தொடக்கத்தில் மனு தர்மம், வருணதர்மம், ஆசா ரம், ஆகமம் சாத்திரம் என் னும் சகதியில் உருண்டு புரண்டு கிடந்த இவர், பிற்காலத்தில் தெளிவு பெற்று, இந்தப் பார்ப்பனீயப் பாழும் சாக்கடையிலிருந்து, தாம் வெளியேறியது மட்டுமல்லா மல், மற்றவர்களையும் கரை சேர கருத்து சூடத்தை வழங்கிய ஒப்பிலா மணியாக ஒளி வீசினார்.
சாதியிலே, மதங்களிலே
சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே
கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானத்து
அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே நீர்
அழிதல் அழகல்லவே!
என்று உலக மக்களுக்கே கூட ஒளிப்பாதை காட்டினார். உருவ வழிபாடு செய்து கடந்த மக்கள் மந்தையிலே ஒளி வழிபாடு என்ற உருவமற்ற ஒன்றை வெளிச்சமாகக் காட்டி ஆயிரம் ஆயிரம் காட்டுவிலங் காண்டித்தனத்திற்கு மூடு விழா நடத்தினார் - அந்த வகையிலே அது அக்கால கட்டத்திலும் புரட்சிதான்.
அதைக்கூடப் பொறுக்க மாட்டாமல்தான் அவரது மரணம் ஒரு சதிப் பின்னலில் நிகழ்ந்திருக்கிறது.
எந்த உருவ வழிபாடு கூடாது - ஒளி வழிபாடு தான் தேவை என்று அருள் பிர காசர் செயல்படுத்தினாரோ, அவர் உருவாக்கிய சத்திய ஞான சபையிலே பார்ப்பனப் புரோகிதன் உள்ளே புகுந்து, இந்து மத உருவ வழிபாடு களை நடத்தி, வள்ளலாரின் வேட்கையைச் சுட்டுப் பொசுக் கினான்.
நீண்ட கால போராட்டத் திற்குப் பிறகே மானமிகு கலைஞர் ஆட்சியில் அந்தப் புரட்டன் வெளியே தள்ளப்பட்டு அடிகளாரின் ஆசை நிறை வேற்றப்பட்டது.
ஹிந்து மகா சமுத்திரத் திற்குள் மூழ்கி முத்தெடுக்க முனைந்திருக்கும் சோ ராம சாமி போன்ற பார்ப்பனர்கள், இராமலிங்கனாரின் கடைசி காலச் சிந்தனைகளைக் காயடித்து தொடக்கத்தில் அவர் கூறியதை எடுத்துக்காட்டி வழக்கம்போல வரலாற்று உண்மைகளுக்குமேல் காவிச் சாயம் பூசக் கிளம்பியுள்ளனர்.
ராமலிங்கத்தின் புலமை யும், அறிவும் பலரையும், கவரத் தொடங்கியது. மனு முறை கண்ட வாசகம் என்ற நூலையும் அவர் எழுதினார் (துக்ளக், 22.9.2010) என்று சோ குறிப்பிட்டுள்ளார்.
இதே மனு நூலைப் பற்றி பிற்காலத்தில் வடலூரார் என்ன எழுதியுள்ளார்?
மயிலாடுதுறை முன்ஷீப் வேதநாயகம் பிள்ளை (1826-1889) எழுதிய நீதி நூலுக்கு இராமலிங்கனார் கொடுத்த சாற்றுக் கவியில் மனு நூலைப்பற்றி என்ன சொல் கிறார்?
வேதநாயகம் படைத்த இந்த நீதி நூலுக்கு முன் மனுநீதி எல்லாம் வெறும் கயிற்று நூலே என்று பாடி யுள்ளாரே!
இதற்குப் பிறகும் சோக் கள் கயிறு திரிப்பதை என் னென்பது!
- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101005/news04.html
1 comment:
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையே இருக்கும் நம்பிக்கையில் எந்த இடைத்தரகருக்கும் வேலையில்லை, வேண்டாம் என்று கூறிய ராமலிங்க அடிகளாரின் கூற்றை பொய்யாக்கும் விதத்தில் அந்த வடலூர் மடலாயத்தை சேர்ந்தவர்களும், இன்னும் இதர இந்து கோயில்களிலும் அவரை சித்தராகவும் பாவித்து பார்ப்பனராலேயே புரோகிதம் பண்ணப்படுகிறது. இது அவரை பின்பற்றுவர்களே அவருக்கு செய்யும் துரோகம் செய்வது போன்ற செயலாகும். இத்தனைக்கும் அவரை பார்ப்பனர்கள் பச்சை கற்பூரம் வைத்து கொளுத்தியதாகவும் தகவல் உண்டு, இது வெகுகாலமாக சொல்லப்படும் தகவல். இன்றைக்கும் அவருடைய மரணம் சந்தேக மரணமாகத்தான் அன்றைய காலத்திலேயே ஆங்கிலேய அரசின் காவல் துறை முதல் தகவல் அறிக்கை பதிவேட்டில் பதியப்பட்டுள்ளது. இணையத்தில் அதன் அறிக்கைக்கான அசல் ஆதாரம் உள்ளது.
Post a Comment