Pages

Search This Blog

Friday, October 29, 2010

அய்யப்பன் பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா - பம்மாத்து இல்லாமல் சொல்லுங்கள், பார்க்கலாம்

அய்யப்பன் கோயிலுக்கு விரதம் இருந்து செல்லு கிறார்கள். விரதம் இருப்ப தன்மூலம் ஒழுக்கம் வளரு கிறது. பயபக்தி - பத்தியம் என்பதன்மூலம் நல்ல பழக் கங்கள் வருகின்றன என் றெல்லாம் சொல்லுவதுண்டு.

விரதம் இருக்கும் நாள் களில் மட்டும் ஒழுக்கமாக இருந்தால் போதுமா? மற்ற காலங்களில் கேடுகெட்ட வகைகளில் நடக்கலாமா என்று பகுத்தறிவாளர்கள் எதிர்கேள்வி வைப்பதுண்டு. அதற்கெல்லாம் யாரும் பதில் சொன்னது கிடையாது.

சரி, அவர்கள் சொல்லு கிறபடி பார்த்தாலும்கூட, அதாவது உண்மையா என்ற கேள்விக்கு நடைமுறை பதில் வேறு விதமாகவே இருக் கின்றது.

கேரள இந்து அறநிலை யத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய ஜி. சுதா கரன் சொன்ன தகவல் ஏடு களில் எல்லாம் நிரம்பி வழிந்தது (24.4.2008).

சென்ற சீசனில் ரூபாய் நோட்டுகளை சபரிமலை கோயில் பக்தர்களே திருடிக் கொண்டு போன 67 சங்கதி களைக் கண்டுபிடித்தோம்.

கோயிலுக்குக் காணிக் கையாக அளிக்கப்பட்ட அரி சியை கடத்திக் கொண்டு போய் கள்ளச் சந்தையில் விற்கிறார்கள். காணிக்கை யாக அளிக்கப்பட்ட தங்கம் காணாமல் போய்விடுகிறது. நிருவாகத்தில் லஞ்சம், ஊழல் பெருகி வருகிறது என்று சொன்னாரே அம்மாநில கோயில் மந்திரி - இதற்கென்ன பதிலாம்?

பார்ப்பன இதழான ஜூனியர் விகடனே (7.12.2005) ஒரு தகவலை வெளியிட்டதே!

சமீபத்தில் தண்டை யார்பேட்டையில் (சென்னை) அய்யப்பன் பூஜை ஒன்று நடந்தது. அதற்கு நானும் போயிருந் தேன். நிறைய கூட்டம், பாடலும், தாளமுமாக பஜனை முடிந்து தீபாரா தனையும் காட்டப்பட்டது. அடுத்து பிரசாதம் வழங் கப்பட வந்திருந்தவர்கள் ஒவ்வொருவராக, வெளி யேறிக் கொண்டிருந்தார் கள். அப்போது திடீர் பர பரப்பு, விசாரித்தபோது தான் தெரிந்தது அங்கு வைத்திருந்த பெரிய குத்து விளக்கை யாரோ திருடிக் கொண்டுபோய் விட்டார் கள் என்று. பக்தர்கள் மனம் நொந்தாலும் பர வாயில்லை என்று விசா ரணை நடத்தப்பட்டது. இறுதியில் மாலை போட் டிருந்த ஒரு சாமிதான் குத்துவிளக்கைத் திருடியி ருந்தது தெரிய வந்தது. வெளியே தெரிந்தால் அசிங்கம் என்று நினைத்து அப்படியே மறைத்துவிட் டோம்.

இது ஒரு சம்பவம் என்றால், போன வருடம் சபரிமலைக்கு மாலை போட்டுக்கொண்டு வந்த வர்கள் சிலரும், அடுத்தவர் பைகளில் பிக்பாக்கெட் அடித்து போலீசாரிடம் சிக்கிக் கொண்டார்கள் என்று கூறுகிறார் 20 ஆண் டுகளாக சபரிமலைக்குச் சென்று வரும் ராஜேந்தி ரன் -என்று சொல்லுவது விடுதலை அல்ல - ஜூனி யர் விகடன் (7.12.2005).

பக்தியால் ஒழுக்கம் வளருகிறதா - பம்மாத்து இல்லாமல் சொல்லுங்கள், பார்க்கலாம்.

- மயிலாடன்

http://www.viduthalai.periyar.org.in/20101029/news03.html

No comments:


weather counter Site Meter