சீரடி சாய்பாபாபற்றி ஒரு காலத்தில் பேசப்பட்ட துண்டு. பெரிதாகப் பேசப் பட்டவர்தான் சாய்பாபா புகையிலை வரை வியாபா ரத்துக்கு வந்ததுண்டு. புட்டபர்த்தி சாய்பாபா வந்த வுடன் இந்த சீரடி சாய்பாபா காணாமல் போய்விட்டார். புட்டபர்த்தி செய்யும் சித்து - தந்திர விளை யாட்டுகளுக்கு முன் - அந்த ஆசாமிபற்றிய அளப்புகள் எடுபடாமல் போயிற்று.
புட்டபர்த்தியின் மவுசு கொஞ்சம் மங்க ஆரம்பித்த வுடன், சீரடி சாய்பாபாவை வைத்து சிலர் போனி பண் ணலாம் என்று நினைக்கி றார்கள் என்று தெரிகிறது.
திடீரென்று ஒரு தக வலை ஊடகங்களில் கசிய விட்டனர். சேலம் சூரமங் கலம் முல்லை நகரில் சீரடி சாய்பாபா கோயில் ஒன்று இருக்கிறது. விஜயதசமி யன்று சாய்பாபா சிலையில் இருந்து திடீரென்று விபூதி கொட்ட ஆரம்பித்தது என் பதுதான் அந்தச் செய்தி. இந்தத் தகவலை வெளி யிலே பரப்பியதுதான் தாம தம் - வழக்கம்போல பக்திப் பாமரத் தன்மைக்குப் பலி யாகும் ஆசாமிகள் குவியத் தொடங்கிவிட்டனராம். (உண்டியல் வசூல்பற்றி தகவல் இல்லை).
புட்டபர்த்தி சாய்பாபா பற்றியும் தொடக்கத்தில் இப்படிதான் கிளப்பிவிட் டார்கள். சாய்பாபா படம் உள்ள கண்ணாடிச் சட்டத் திலிருந்து திருநீறு கொட்டோ கொட்டென்று கொட்டியது என்று கிளப்பி விட்டார்கள். அந்தக் கதை கொஞ்ச நாள் போனியா னது; உண்மையாக இருந் தால்தானே தாக்குப் பிடிக் கும்? சில நாள்களிலேயே அதன் சாயம் வெளுத்து நமத்தும் போய்விட்டது!
அதற்குப் பின் வேறு சில யுக்திகளைக் கையாண் டார்; லிங்கம் கக்க ஆரம் பித்தார். நமது திராவிடர் கழக தந்திரக் கலைஞர்கள் பொதுக்கூட்ட மேடைகளில் மிகச் சர்வசாதாரணமாக லிங்கம் கக்கிக் காட்டினார் கள். அந்தக் கப்சாவும் காணாமல் போய்விட்டது.
இப்பொழுது புட்ட பர்த்தி சாய்பாபா வயோதி கத்தின் தலைமாட்டில், நோய்களின் பிடியில் சிக் குண்டு கிடக்கிறார் (அவர் நலமாக இருக்கட்டும் - நமக்கு அதில் ஒன்றும் பிரச்சினை இல்லை).
இதுதான் தருணம் என்று சீரடி காலடி வைக் கப் பார்க்கிறது. வடநாட்டு ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்று (ஹெட்லைன்ஸ்) ஒரு தகவலை ஒளிபரப்பியது (24.9.2010).
சீரடி சாய்பாபா ஆசிர மத்தில் கணபதி விழா கொண்டாட்டத்தில் பொம் மைகளைக் கரைப்பதற்கு முன் பார்டான்ஸ் ஆட்டக் காரப் பெண்களைவிட்டு ஆடவிட்டார்களாம்! எல் லாம் ஒரு கவர்ச்சிதான்!
அய்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு மாடல் பெண்கள் அரை குறை உடையுடன் ஆட வில்லையா? அதே நிலை சீரடி சாய்பாபா ஆசிரமத் துக்கும் ஏற்பட்டு இருக் கிறது.
பேஷ்! பேஷ்!! இது அல்லவோ பக்தியின் பரி ணாம வளர்ச்சி!
- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101022/news05.html
No comments:
Post a Comment