வட நாட்டில் அக்காலத்தி லிருந்த தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர். அதுதான் தீபாவளி என வழங்கி வருகிறது. வடநாட்டவர் தென்னாட்டில் குடியேறிய பின் தீபாவளித் திருவிழா இங்குள்ள தமிழரது கொள்கைக்கும் ஏற்றதாயிருத்தலின் அஃது இங்குள்ள தமிழ் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருவதாயிற்று. கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நாளின் நினைவுக்கு அறிகுறியாகத் தீபாவளித் திருநாள் கொண்டாடப்படுவதாயிற்று என்னும் கதை பிற்காலத்தில் பார்ப்பனரால் கட்டிவிட்ட தொன்றாகும்.
பார்ப்பனர் தமது உயிர்க் கொலை வேள்விக்கு உடன்படாத நரகாசுரன் என்னும் தமிழ் மன்னன் ஒருவனைத் தமது உயிர்க்கொலை வேள்விக்கு உடன்பட்டுத் தமக்குத் துணையாயிருந்த மற்றொரு தமிழ் மன்னனாகிய கண்ணனை ஏவிக் கொலை செய்தனர். தீபாவளி என்னும் சொற்றொடர் பொருளை ஆராயுங்கால் அத்திருநாளுக்கும், கண்ணன் நரகாசுரனைக் கொன்ற நிகழ்ச்சிக்கும் ஏதொரு இயைபும் இல்லை என்பது தெளியப்படும். தீபாவளி என்பது தீப + ஆவலி எனப் பிரிந்து விளக்கு வரிசை என்றே பொருள் தரும். ஆதலால் தீபாவளி நரகாசுரன் கதைக்குச் சிறிதும் இசைவது அன்று.
ஆசிரியர்: தமிழ்க்கடல் மறைமலை அடிகள்
நூல்: தமிழர் மதம் பக்கம்: 200-201
மறைமலை அடிகள் ஆன்மிகவாதிதான். அவரே கூறுகிறார் தீபாவளி பார்ப்பனர் புனைவு என்று. தமி ழர்களே நீங்கள் தீபாவளியைக் கொண்டாடலாமா?
சிந்திப்பீர்!
http://www.viduthalai.periyar.org.in/20101031/news06.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
மறைமலை அடிகள் தீபாவளி திருநாளை கொண்டாட வேண்டாம் என்று சொல்லவேயில்லை .
கொண்டாட்டத்திற்கான உண்மையான காரணம் தான் பார்பனர்களால் திரிக்கப்பட்டதே தவிர , மறைமலை அடிகளார்
தீபாவளி திருநாளை ஒருக்காலும்
கொண்டாட வேண்டாம் என்று சொல்லவேயில்லை .
பார்பனர் வருகைக்கு முன்பிருந்தே தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாடி இருக்கிறார்கள் .
அப்புறம் ஏன் தமிழர்கள் தீபாவளி திருநாளை கொண்டாட கூடாது என்று சொல்கிறீர்கள் என்பதுதான் புரியவில்லை .
"தமிழ் மேன் மக்கள் அய்ப்பசித் திங்களில் விளக்கு வரிசை வைத்து அவற்றின் ஒளியிலே விளங்கா நின்ற முழு முதற் கடவுளுக்குத் திருவிழா கொண்டாடி வந்தனர்."
Post a Comment