‘‘In ancient Sanskrit literature, including the work of Kalidasa, there are frequent references to Madanotsava, a day on which any man or woman could ask another even a stranger, for sexual bliss a sort of ‘‘Free Love Day’’
ஊனையயேனேய னுயள ழுரயீவய,Chidananda Das Gupta,
lust for life; Illustrated Weekly of India May 3-9, 1987, p.39
காளிதாசனின் படைப்பு கள் உள்ளிட்ட பழைய சமஸ் கிருத இலக்கியங்களில் மத னோற்சவம் பற்றி பல இடங் களில் குறிப்புகள் காணப்படு கின்றன. இந்த மதன உற்சவ நாளில், எந்த ஆண் மகனும் அல்லது பெண் மகளும் அயலார் உள்பட எவரையும் புணர்ச்சி இன்பத்திற்காக அழைப்பு விடுக்கலாம்.
இது ஒரு வகையான சுதந் திரமான காதல் நாள் ஆகும்.
- சிதானந்ததாஸ் குப்தா இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, 3-9, மே, 1987 ப.39
தகவல்: டாக்டர் பு. இராசதுரை
ஆரியக் கலாச்சாரம் - பார்ப்பனக் கலாச்சாரம் என்று ஓங்கி ஓங்கிக் குரல் கொடுத்துப் பேசுகிறார்களே, பக்கம் பக்க மாக வரைந்து தள்ளுகிறார் களே - அவற்றின் யோக்கியதை என்ன என்பதற்கு இந்த எடுத்துக்காட்டு ஒன்று போதாதா?
இந்து மதத்தில் கிருஷ் ணன் என்ற ஒரு கடவுளை உருவாக்கி வைத்திருக்கிறார் களே- அவனின் யோக்கியதை என்ன?
சின்ன வயதில் வெண் ணெய்யைத் திருடினான் என்றும், வாலிப வயதில் பெண்களைத் திருடினான் என்றும் கூறுவது - பாடுவது பற்றி அவர்கள் அசூயைப்படு வதில்லை. மாறாக அதனைப் பெருமையாகப் பேசுகிறார்கள்.
இன்னும் சில ஆன்மிக ஆசாமிகளின் வீடுகளில் இந்தக் கிருஷ்ணன் என்ற கடவுள் மரத்தின் கிளையில் உட்கார்ந்துகொண்டு புல்லாங் குழல் வாசித்துக்கொண்டே, குளத்தில் குளிக்கும் பெண் களின் அழகை ரசிப்பது போல வும் கண்ணாடி சட்டம் போட்டு மாட்டி வைத்திருப்பார்கள்.
தொலைக்காட்சிகளில் விரசம் இருக்கிறது என்பது உண்மைதான்; அதனைக் குறைகூறும் பக்தர்கள்தான் இதுபோன்ற படங்களைக் கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், பக்தி என்ற போர்வையில் விழுந்து விழுந்து கும்பிடுகின் றனர்.
திருவில்லிப்புத்தூர் ஆண் டாள் அம்மையின் கதை என்ன? மகள் என்ற நிலையில், அங்கு கோயிலில் குடிகொண்டு இருப் பதாகக் கூறப்படும் கடவுளாகிய தந்தையைக் கணவனாக்கிக் கொள்ள துடித்த துடிப்பும், அவனோடு புணரவேண்டும் என்று வெட்கத்தை விட்டுப் பாடிய பாடலும், இந்து மதத்தின் விபச்சாரத்தனத்துக்கும், ஒழுக் கம் சிறிதும் அற்ற விரசத் துக்கும் அடித்து வைக்கப்பட்ட கல்வெட்டாகும்.
மகாபாரதத்தில் விபச்சாரத் தில் பிறக்காத ஒருவன் உண்டா என்ற கேள்வியை எழுப்பினாரே தந்தை பெரியார் - இதுவரை அதற்குப் பதில் சொன்ன ஆசாமி யார்?
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்தவனுக்கு மோட்சம் (திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலம்) கொடுத்தான் கடவுள் என்று புராணம் எழுதி வைத் திருக்கும் ஒரு நாட்டில், ஆண்டுதோறும் திருவிழா நடத்திக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தில் ஒழுக்கமும், உயர்ந்த சீலமும் உயிருடன் வாழும் என்று எதிர்பார்க்க முடியுமா?
அர்த்தமுள்ள இந்து மதம்பற்றி பேசும் அன்பர்களே, ஆன்மிக உலக்கைக் கொழுந் துகளே, பதில் சொல்லுங்கள் பார்க்கலாம்!
- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101020/news06.html
No comments:
Post a Comment