Pages

Search This Blog

Saturday, October 16, 2010

ஆசிரியர் வீரமணி விடையளிக்கிறார்

கேள்வி: கருநாடக பா.ஜ.க., ஆட்சி _ அதைக் காப்பாற்ற அவர்கள் மேற்கொண்ட முயற்சி _ இதுதான் அவர்கள் கட்டிக் காக்கும் தார்மீகமா?
- மு. உலகநாதன், திருக்காட்டுப்பள்ளி
பதில்: ஏற்கெனவே அங்கே பல கட்சித் தாவல்கள், அமைச்-சர்கள் நீக்கம், சேர்க்கை என்ற சித்து விளையாட்டை-யெல்லாம் மறந்துவிட்டு யோசித்துப் பார்க்காதீர்கள். அதையும் இணைத்துப் பார்த்து அவாள் தார்மீகத்தைப் பாருங்கள்.

கேள்வி : உதைத்தவனுக்கும் ஒரு பங்கு; உதைபட்டவனுக்-கும் ஒரு பங்கு _ இதுதான் அலகாபாத் தீர்ப்பா?
- தி. சந்திரா, எடுத்துக்கட்டி
பதில்: அதனால்தான் அது கட்டப் பஞ்சாயத்து என்றனர் பிரபல சுப்ரீம்கோர்ட் வக்கீல்கள்!

கேள்வி: தொட்டதற்கெல்லாம் ஜெயலலிதாவை ஆதரிக்கும் திருவாளர் சோ நுழைவுத் தேர்வு கூடாது என்று அம்மையார் சொல்லுவதைக் குறை கூறுகிறாரே!
- சி. துரைபாபு, சிவகாசி
பதில்: சில நேரங்களில் சோ இப்படியும் பேசி நடுநிலை வேஷம் போட்டுக் காண்பிப்பார். ஏமாற மாட்டார்கள் தமிழ் மக்கள்.

கேள்வி: பார்ப்பனர்களுக்கு இப்பொழுது ஜெகத் குரு உண்டா?
- மு. கலியபெருமாள், அரியலூர்
பதில்: உண்டே, கோர்ட் வளாகத்தில், குற்றவாளிக் கூண்டில் தேடிப் பாருங்கள்.

கேள்வி: தேவையில்லாமல் மருத்துவர் ராமதாசு தங்களை ஏன் உரசுகிறார்?
- வி. ருக்மணிதேவி, சென்னை-40
பதில்: அதுதான் நமக்கும் புரியவில்லை; நிதானம் இழந்தால் இது தவிர்க்க முடியாததுதானே?

கேள்வி: மீண்டும் பரதமுனி கோயில் உருவாகுமா?
- தா. மணிகண்டன், சென்னை-21
பதில்: உருவாகக் கூடாது என்பதை மாண்புமிகு முதல்வருக்கு நாம் வேண்டுகோளாக வைக்கிறோம்.

கேள்வி: அகில இந்திய கட்சிகள் மாநிலத்தில் தடுமாறுவது அவை அகில இந்தியக் கட்சிகளாக இருப்பதால்தானா?
- வ. முகில், அரக்கோணம்
பதில்: ஆமென்! ஆமென்!!

கேள்வி: மேற்கு வங்கத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வெறும் ஏழு சதவிகிதம் தானாமே?
- வே. சிவாஜி, கரூர்
பதில்: அதுவும் நாம் போய் இரண்டு முறை (சந்திரஜித், அடியேன் எல்லாம் சென்று) கிளர்ச்சி செய்த பின்பே 5 ஒரு தடவை; 2 அதிகம் பிறகு!

கேள்வி: அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு மக்களைத் திரட்டுவது - _ ஏன்?
- கு.ம. காமராசு, காரைக்கால்
பதில்: வாக்கு வங்கியை உருவாக்கவே! கூட்டம் உங்களுக்கு; ஓட்டு எங்களுக்கு என்று பிறகு நிலைமையை யார் சொல்வார்களோ என்று பார்க்கலாம்.

கேள்வி: காஷ்மீருக்கு வெளியில் இருக்கும் பண்டிட்டுகள்பற்றி ஏடுகளில் சேதிகள் வருகின்றனவே, அந்தப் பண்டிட்டுகள் யார்?
- சி. ராமன், குளித்தலை
பதில்: காஷ்மீரத்தில் உள்ள பார்ப்பனர்; அங்குள்ள மக்களால் வெறுக்கப்படும் மக்கள்; பாரம்பரியமாக புரோகிதத் தொழில் செய்பவர்கள்.

No comments:


weather counter Site Meter