Pages

Search This Blog

Thursday, October 14, 2010

கன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலைத்து, வீடியோ படங்களைக் காட்டி மிரட்டிய பாதிரி

Rajarathinam
கன்னியாஸ்திரியைக் கற்பழித்து, கருவைக் கலை [^]த்து, வீடியோ படங்களைக் காட்டி மிரட்டியதாக குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முதல்வரும், பாதிரியாருமான ராஜரத்தினம் முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள தஞ்சாவூரான் சாவடியைச் சேர்ந்தவர் மலையப்பன். இவரது மகள் பிளாரன்ஸ் மேரி. 31 வயதான மேரி தன்னை ராஜரத்தினம், மிரட்டிக் கற்பழித்து, அதை செல்போனில் படம் பிடித்து வைத்து மிரட்டி தொடர்ந்து பாலியல் பங்கப்படுத்தி வந்ததாகவும், கர்ப்பம் தரித்தபோது அதைக் கலைத்து விட்டதாகவும், தன்னை சீரழித்த அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியும் திருச்சி கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராஜரத்தினம் தற்போது தலைமறைவாகி விட்டார். அவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். நேற்று திருச்சி மருத்துவமனையில் மேரிக்கு மருத்துவப் பரிசோதனை [^] நடத்தப்பட்டது.

இந்த நிலையில் ராஜரத்தினம், போலீசார் தன்னை கைது செய்யாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி வி.பெரியகருப்பையா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் ஆர்.எம்.அன்புநிதி, கற்பழிப்பு புகார் கூறி உள்ள பிளாரன்ஸ்மேரியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி உள்ளோம். விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. தற்போதுள்ள சூழ்நிலையில் மனுதாரருக்கு முன்ஜாமீன் கொடுத்தால் சாட்சிகளை கலைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்று வாதாடிநார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வி.பெரியகருப்பையா, பிளாரன்ஸ் மேரி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள கருத்துக்களை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். பின்னர் விசாரணையை வருகிற 18-ந் தேதிக்கு தள்ளி வைத்தார்.

முதல்வர் பதவியிலிருந்து சஸ்பெண்ட்:

இந்த நிலையில், கற்பழிப்புப் புகாரில் சிக்கிய ராஜரத்தினம் முதல்வர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ராஜரத்தினம் கற்பழிப்புப் புகாரில் சிக்கியதைத் தொடர்ந்து தமிழ்நாடு [^] ஜேசுயிட் கல்லூரிளின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்குப் பின்னர் குழுவின் தலைவரான பாதிரியார் தேவதாஸ் வெளியிட்ட அறிக்கையில்,

முதல்வர் பதவியிலிருந்து பாதிரியார் ராஜரத்தினம் விலக்கி வைக்கப்படுகிறார். அவரே கடந்த ஒருமாதமாக தன்னை முதல்வர் பதவியிலிருந்து விடுவிக்குமாறு கோரி வந்தார். இருப்பினும் அவர் கல்லூரியில் பேராசிரியராக தொடர்ந்து செயல்படுவார் என்றார். தற்காலிக முதல்வராக பாதிரியார் செபாஸ்டியனை நியமித்துள்ளனர்.

ராஜரத்தினம் மீது கற்பழிப்பு, கிரிமினல் செயலில் ஈடுபட்டு மிரட்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேரிக்கு செய்யப்பட்டுள்ள மருத்துவப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் ராஜரத்தினத்தை கைது செய்ய போலீஸார் தீவிரமாக இறங்குவார்கள் எனத் தெரிகிறது.

ராஜரத்தினத்திற்கு பரிசோதனை கோரி போராட்டம் [^]:

இதற்கிடையே பாதிரியார் ராஜரத்தினத்தையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர் தப்ப அனுமதிக்கக் கூடாது, அவரை காப்பாற்ற யாரும் முயற்சிக்கக் கூடாது என்று கோரி மக்கள் கலை இலக்கியக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று செயின்ட் ஜோசப் கல்லூரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஜரத்தினத்தை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரினர்.

இதையடுத்து போலீஸார் அவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

165 ஆண்டு பழமையான கல்லூரியான செயின்ட் ஜோசப் கல்லூரிக்குப் பெரும் களங்கமாக அமைந்துள்ளது ராஜரத்தினத்தின் செயல் என்று திருச்சி மக்கள் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
http://thatstamil.oneindia.in/news/2010/10/14/trichy-st-joeseph-college-principal-rape.html

No comments:


weather counter Site Meter