Pages

Search This Blog

Wednesday, October 20, 2010

தீபாவளியும் - அவதாரங்களும்!

மகாவிஷ்ணு எனும் இந்துக் கடவுள் திருமால் எனவும் கூறப்படுகிறது. இந்தக் கடவுளை இந்து மதத்தின் மற்றொரு பிரி-வினரான சைவர் ஏற்றுக் கொள்-வது கிடையாது. பல கடவுள் மதம் என்பதால் இந்தக் கோளாறு. விஷ்ணு பத்து அவ-தாரங்கள் எடுத்தது. - ஒன்பது முடிந்து-விட்-டது.- ஒன்று மீதி உள்ளது. - அது கல்கி அவதாரம் - என்றெல்லாம் புரா-ணங்களில் எழுதப்பட்டுள்ளன என்கிறார்கள்.

நாம்தான் வேதங்களைப் படிக்-கக்-கூடாது. நாம் படிப்பதற்காகத்-தான் புராணங்களே எழுதப்பட்-டன. அப்படி 18 புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர துணைப் புராணங்கள் 18 உள்ளன. இவற்-றில் கருட புராணம் என்பது மெயின் புராணங்களில் ஒன்று. அதன்படி திருமால் இதுவரை 21 அவ தாரங்கள் எடுத்திருக்கிறது. 22 ஆம் அவதாரத்தை இனிமேல் தான் எடுக்க வேண்டும். அதுதான் கல்கி அவதாரம். யாரோ ஒரு எத்தன் கல்கி அவ-தாரம் _ தான் என்று கூறிப் பெண்-களையும், பெற்றோரையும் ஏமாற்றிப் பிழைத்து வருகிறான். ஆந்திரா, மராட்டியம் உள்பட பல மாநிலங்களில் பல வழக்குகள் அவன் மீது.

முதல் அவதாரம் மச்சாவதாரம். - முதல் முதலில் நீரில்தான் ஜீவராசிகள் (உயிரிகள்) தோன்றின என அறிவியல் கூறுகிறது.- இரண்-டாம் அவதாரம் ஆமை.- இது நீரிலும், நிலத்திலும் வாழக் கூடி-யது. - மூன்றாம் அவதாரம் பன்றி. இது விலங்கு. - நான்காம் அவதாரம் நரசிம்மம். -பாதி விலங்கு, பாதி மனி-தன் - பின்னர் வாமன அவதாரம் - (குள்ளப் பார்ப்பனன்) என்று வரிசைப்படுத்தி அறிவியலோடு தொடர்புபடுத்தித் தம் மூடக் கற்பனையை நியாயப்படுத்த பக்திக் குமுதம், பக்தி விக-டன், காமகோடி, ஆன்மீகம்_- அருள்சோதி என்றெல்-லாம் பார்ப்பனர் ஏடுகளில் எழுதி வருகிறார்களே! அவை பொய்.

கருட புராணப்படி முதல் அவ தாரம் குமாரன், பிரம்மச்சாரி, தவம் செய்தார். இரண்டாம் அவதாரம் வராகம்,- மூன்றாம் அவதாரம் தேவ ரிஷி,- நான்காம் அவதாரம் நரநாரா யணன் - இப்படியே போய்... பத்தாம் அவதாரம்தான் மீன் - பதினொன்றாம் அவதாரம்தான் ஆமை - 14 ஆம் அவ தாரம் நரசிம்மம் - 15 ஆம் அவதாரம் வாமனன் -16 ஆம் அவதாரம் பரசு ராமன். - 19 ஆம் அவதாரம் இராமன் - 20 ஆம் அவதாரம் கிருஷ்ணன் - 21 ஆம் அவதாரம் புத்தர் - 22 ஆம் அவதாரம் கல்கி (எதிர்-காலத்தில் எடுக்குமாம்) என ஆகிறது.

பூவுலகை மீட்கத்தான் வராக (பன்றி) அவதாரமாம். நியாயப்படி பார்த்தால் விஷ்ணு புராணத்தில்-தான் அதன் அவ-தாரங்கள் பற்றி எழுதியிருக்க வேண்டும். மாறாகக் கருட புராணத்தில் எழுதப்பட்-டுள்ளது. ஏன்? சரி, விட்டுவிட்டுப் பன்றி-யின் கதையைப் பார்ப்போம். அதுதானே தீபாவளியின் கதை!

பன்றியின் கதைதான் வராக புராணம். பன்றியே_- விஷ்ணுவே_- பூமாதேவிக்குச் சொன்னதாம். பிரளய முடிவில் இருட்டில் மூழ்கி இருந்த உலகை வராகம் உயர்த்தி வெளிக் கொண்டு வந்ததாம். பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதி ரிஷிகளில் காஷ்ய-பன்,- அதிதி தம்-பதிகளின் புத்திரன், விசு-வாஸ்-வனன். அவன்தான் சூரியன் என்-கிறது பிரம்ம புராணம். முதல் புராணத்-திலேயே சூரியனை அறி-முகப்படுத்திவிட்டு 15 ஆம் புரா-ணத்தில் பூமி இருட்டில் இருந்தது என எழுதினால்... என்னய்யா முரண்பாடு?

இதே வராக (பன்றி) அவ-தாரத்-தைப் பற்றி விஷ்ணு புராணத்தில் என்ன எழுதி-யிருக்கிறார்கள், தெரியுமா? நீரின் மேல் தாமரை இலை மட்டும் மிதக்கக் கண்ட-தாம் விஷ்ணு. உடனே நீரில் குதித்து பூமி-தேவியை எடுத்ததாம். அதன் வேண்டு-கோளின்படி, வராக ரூபம் கொண்டு தனது கொம்பு நுனியில் பூமியை உயர எடுத்து (பாதாளத்திலிருந்து) அருளிய-தாம். (வெளிநாடுகளில் நீரில் குதித்து மூழ்கித் தன் மூக்கால் பந்தை உருட்டித் தள்ளி வேடிக்கை காட்டும், டால்ஃபின் மீன். புரா-ணத்தில் இதே வேடிக்கையைப் பன்றி காட்டியுள்ளது).

யோகிகள் எல்லாம் பன்றியைக் கும்-பிட்டு பூமியை உத்தரித்து சுகத்தினைக் கொடுத்து அருள் புரிய வேண்டும் எனக் கேட்டார்-களாம். உடனே பன்றி, பூமியைப் பழையபடியே நீரின் மீது நிறுத்தி அருள் புரிந்ததாம். இதை பெரிய திருமொழிப் பாசுரம்

ஏனாகி உலகிடந்து அன்று இரு-நிலனும்

பெருவிசும்பும் தாளாய பெரு-மான்

எனப் பாடுகிறது. பிறகு நர-காசுரன் எங்கே வருகிறான்?

கேசவ துதி பாடியதால் பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று பன்றி உரு எடுத்து கட-லுக்குள் நுழைந்தார். இரண்யாட்-சத-னுடன் சண்டை போட்டு, அவனைக் கொன்று, பூமியை வெளிக் கொணர்ந்து விரித்தார் என்றுதான் வராக புராணம் கூறுகிறது.

பூமி தட்டை எனக்கூறிய முட்டாள்களால் எல்லாப் புராணங்களுமே எழுதப்-பட்டன. ஆகவே பூமியைச் சுருட்டினான் என்றும், கடலில் புகுந்தான் என்றும், பன்றி மீட்டது என்றும் கதை எழுதி வைத்துவிட்டார்கள்.

ஒவ்வொரு அவதாரம் எடுக்கும்-போதும் மகாலட்சுமி எனும் விஷ்ணுவின் மனைவி-யும் உடன் தோன்றி ஒரு கல்யாணம் செய்து கொள்ளுமாம். இதனால்தான் விளையாட்டு எனும் பொருள் கொண்ட கல்-யாணம் என்ற சொல் சூட்டப்பட்டதோ?

ஒரு மாநிலத்தில் வாமன அவ-தாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராம அவதாரத்துடன் தொடர்புபடுத்திக் கதை கட்டி விட்டார்கள்.

ஒரு மாநிலத்தில் இராமன் ஜெயித்த நாள் எனக் கதை. ஒரு மாநிலத்தில் சீதை-யுடன் நாடு திரும்பும் நாள் எனக் கதை.

ஒரு மாநிலத்தில் கூர்ம (ஆமை) அவதாரத்துடன் தொடர்புபடுத்தி - விஷ்ணுவும் லட்சுமியும் கல்யாணம் செய்து கொண்ட நாள் எனக் கதை.

இந்து மதம் ஒன்றுதானே! ஏன் இந்து மதத்தின் விழாக்களின் கதைகள் ஒரே மாதிரி இல்லை? அவரவர் கற்பனைப்படி கதை-யளந்து கொண்டு விழா நடத்-துவது என்றால்...

புராணம் எழுதியவர்களுக்குப் புத்தி இல்லை என்றுதான் பொருள். பொய் சொல்வதற்கும்-கூடப் புத்திசாலித்தனம் தேவைப்-படுமே! பலப்பல நபர்கள் பலப்-பல காலங்களில் எழுதிச் சேர்த்த கதை-கள்தான் புராணங்கள்! அத்தனையும் பொய்ப் புளுகு மூட்டைகள். அம்மட்டே!

(விடுதலை, 19.10.2006)
http://viduthalai.periyar.org.in/20101019/news08.html

No comments:


weather counter Site Meter