மேற்கு வங்க மாநிலம் முழுவதும் துர்கா பூஜை விழா மிகவும் பிரபலம். மிகவும் கோலாகலமாக அந்த விழா கொண்டாடப்படும். முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள கானஹாரி என்ற கிராமத்திலும் இந்த விழா, ஆண்டு-தோறும் சிறப்பாக கொண்டாடப்படும்.
இங்கு முச்சி என அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், குறிப்பிடத்-தக்க அளவில் வசிக்கின்றனர். மற்ற உயர் வகுப்பினரும் வசிக்கின்றனர்.
இங்குள்ள உயர் வகுப்பினர், ஆண்டுதோறும் நன்கொடை வசூலித்து, துர்கா பூஜை விழாவை சிறப்பாகக் கொண்டாடுவர். ஆனால், முச்சி வகுப்-பினருக்கு மட்டும், இந்த விழாவில் பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்-டுள்ளது.
விழா நடக்கும் இடத்துக்கு வந்து வழிபடுவதற்கும், பூஜை தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
முச்சி வகுப்பினர், தாங்களாக முன்வந்து நக்கொடை தருவதாக கூறினாலும், உயர் வ-குப்பினர் அதை ஏற்க மறுத்து விடுகின்றனர்.
இதுகுறித்து அமர் தாஸ் என்பவர் கூறுகையில், சிறு வயதில் இருந்தே, இந்தக் கிராமத்தில்தான் வசித்து வருகிறோம்.
ஆனால், துர்கா பூஜையில் பங்கேற்க எங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. இது எங்களை அவமதிக்கும் விதமாக உள்ளது. விழா நடக்கும் இடத்திலிருந்து, நூறு மீட்டர் தூரத்தில் நின்றுதான், சாமி கும்பிட வேண்டியுள்ளது என்றார்.
துர்கா பூஜா கமிட்டி செயலாளர் லக்ஷ்மண் ருத்ரா கூறுகையில், இது புது விஷயம் அல்ல. பல ஆண்டுகளாகவே இந்த நடைமுறைதான் இங்கு பின்பற்றப்படுகிறது. முச்சி வகுப்பினர், தாங்களாகவே ஒரு துர்கா பூஜை விழாவை நடத்தலாமே என்றார்.
இதுகுறித்து முர்ஷிதாபாத் மாவட்ட அதிகாரி சோயுமென்டு பிஸ்வாஸ் கூறுகையில், எந்த ஒரு நிகழ்ச்சியிலும் குறிப்பிட்ட ஒரு பிரிவினரை ஒதுக்கி வைப்பது என்பது சரியான செயல் அல்ல.
இது போன்ற சம்பவங்கள் ஏற்புடை யதல்ல. துர்கா பூஜை விழா-வில் முச்சி வகுப்பினர், ஒதுக்கி வைக்கப்படுவது தொடர்பாக எந்தப் புகாரும் எனக்கு வரவில்லை.
இருந்தாலும், தற்போது இதுகுறித்த விவரங்கள் தெரியவந்துள்ளதால், பூஜைக்கு ஏற்பாடு செய்தவர்களை அழைத்து விசாரணை நடத்தவுள்-ளோம் என்றார்.
பொதுக் குழாயில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் குடித்ததால் அபராதமாம்
ராஜஸ்தானில் நடந்த அவலம்
ராஜஸ்தானில் பொதுக் -குழாயில் தண்ணீர் குடித்த தாழ்த்தப்பட்டவர் களுக்கு 45 ஆயிரம் ரூபாய் அப ராதம் விதிக்கப்பட்ட கொடுமை சம்பவம் நடந்துள்ளது.
பிகானேர் அருகில் உள்ள குக்கிராமம் ரந்தீசர். அங்கு மேல்தட்டு மக்கள் ஒரு பகுதி யிலும், தாழ்த்தப்பட்டவர்கள் ஒரு பகுதியிலும் வசிக்கின் றனர். மேல்தட்டு சமுதா யத்தினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள பொது குழாய்களில் தாழ்த்தப்பட்டவர்கள் தண்ணீர் குடிக்கக்கூடாது என, மேல்தட்டு சமுதாய மக்கள் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், அந்தப் பகுதியைச் சேர்ந்த தாழ்த்தப்-பட்டவர்கள் மூன்று பேர், மேல்தட்டு மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பொதுக் குழாயில் தண்ணீர் குடித்-துள்ளனர். இதைப் பார்த்த அங்குள்ள மேல்தட்டு மக்கள் கொதித்தெழுந்தனர். அவர்கள் மூன்று பேரையும் பிடித்து பஞ்சாயத்தில் நிறுத்தினர். சிலர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்நிலையில், பொதுக் குழாயில் தண்ணீர் குடித்த குற்றத்திற்காக, மூன்று பேருக்கும் தலா 15 ஆயிரம் ரூபாய் விதிக் கப்பட்டது.
ஆனால், இச்சம்பவத்திற்கு தாழ்த்தப்பட்டவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்-புக் கிளம்பியது. பஞ்சாயத்துத் தீர்ப்பை அக் கிராமத்தில் வசிக்கும் தாழ்த்தப் பட்டவர் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுத்து விட்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் ரந்தீசர் கிராமத்திற்கு விரைந்-தனர். இருதரப்பிடமும் விசா-ரணை நடத்தி சம்பவம் தொடர்-பாக பஞ்சாயத்து தலைவர்மீது வழக்குப் பதிவு செய்து, விசா-ரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், பதற்றத்தைத் தணிக்க அங்கு ஏராளமான காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பும், கண்-காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் ராஜஸ்தானில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது.
http://viduthalai.periyar.org.in/20101023/snews12.html
No comments:
Post a Comment