Pages

Search This Blog

Sunday, October 24, 2010

கேள்வி பதில்கள் -கி.வீரமணி

கேள்வி: கிரிக்கெட் உள்ளிட்ட எல்லா விளையாட்டு களிலும் சூதாட்டத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்கலாம் என்று டில்லி நீதிமன்றம் கூறியுள்ளதுபற்றி...
- கு. முரளி, திருப்பரங்குன்றம்
பதில்: வெட்கப்படவேண்டிய, வேதனை மிகுந்த தீர்ப்பு _ நீதி படும் பாடு இப்படியா?

கேள்வி: காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் போது பொதுப் பிரார்த்தனை மய்யம் ஏன்?
- க. சுசீலா, கருந்தட்டாங்குடி
பதில்: கையாலாகாதவனுக்குக் கடவுள் துணை என்ற மோசமான நிலைக்கு பளிச்சென்று எடுத்துக்காட்டு. மதச் சார்பற்ற நாட்டில் _ ரூ.8 ஆயிரம் கோடி ஊழலை பிரார்த்தனைத் திரை போக்குமா?

கேள்வி: கருநாடக மாநிலத்தில் பசுவதைத் தடுப்புச் சட்டம் செய்யப்பட்டுள்ளதே?
- மு. குருராமலிங்கன், அரக்கோணம்
பதில்: கொசுவதைத் தடுப்புச் சட்டம்பற்றி அடுத்தபடி எடியூரப்பா யோசித்து பார்ப்பார் போலும்!

கேள்வி: ராமஜென்ம பூமி பிரச்சினையில் தலையிட்டுக் கருத்துக் கூற மறுத்த உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளதே?
- பசு. கோவிந்தராசன், வலிவலம்
பதில்:பொறுத்திருந்து பார்ப்போம். அங்கென்ன நடக்கிறது என்பதை.

கேள்வி: இந்தியா ஒரு கார்பரேட் இந்து, சாட்டலைட் அமைப்பாக உருவாகிறது என்று பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் கூறியுள்ளது குறித்து...
- வி. கவிதா, பெங்களூரு
பதில்: 100_க்கு 100 உண்மைப் பேச்சு அருந்ததிராயின் பேச்சு.

கேள்வி: எல்லாரிடமும் புழக்கத்துக்கு வராமல், அதை ரக்ஷிப்பதற்காக கடும் நிபந்தனைகளைப் பின்பற்றும் சிலரிடமே மறைந்து இருக்க வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை சொல்லும் வார்த்தைதான் மறைவேதம்! என்று காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி கூறியுள்ளதாக ஓர் ஆன்மீக இதழ் கூறுகிறதே?
- ப.வ. அரசு, காஞ்சிபுரம்
பதில்:சங்கராச்சாரி யார்? பார்ப்பனர்களின் வேதத்தின் யோக்கியதை எப்படிப்பட்டது என்பது புரியவில்லையா? _ இவ்வளவு கொடுமையும் ஏகபோகமும் வேறு எங்கே உண்டு?

கேள்வி: கடவுளுக்கு எல்லா மொழிகளும் தெரிந்திருக்க வேண்டாமா?
- வா.கு.சுபாஷ், திருநாகேசுவரம்
பதில்: ஹி.... ஹி... ஹி... அவாளுக்கு சமஸ்கிருதம் தேவ பாஷையானதால் மிக நன்னா தெரியும்; மற்ற மொழிகளைக் கற்க இப்போதுதான் டியூஷன் எடுப்பதாகக் கேள்வி

கேள்வி: கல்வி நிறுவனங்களின் நேரத்தை மாற்றியமைக்க தமிழ்நாடு அரசு ஆலோசிப்பது குறித்து...
- சோம. பனிமலர், சென்னை_110
பதில்:மிகவும் வரவேற்கத்தக்கது. பெரியார் கல்வி நிறுவனங்கள் முன்பே இதற்கு வழிகாட்டியாகும். துணிந்து செய்ய வேண்டும். குளிர் வாட்டும் ஊர் களிலும், நாடுகளிலும் பள்ளி 7 மணிக்கே துவங்குகிறதே!

கேள்வி: காவல் நிலையங்களில் ஆயுத பூஜையின் போது துப்பாக்கிகளுக்கும் படையல் போட்டுள் ளார்களே?
- தா. அருண். கன்டோன்ட்மென்ட், திருச்சி
பதில்:ஏனெனில் பகவான் குண்டு வெடிக்க அருள் பாலிப்பான் என்ற நம்பிக்கையால். அய்யோ அர்த்த முள்ள இந்து மதத்தில் (வசூல்) கணிசமாக போலீஸ் பக்தர்கள்!

கேள்வி: நவராத்திரிக்கு ஜெயலலிதா வாழ்த்து, கலைஞர் வாழ்த்து மறுப்பு - _ இதன் பொருள் என்ன?
- ஆம்பூர் மணி, சென்னை-32
பதில்: ஆரியம் _ திராவிடம் எப்படி என்பதன் தெளிவு. உண்மையான அண்ணாவின் கொள்கைவழி நிற்பவர் இருவரில் எவர் என்பதை உலகுக்குப் பறைசாற்றும் உண்மை விளக்க நிகழ்ச்சி.

No comments:


weather counter Site Meter