திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நடைபெறும் முறைகேடுகளை வெளியிடாமல் இருக்க பத்திரிகைகளுக்கு கூவிக் கூவி விளம்பரம் கொடுத்து வரும் பல்கலைக்கழக பார்ப்பனத் துணைவேந்தர் மீனாவின் விநோத செய லால் பல்கலைக் கழக வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவர் பொறுப்பேற்ற சில மாதங்களிலே ஒன்றல்ல, இரண்டல்ல பலமுறை கேடுகள் தொடர்ந்து கொண்டே போகின்றன. பல்கலைக் கழகத்திற்கு எந்த பொருள்கள் வாங்க வேண்டுமானலும், அதற்கென இருக்கக் கூடிய பல்கலைக் கழக பொருள்கள் கொள் முதல் செய்யும் குழு ஒன்று உள்ளது.
அந்த குழு மூலம் தான் பல் கலைக் கழகத்திற்கான எந்த பொருளையும் வாங்க முடியும். ஆனால் துணை வேந்தர் மீனாவோ, அவர் நடத்தும் இந்திரா காந்தி கல்லூரியில்தான் பல்கலைக் கழகத்திற்கு வாங்கப்படும் பொருள்கள் கொள்முதல் செய்வது தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டு, திருச்சியி லுள்ள தனக்கு வேண்டிய பல்வேறு முன்னணி நிறுவனங்களில்தான் கொள்முதல் செய்யப் பட்டு வருகிறது.
இதற் காக அந்நிறுவனங்களி லிருந்து பல இலட்சம் ரூபாய் கமிசன் வருகிற தாக கூறப்படுகிறது. கொள்முதல் செய்வதற் கான குழு இருந்த போதி லும், தனது அதிகாரத் தைப் பயன்படுத்தி அவர் களை செயல்பட விடாமல் தடுத்து வருகிறார். மேலும் அண்மையில் நடைபெற்ற பேராசிரி யர்கள் பணி நியமனத்தில் கையூட்டு பெற்றுக் கொண்டு தான், பணி நியமனம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது பல்கலைக் கழகத்தில் தற்காலிக பணியிடங்கள் நிரப்பப் பட்டு வருகின்றன. அப் பணியிடங்கள் அனைத்தி லும் துணைவேந்தர் தனக்கு வேண்டியவர் களை இந்திராகாந்தி கல்லூரியில் பணியாற்றி வந்த துதிபாடிகளைப் பணியமர்த்தி வருகிறார்.
இதுபோன்று பல்கலை.யில் நடை பெறும் முறைகேடுகள் பத்திரிகைகளில் வெளி வராமல் தடுக்க சில முன்னணி நாளிதழ் களின் ஆசிரியர்களிடம், துணைவேந்தர் நேரி டையாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தீபாவளி பண்டிகை யைக் காரணம் காட்டி விளம்பரங்கள் வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார்.
தீபாவளி என்பது பார்ப்பனிய இந்து பண்டிகையாகும். திராவிடரை வீழ்த்த ஆரியர்கள் செய்த சூழ்ச்சியே இந்த தீபாவளி. தீபாவளியைப் பற்றி பாவேந்தர் பாரதிதாசன் கடுமையாக சாடியுள்ளார். அவர் பெயரில் இயங்கும் பல்கலைக் கழகம் அரசுக்குச் சொந்த மான இந்த பல்கலைக் கழக நிதியிலிருந்து தாராள மாக பல லட்ச ரூபாய்க்கு நாளிதழ்களுக்கு விளம் பரம் கூவிக் கூவிக் கொடுப் பதன் உள்நோக்கம் என்ன? நாளிதழ்களுக்கு விளம்பர முகவர்கள் பலர் இருக்கின்றனர்.
அவர்கள் சென்று விளம்பரம் கேட்ட பொதெல்லாம் கொடுக்காத துணை வேந்தர், மேலும் விளம்பர முகவர்களை பலமுறை அலைக்கழித்துவிட்டு இப்போது தானே முன் வந்து நேரிடையாக பத்திரி கைகளுக்கு விளம்பரங் கள் கொடுத்து வருவது. விளம்பர முகவர்க ளுக்கே வியப்பாக இருப் பதாக கூறுகின்றனர்.
வார, மாத நாளிதழ் களுக்கு விளம்பரங்கள் கொடுத்து பல்கலை.யில் தான் செய்து வரும் ஊழல்களையும், முறை கேடுகளையும் மறைத்து விட முயல்கிறார் என் பது தெளிவாகத் தெரி கிறது. இப்படி கூவிக்கூவி! கொடுக்கப்பட்ட விளம் பரத்தை சில பத்திரி கைகள் துணைவேந் தரின் சூழ்ச்சியை அறிந்து விளம்பரம் வேண்டாம் என தவிர்த்து விட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது.
ஊழல், முறைகேடுகளை எழுதும் பத்திரிகைகளுக்கு, செய்தியாளர் களுக்கு விளம்பரத்தைக் கொடுத்து தடுத்து விடுவ தும், செய்தி யாளர்களைத் தொடர்பு கொண்டு மிரட்டுவதும் திருச்சியில் பத்திரிகை யாளர்களுக்கு பாதுகாப் பில்லாச் சூழ்நிலை ஏற்பட்டுள் ளது. பாரதிதாசன் பல் கலைக் கழக இணைவு பெற்ற கல்லூரிகளில் ஒன்றாக இருந்த இந்திரா காந்தி கல்லூரி, அக் கல்லூரியின் முதல்வராக இருந்த மீனா தனது பார்ப்பன தந்திரத்தால் பாரதிதாசன் பல்கலைக் கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற பிறகு பாரதிதாசன் பல் கலைக் கழகத்தையே தனக்கு சொந்தமான இந்திரா காந்தி கல்லூரியின் கீழ் இயக்கப்படும் நிலையை உருவாக்கி உள்ளார்.
இவ்வாறு செயல்படு வதால், கல்வியாளர்களி டையே பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தியுள்ளது.
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
avanga unmaileye nalla penmanidhana.?
endha oru nalla manidharum thangalai patri velipadutha maatargal. aanal ivar enna panugirar endru yaaruku therium. but idhukkellam mudivu kandippa irukum.. kavalai padadheergal nanba.. edharkum oru ellai undu...
வெளியே சொன்னால் வெட்கக் கேடு. இந்தப் பார்ப்பனத்தியை துணை வேந்தர் ஆக்கிய "வீரத் தமிழர்" யார் ? பார்ப்பான தலைமைச் செயலாளர்,பார்ப்பன உள்துறை செயலாளர், பார்ப்பன ஆதிக்கத்தின் அடையாளம் தமிழர் ஆட்சியில் இன்னும் அடங்கவில்லையே!தேர்தலில் எந்த பார்ப்பான் ஓட்டுப் போடுவான் என்று இந்த நாடகம்?இனியும் இந்தப் பார்ப்பன சூழ்ச்சியிலேயே சுழல வேண்டுமா?
Post a Comment