
சபரிமலையிலுள்ள கருவறைக் கடவுள் சாத்தன்தான் என்று மலைவாசிகள் கூறுகின்றனர். குளத்துப்புழை பகுதியிலும், பீர்மேட்டிலும் உள்ள மலைவாசிகளில் பலரும் சாத்தனைத்தான் வழிபடுகின்றனர் என்பதும் இங்கே நினைவு கூரத்தக்கதாகும். அய்யப்பனுக்கும் சாத்தன் என்ற பெயர் இருந்ததாம் குருகுலம் (1954 ஆகஸ்ட்) எனும் மாத இதழில் வெளிவந்த ஒரு கட்டுரையில் பின்வருமாறு காணப்படுகின்றது.
சிலப்பதிகாரம் என்னும் பண்டைத் தமிழ் நூலில் அய்யப்பனை சாஸ்தா என்றும், பாசண்ட சாத்தன் என்றும் பாசண்டன் என்றும் குறிப்பிட்டுள்ளனர். அந்த நூலுக்கு உரையெழுதிய அடியார்க்கு நல்லார் இதைப் பற்றி கூறும்போது வைதீக மதத்துடன் தொடர்பில்லாத தொண்ணூற்றாறு சாத்திர நூல்களில் பாண்டித்தியம் பெற்றவர் அய்யப்பன் என்று விளக்கமளிக்கின்றார். ஆனால், எந்த ஒரு தமிழ் நூலிலும் அய்யப்பன் புத்த தர்மத்தைப் பின்பற்றியவர் என்று காணப்படவில்லை.
அய்யப்பனும், சாத்தனும் ஒருவரல்ல என்பதையே இது காட்டுகின்றது. சாஸ்தா என்ற புத்தமதப் பெயரே கிராமிய மொழியில் சாத்தன் என்றானது. சாஸ்தா என்ற சொல்லின் திரிபே சாத்தன் என்று குண்டர்ட்டும் சிறீகண்டேசுவரம் பத்மநாபப் பிள்ளையும் கூறுகின்றனர் சாத்தன். சாத்தனார் முதலிய பெயர்களும் கேரளத்தில் சாதாரணமாக நிலவின. கிராமிய மொழியில் சாத்தன் ஆனது சாஸ்தா. அதாவது புத்தன்தான் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரம். இப்பொழுது இயல்பாகவே ஓர் அய்யம் எழலாம். மலைப் பிரதேசங்களில் வாழ்கின்ற பழங்குடியினரான காணிக்காரர்களுக்கும் பிறருக்கும் புத்த மதத்துடன் தொடர்பு உண்டானது எப்படி என்பதே அந்த அய்யம் இன்று பழங்குடியினராகக் கருதப்படுகின்ற அவர்களில் பலரும் ஒரு காலத்தில் இதே நிலையில் இருந்தவர்களல்லர். பார்ப்பனர்கள் குடியேறிய காலத்திலும் அதற்குப் பிறகும் ஒவ்வொரு காரணங்களுக்காக காட்டில் தஞ்சம் புகுந்தவர்களே நம்முடைய மலை வாசிகளில் பெரும் பிரிவினர் பார்ப்பன மதத்துடன் நட்புக் கொள்ள மறுத்து காட்டுக்குச் சென்ற அவர்கள் பிற சமூகத் தொடர்புகள் இல்லாததனால் காலப்போக்கில், வீழ்ச்சியடைந்து விட்டனர். சபரிமலை சாஸ்தாவை இன்றும் இந்த மலைவாசிகள் அவர்களுடைய கடவுளாக வழிபடுகின்றனர். சபரிமலை சாத்தா என்றும் சபரிமலை சாத்தான் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அய்யன்
சபரிமலையிலுள்ள மூலத்தான இறைவனை சாதாரண மக்கள் அய்யன் என்று கூறுகின்றனர். பழைய பாடல்களிலும், அய்யப்பன் துதிகளிலும் அய்யன் என்ற சொல் பலமுறை பயன்படுத்தப்பட்டுள்ளது தமிழ்நாட்டிலும், கேரளத்திலும் பெயருடன் அய்யன் என்று சேர்க்கும் வழக்கம் இருந்தது. எடுத்துக்காட்டு; ராமய்யன், சுப்பய்யன், முத்தய்யன், வீரய்யன்.
தந்தை, செல்வாக்கு உடையவன், யஜமான் என பல பொருள்களையுடைய சொல் இது. இந்தச் சொல் பாலி மாழியிலிருந்து மலையாளத்தில் புகுந்ததே. புத்த மதத்தினர் தான் பாலிமொழியைக் கேரளத்திற் கொண்டு வந்தனர். இன்று அந்த மொழியைப் பேசுபவர்கள் கேரளத்துக்குக் இல்லையென்றாலும் பாலி மொழியிலுள்ள பல சொற்கள் மலையாளத்தில் உள்ளன. அய்யன் என்ற சொல்லும் சபரிமலை இறைவனுக்கு புத்த மதத்துடன் உள்ள தொடர்பையே வெளிப்படுத்துகின்றது. எல்.ஏ. ரவிவர்மா இதைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்:
புத்தருக்கு ஆர்ய என்ற பெயர் (சில சமயங்களில் ஆர்யக என்றும், இருப்பதை புத்த மத நூல்களில் தாராளமாகக் காணலாம். ஆர்ய என்ற ஓசை பாலி (புத்தமதத்தின் முக்கியமான இலக்கிய மொழியும் இது தான்) யில் அய்யோ என்றாகும். புத்தமத்தின் மதப் பிரச்சார முயற்சியில் பாலி மொழியிலுள்ள பல ஓசைகள் தென்னிந்தியாவில், குறிப்பாக கேரளத்தில் வந்து சேர்ந்துள்ளன.
அய்யோ என்ற சொல் திராவிடத்தில் வந்தபொழுது அன்னும் சேர்ந்து அய்யனும், அய்யோ+அப்பன்=அய்யோப்பனும் ஆனது. ஆர்யஓசையே பிராகிருத மொழியில் அஜ்ஜ என்றாகின்றது. அஜ்ஜ திராவிட மொழியில் அச்ச என்றும், அய்ய என்றும் மாறுகின்றது அச்சன் கோவில், புத்தச்சன் முதலிய சொற்களிலுள்ள அச்சன் ஆர்ய ஓசையின் திராவிட வடிவமாகும். சங்கரய்யன், பாலிய தச்சன் முதலியவற்றிலுள்ள அய்யன், அச்சன் என்ற பூஜக சொற்கள் சமஸ்கிருதத்திலுள்ள பூஜக சொல்லான ஆர்ய ஓசையின் பழைய வடிவிலிருந்து திராவிட உருவை அடைந்ததாகும் இரண்டினுடைய மூலம் ஒன்றான போதிலும் இரண்டு வழியில் நுழைவதால் இரண்டு பொருள்கள் உண்டாகின்றன. பாலி மார்க்கம் வந்ததால் அதன் மூல குணம் அனுசரித்து பெயரானது; பிராகிருத மார்க்கம் வந்ததால் அதன் மூலத்தை அனுசரித்து பூஜக வசனம் ஆனது.
ரவி வர்மா தொடர்ந்து கூறுவதாவது: தர்ம சாஸ்தா என்ற சொல்லிலுள்ள தர்ம என்ற சொல், சரணம் அழைத்தல் என்பதாகும். இவை புத்தர் பிறப்பு வாதத்துக்கு உதவியாக இருக்கின்றது. தர்மசிவன் என்றோ தர்ம விஷ்ணு சரணம் என்றோ சொல்வதில்லை தர்ம சொல் சவுகதர் (புத்தர்)களின் முக்கிய சொல்லாகும். அதுபோலவே சரணம் என்பதும் சங்கம் சரணம்,புத்தம் சரணம் தர்மம் சரணம், என்ற புகழ்பெற்ற புத்தவசனத்தைப் பாருங்கள். இது போல சிவம்சரணம், விஷ்ணு சரணம் என்று கூறுவதில்லை. சாஸ்த்ரு புசைகளில் பயன்படுத்துகின்ற ரேவந்தாதி பல சொற்களும் (ரேவந்தாய நம; உள்பட பல) புத்த தேவதை பெயர்களே. விஷ்ணு மாயையில் சிவனுக்குப் பிறந்தது சாஸ்தா. புத்தரும் மாயாதேவி சுதன்! இவ்வாறு பல வகைகளிலும் புத்த பிறப்பு வாதத்திற்கு வலிமை சேர்ப்பதாகக் காணப்படுகின்றது. (_ அய்யப்பன் மாதிகை மலர்_1, இதழ் _1.)
அய்யப்பனை அதாவது சாஸ்தாவை இந்துக் கடவுளாக மாற்ற முயன்றவர்கள் மாயாதேவியின் மகனான புத்தரை விஷ்ணு மாயையின் மகனாக ஆக்கி கதையைத் திருத்தினார்கள். அதனுடன் அவர்களுடைய கற்பனையையும் கலந்து அவரை இயற்கைக்கு முரணான வாரிசாகவும் ஆக்கிவிட்டனர். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு தென்னிந்தியாவில் சைவ மதத்தினருக்கும், வைணவ மதத்தினருக்குமிடையே நடந்து வந்த கலவரங்களை முடிவுக்குக் கொண்டு வந்து அந்த மதங்களை இணைக்கும் முயற்சிகளை இணைக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்தன. சிவனுக்கும், விஷ்ணுவுக்கும் மகனான ஒரு கடவுளை உருவாக்கிய பின்னணியில் இத்தகைய ஒரு குறிக்கோளும் இருந்தது. அதனுடன் பழைய புத்தமதத்தின் ஆதரவாளர்களான சாதாரண மக்களையும் அந்த மதத்திற்குள் கொண்டுவர முடிந்தது.
அய்யன் என்ற பெயரில் தமிழ்நாட்டில் வழிபடப் பட்டு வருகின்ற கிராமிய கடவுள் சங்கல்பமும் புத்த மதத்துடன் தொடர்புடையதுதான். புத்த மதம் பரவுவதற்கு முன்பிருந்த மத சங்கல்பங்களை உட்கொண்டு அவர்களும் அந்த சங்கல்பத்தை வளர்த்திருக்கலாம்.
http://www.viduthalai.periyar.org.in/20101016/snews12.html
No comments:
Post a Comment