Pages

Search This Blog

Saturday, October 16, 2010

எழுச்சியூட்டும் திராவிடர் எழுச்சி மாநாடு திருப்பத்தூரில்

அக்டோபர் 23 சனி அன்று வ.ஆ. திருப்பத்தூரில் திராவிடர் எழுச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. அதனைப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நடத்துவது என்று கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
11.10.2010 அன்று காலை 9 மணிக்கு கழகத் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு இரா. குண சேகரன் தலைமையில் திருப்பத்தூரில் கழகப் பொதுக் குழு, மாநாடு நடத்துவது தொடர்பாக பொறுப்பாளர் களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட தி.க. தலைவர் கே.சி. எழிலரசன், மண்டல செயலாளர் பழ. வெங்கடாசலம், மாநில இளைஞரணி செயலாளர் இரா. செயக்குமார், பெரியார் வீர விளையாட்டுக் கழக செயலாளர் நா. இராமகிருட்டினன், மாவட்ட செயலாளர் க.மகேந் திரன், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், பெரியார் சமூகக் காப்பு அணி துணை இயக்குநர் சித. வீரமணி, மாவட்ட துணைச் செய லாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட இணைச் செயலாளர் அரங்க. இரவி, மாவட்ட இளைஞரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, அண்ணா அருணகிரி, கனகராஜ், ஆசிரியர் வையாபுரி, வெற்றிகொண்டான், உதயகுமார், ரமேசு, பழனிசாமி, எம். ஆனந்தன், சாமி. அரசிளங்கோ, மாவட்ட மகளிரணி தலைவர் எ. அகிலா ஆகியோர் கலந்துகொண்டனர்.
தீர்மானங்கள்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
உற்சாக வரவேற்பு
1. கழகப் பொதுக்குழு, திராவிடர் எழுச்சி மாநாட்டினை திருப்பத்தூரில் நடத்துவதற்கு ஒப்புதல் அளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதுடன், 23.10.2010 காலை சோலையார்பேட்டை தந்தை பெரியார் சிலையருகில், தமிழர் தலைவர் அவர்களுக்கு மாபெரும் உற்சாக வரவேற்பு அளிப்பதென முடிவு செய்யப்பட்டது.
சுயமரியாதைச் சுடரொளிகள்
2. மாநாட்டில் பெரியார் பெருந்தொண்டர்களுக்கு சிறப்பு செய்து நினைவுப் பரிசு வழங்குவதென்றும், மறைந்த சுயமரியாதைச் சுடரொளிகள் படத்தினைத் திறந்து வைத்து வீர வணக்கம் செலுத்துவதென்றும் முடிவு செய்யப்பட்டது.
விடுதலைக்கு ஆயிரம் சந்தாக்கள்
3. இனமான ஏடான விடுதலைக்கு ஆயிரம் சந்தாக்கள் வழங்குவதென்றும், குடிஅரசு 21 தொகுதிகளையும் முக்கியப் பிரமுகர்கள் வாங்கும் வகையில் ஏற்பாடு செய்வதென்றும் முடிவு செய்யப் பட்டது.
எடைக்கு எடை இருமடங்கு நாணயம்
4. சென்னை பெரியார் திடலில் இயங்கிவரும் திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத்திற்கு- தமிழர் தலைவர் அவர்களுக்கு எடைக்கு எடை இருமடங்கு நாணயம் வழங்க பெருவுள்ளத்தோடு முன்வந்த மாவட்ட தி.மு.க. இலக்கிய அணி துணைச் செயலாளர் ஊற்றங்கரை தணிகை கோ. கருணாநிதிக்கு உளமார்ந்த நன்றி தெரிவிக்கப்பட்டது.
வரவேற்கும் வகையில்...
5. திருப்பத்தூரில் நடைபெறவுள்ள பொதுக்குழு மற்றும் திராவிடர் எழுச்சி மாநாட்டிற்கு வருகை தரும் தமிழர் தலைவர் அவர்களையும், கருஞ்சட்டை வீரர்களையும் வரவேற்கும் வகையில், பத்துக்கும் மேற்பட்ட வளைவுகள், 500-க்கும் மேற்பட்ட பதாகை கள் அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.

No comments:


weather counter Site Meter