Pages

Search This Blog

Tuesday, October 26, 2010

திருப்பத்தூர் தீர்மானங்கள்

23.10.2010 அன்று வேலூர் - திருப்பத்தூரில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் அனைத்தும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

குறிப்பாக ஈழத் தமிழர்கள் பிரச்சினைபற்றி இரு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. கொன்று குவிக்கப்பட்ட லட்சக்கணக்கான தமிழர்கள் போக, இன்னும் உயிரைக் கையில் பிடித்து வைத்துக் கொண்டிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு அடிப்படை வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதில் இலங்கை அதிபர் ராஜபக்சே அக்கறை காட்டுவார் என்று எதிர்பார்ப்பது சிறுபிள்ளைத்தன மானதே! இந்தியா உள்ளபடியே அழுத்தம் கொடுத் தால் ஏதாவது நடக்கலாம். ஆனால், இந்தியாவின் நிலைப்பாடு ஏமாற்றம் அளிப்பதாகவே உள்ளது.

தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் கொடுத்துவரும் கடுங்குரலுக் காக ஏதோ வார்த்தை விளையாட்டில் இந்தியா ஈடுபட்டுக் கொண்டிருக்கிறதே தவிர, தமிழ்நாட்டுத் தமிழர்களின் தொப்புள்கொடி உறவு என்றோ, தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்தியாவின் ஒரு பகுதியில்தான் இன்னும் வாழ்கிறார்கள் என்றோ நினைக்கக்கூடிய மனப்பான்மை இந்திய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

ஒரு முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்து தமிழ்நாட்டின் உணர்வுகளை வெளிப்படையாகப் புலப்படுத்திய பிறகும்கூட - எல்லோருக்கும் பெப்பே என்கிற போக்கில் இந்தியா கண்ணாமூச்சி விளையாடிக் காட்டுகிறது.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல - இடிஅமீனையும் பிச்சை வாங்கச் செய்யும் ராஜபக் சேவை காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளின் நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இந்திய அரசு அழைக்கிறது என்றால், இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது!

தமிழர்களின் உணர்வை மிகக் கேவலமாக மதிக்கிறது - காலில் போட்டு மிதிக்கிறது என்று தானே பொருள்! வடவர் உணர்வு - தென்னவர் உணர்வு என்ற எரிமலை மீண்டும் வெடிக்க வேண்டும் போலும்!

எதற்கும் ஓர் அளவு உண்டு. இந்திய அரசு உலகத் தமிழர்களின் உணர்வை மிகவும் சோதிக் கிறது.

திருப்பத்தூர் மாநாட்டில் நிறைவுரை ஆற்றிய தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி அவர்கள், இந்திய அரசின் போக்கைக் கடுமையாக விமர்சித் துள்ளார். அதில் உள்ள நியாய உணர்வை பல்லா யிரக்கணக்கில் கூடியிருந்த பொதுமக்கள் புரிந்து கொண்டனர்.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசில் - வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் நலனுக்காக ஒரு துறை அமைச்சகத்தை ஏற்படுத்தவேண்டும் என்கிற தீர்மானம் முக்கியமானது - திருப்பம் தரக் கூடியதுமாகும். அப்படி அமைத்தால் அது ஒன்றும் புதிதும் அல்ல. பஞ்சாப், கேரள மாநிலங்களில் அத்தகைய ஒரு துறை ஏற்கெனவே இருக்கிறது. அதனைச் சுட்டிக்காட்டித்தான் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் இதனைக் கவனத்தில் எடுத்துக்கொள் வார் என்று கருதுகிறோம்.

திபெத் உரிமைக்காக சீனாவில் மூன்று அமெரிக்கர்கள் போராடினார்கள்; அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்றவுடன் அமெரிக்கா துடிக் கிறது - சீனாவை எச்சரிக்கிறது - சீனாவும் உடனே கைது செய்யப்பட்ட அமெரிக்கர்களை விடுதலை செய்கிறது - ஆனால், தமிழர்கள் பிரச்சினையில் இந்தியா எப்படி நடந்துகொள்கிறது?

லண்டனில் வாகனம் ஓட்டும் சீக்கியர்கள் தலைப்பாகை அணியவேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தால், அந்த சீக்கியர்களுக்காக இந்திய அரசு வக்காலத்து வாங்குகிறது.

ஒரு தலைப்பாகைக்காகக் குரல் கொடுக்கும் இந்தியா - தமிழர்களின் தலைகள் எல்லாம் போகின் றனவே - அதற்காகக் குரல் கொடுக்க ஏன் மறுக் கிறது - தலையைக் கொய்கின்ற கொடுங்கோல னுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கிறது?

இந்திய அரசின் மீதுள்ள கோபக்கனலை தமிழ் நாட்டில் உள்ள மக்கள் காங்கிரசிடம் காட்டுகி றார்கள் என்ற அரசியலைக் கூடப் புரிந்துகொள் ளாமல் இருக்கிறதே மத்திய அரசு.

அதையும் தாண்டிய தமிழர்கள்மீதான வெறுப் புணர்வு அவர்களை ஆட்டிப் படைக்கிறது என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியுள்ளது - தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ் தமிழர்களாவது இந்த நிலையை அகில இந்தியத் தலைமைக்கு எடுத்துச் சொல்ல வேண்டாமா?

No comments:


weather counter Site Meter