தமிழர்களின் வீடுகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் தமிழில் நடப்பதில்லை; தமிழன் வீட்டு நிகழ்ச்சிக்குத் தலைமை தாங் கும் தகுதி தமிழனுக்கு அளிக்கப்படுவதில்லை.
சமஸ்கிருத மொழிதான் இடம் பெறும் - ஆரியப் பார்ப் பனர்கள்தான் தமிழன் வீட்டு நிகழ்ச்சிகளை நடத்துவார்கள்.
தந்தை பெரியார் அவர் களால் தன்மான இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது. தமிழ் மானம், இனமானம், தன்மானம் புயலாக எழுப்பப்பட்டு புதிய அத்தியாயம் அரும்பிடத் தொடங் கியது.
தமிழன் வீட்டுப் பிள்ளை களின் பெயர்கள் கூட தமிழில் இருக்காது; எல்லாம் சமஸ் கிருதம்தான். கேசவன் என்றும், ஆதிகேசவன் என்றும் வைத் துக் கொள்வார்கள் - பொருள் புரியாமல். கேசவன் என்றால் மயிரான்; ஆதிகேசவன் என் றால் பழைய மயிரான் என்று பொருள். பொருள் புரிந்து இப்படி வைத்துக் கொள்வார்களா?
தன்மான இயக்கம் பல வகையிலும் ஊட்டிய புத் துணர்ச்சி புதிய மாற்றங்களைக் கொண்டு வந்து சேர்த்தது, மறுமலர்ச்சிப் பூக்காடு மணம் கமழ ஆரம்பித்தது; எதிலும் மாற்றம், தலைகீழ் மாற்றம் என்ற புரட்சிப் பூபாளங்கள் கேட்க ஆரம்பித்தன.
புரோகித மறுப்புத் திரு மணம் என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியவர் தந்தை பெரியார். அந்த முறையில் புரோகிதனுக்கு இடம் இல்லை. சமஸ்கிருதத்திற்கு கல்தா கொடுக்கப்பட்டது. அக்னிக் குண்டம் இல்லை; அம்மியில்லை; - அருந்ததியைப் பகலில் பார்க்கக் கூறும் பொய்க்கு இடம் இல்லை; சட்டிப்பானைகள் அறவே யில்லை.
மணவிழாத் தலைவர் ஒருவர், ஓரிருவர் சொற் பொழிவாளர்கள். ஏன் இந்தத் திருமணமுறை என்பதற்கான விளக்கங்கள் அளிக்கப்பட்டன. பார்ப்பனர் பண்பாட்டுப் படை யெடுப்பு தமிழர்களை எந்தெந்த வகைகளில் எல்லாம் தலை குப்புற வீழச் செய்திருக்கிறது. இழிவு நோயைப் பீடிக்கச் செய் திருக்கிறது. கல்யாண வீட்டில் புரோகிதர் சொல்லும் மந்திரம் எடுத்துக் கூறப்பட்டு, அதற்கு விளக்கங்களும் கூறப்பட்டன.
மணப் பெண்ணைப் பார்த்து புரோகிதன் சொல்லு வான்; முதலில் சோமன் உனக்குக் கணவன், கந்தர்வன் இரண்டாவது கணவன், மூன் றாவது அக்னி, நான்காவது தான் மனித ஜாதியில் பிறந்த இந்தக் கணவனாகிய மண மகன் என்று கூறும் சோமப்பிரதமோ விவித உத்ரே என்று தொடங்கும் மணமகளை இழிவுபடுத்தும் கல்யாண மந்திரத்தையெல்லாம் சுயமரியாதைத் திருமண நிகழ்ச் சியில் எடுத்து விளக்குவார்கள்.
நாவலர் சோமசுந்தர பாரதியார் பன்மொழி புலவர்; தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் முதலிய மொழிகளில் கரை கண்டவர். நண்பர் ஒருவர் வீட்டுத் திருமணத்திற்குச் சென்றிருந்தார். ஒரு புரோகிதப் பார்ப்பான் சமஸ்கிருதத்தில் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டிருந்தான். நாவலர் பாரதியாருக்குச் சமஸ்கிருதம் தெரியும் ஆதலால், அந்தப் புரோகிதப் பார்ப்பான் கூறும் தவறான மந்திரங்களைக் கேட்டு ஆத்திரப்பட்டு, ஓங்கி ஒரு அறைவிட்டார். கல்யாணத் திற்கு வந்திருந்தவர்கள் திடுக்கிட்டனர். அப்பொழுது நாவலர் பாரதியார் சொன்னார் - இந்தப் பார்ப்பான் கருமாதி மந்திரத்தை திருமணத்தில் சொல்லிக் கொண்டிருக்கிறான் என்றாரே பார்க்கலாம். அனை வரும் அதிர்ச்சிக்கு ஆளாகி விட்டார்கள்.
சிரிக்கலாம் - சிந்திக்க லாம் எனும் நூலை உ.நீலன் அவர்கள் எழுதியுள்ளார். இது போன்ற சுவையான தகவல்கள் இதில் நிரம்பி வழிகின்றன. நீலன் அவர்கள் தந்தை பெரி யார் அவர்களிடமிருந்து பொது வாழ்வைத் தொடங்கிய இன் றைய காங்கிரஸ் பிரமுகர் ஆவார். நூலின் விலை ரூ. 80; கிடைக்கும் இடம்: அருள் பதிப் பகம், 6, விநாயகம் பேட்டைத் தெரு, சென்னை - 600 015.
- மயிலாடன்
http://viduthalai.periyar.org.in/20101018/news05.html
No comments:
Post a Comment