுவதே ஆரோக்கியமான சமுதா யத்துக்கு அடையாளம். ஆனால், இந்திய சமு தாயம் நலிவடைந்து வருகிறது. மணமகள் எரிப்பு அல்லது தூக்கில் தொங்குவது போன்ற வழக்குகள் நாட்டில் சாதாரணமாகி விட்டன. நாடு முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் குவிந்து கிடக்கும் ஏராளமான வழக்கு களே இதற்கு ஆதாரம்.

வரதட்சணைக்காக மணமகளை எரித்துக் கொல்வது, கழுத்தை நெரித்து தூக்கில் தொங்க விடுவது, மண்எண் ணெயை ஊற்றி எரிப் பது போன்றவை காட்டு மிராண்டித் தனமான செயல்கள் என்பது நிச் சயம். நாகரிக சமுதா யத்தில் ஏராளமான பெண்கள் இதுபோன்று கொடுமைப் படுத்தப் படுவது ஏன்? நமது சமுதாயம் எவ்வாறு மாறிக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கு, அதற்கு உதாரணமாக இருக் கிறது.

பெண்களுக்கு எதி ரான இத்தகைய குற் றங்களை கோபத்தின் வெளிப்பாடு அல்லது சொத்துக்கான சாதா ரண குற்றங்களாகக் கருத முடியாது. இவை, சமூகக் குற்றங்கள். ஒட்டு மொத்த சமூகக் கட்ட மைப்புக்கும் ஊறு விளைவிக்கக் கூடியவை. பணத்தின் மீதுள்ள மோகத்தால் வரதட் சணை கேட்பதோடு, பின்னர் கூடுதலாகப் பணத்தைக் கேட்டு மனைவியைக் கொலை செய்வது நமது சமூகத் தில் நடைபெறுகிறது.

பின்னர், இதே கார ணத்துக்காக (பணத் துக்காக) மீண்டும் மீண் டும் திருமணம் செய்து கொண்டு மனைவியைக் கொலை செய்கின்றனர். ஏனென்றால், நம்மு டைய சமுதாயம் வர்த்த கமயமாகி விட்டது. அற்ப பணத்துக்காக மனைவியையே கொலை செய்யும் நிலைக்கு மக் கள் செல்கின்றனர். சமூ கத்தில் நிலவும் இத் தகைய கொடிய செயலை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

-இவ்வாறு நீதிப திகள் தெரிவித்தனர்.
http://www.viduthalai.periyar.org.in/20101029/news11.html

No comments:


weather counter Site Meter