தமிழகத்தில், 69 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அனுமதி வழங்கி பிறப்பித்த உத் தரவை, மறு பரிசீலனை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, உச்சநீதிமன்றம் தள்ளு படி செய்தது.
இட ஒதுக்கீட்டில், 50 சதவிகிதத்துக்கு மேல் அதிகரிக்கக் கூடாது என, மண்டல் வழக்கில், உச்சநீதிமன்றம் ஏற்கெ னவே தெரிவித்து இருந் தது. ஆனால், தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில், 50 சத விகிதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு செயல்படுத் தப்பட்டு வருகிறது. பிற்படுத்தபட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட் டோர், தாழ்த்தப்பட் டோருக்கு உதவும் வகை யில் இந்த நடைமுறை உருவானது. இந்நிலை யில், கடந்த ஜூலையில் உச்சநீதிமன்றம் பிறப் பித்த உத்தரவில், தமிழ கத்தில் பிற்படுத்தப் பட்ட மற்றும் தாழ்த் தப்பட்ட மக்களுக்கான 69 சதவிகித ஒதுக் கீட்டை கல்வி நிலையங் கள் மற்றும் வேலை வாய்ப்பில், மேலும் ஓராண்டுக்கு அமல்படுத்த அனுமதி அளித்தது. இந்த உத்தரவை மறு பரிசீலனை செய்யக் கோரி, வாய்ஸ் கன்ஸ் யூமர் கேர் கவுன்சில் சார்பில், உச்சநீதிமன்றத் தில் மனு தாக்கல் செய் யப்பட்டது. இந்த மனு, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.எச்.க பாடியா, நீதிபதிகள் ராதாகிருஷ்ணன், ஸ்வா தந்தேர் குமார் ஆகியோ ரைக் கொண்ட பெஞ்ச் முன் நேற்று விசார ணைக்கு வந்தது.
இது குறித்து நீதிபதி கள் விவாதித்த பின், 69 சதவிகித இட ஒதுக் கீட்டை அமல்படுத்த அனுமதி வழங்கி பிறப் பித்த உத்தரவை மறு பரி சீலனை செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத் தரவிட்டனர். 69 சத விகித ஒதுக்கீட்டு பிரச் சினையை, பிற்படுத்த பட்டோர் நல ஆணை யம் ஆய்வு செய்து முடிவு எடுக்கலாம் என் றும், இதன்பின், தேவைப் பட்டால் தமிழக அரசு இது தொடர்பாக புது சட்டத்தை இயற்றலாம் என்றும் கடந்த ஜூலை யில் உச்சநீதிமன்றம் உத் தரவிட்டிருந்தது. எனவே, இந்த நடை முறை இன்னும் முடி யாத சூழ்நிலையில், இட ஒதுக்கீட்டை மேலும் ஓராண்டுக்கு அமல் படுத்த விதித்துள்ள இடைக்கால உத்தரவை மாற்றம் செய்ய வேண் டியது இல்லை என்றும் நீதிபதிகள் உத்தரவிட் டனர்.
http://www.viduthalai.periyar.org.in/20101027/news02.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment