Pages

Search This Blog

Thursday, October 21, 2010

விழாக் கோலம் பூண்டது திருப்பத்தூர்! மேடையையும், பந்தலையும் பார்த்து வியக்கும் மக்கள் கூட்டம்! கொடிக் காடானது நகரம்!

கழகக் கொடி ஒட்டும் கழகக் காளையர்கள்
பிரம்மாண்டமான மாநாட்டு பந்தல்
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் சுவரெழுத்து, 500-க்கும் மேற்பட்ட பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளது நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. மாநாட்டுத் தலைவர் கே.சி. எழிலரசன் தலைமை யில் தோழர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகின்றனர். துண்டறிக் கைகள் அச்சிட்டு, நகரின் பல்வேறு இடங்களில் வழங்கியும், நிதி வசூல், விடுதலை சந்தா சேர்ப்புப் பணியிலும் மும்முரமாய் ஈடுபட்டு வருகிறனர்.

நகர் முழுவதும் கொடிகள் கட்டப் பட்டு திருப்பத்தூர் நகரமே கொடிக் காடாய் விளங்குகிறது மேடை அமைக் கும் இறுதிக்கட்ட பணிகள் வேக வேகமாய் நடைபெறுகின்றன. மேடை யும் பந்தலும் பேருந்து நிலையத்தின் எதிர்புறம் அமைக்கபட்டுள்ளதால் பந்தலின் அமைப்பையும் அழகையும் மக்கள் வியந்து ரசித்து பார்த்து செல் கின்றனர்!

மாநாட்டின் வெற்றி!

தமிழர் தலைவரின் பாராட்டே நமது குறிக்கோள் என்று ஊண் ,உறக்கம் இன்றி இளைஞர்கள் இரவு பகலாக மாநாட்டுப் பணியினை செய்கின்றனர் புல்லாநேரி குமார் தலைமையில் திருப்பதி, பழனிச்சாமி, சிவகுமார் தோழர்களும் ஆட்டோ பாண்டியன் சத்தியமூர்த்தி, பெருமாள், தமிழரசன், கலையரசன், விக்னேஷ், பிரபு, குமரேசன், முருகன், பழனி, மதி யழகன், ரமேஷ், ஆனந்தன், அசோகன் உள்ளிட்ட தோழர்கள் காகிதக் கொடிகள் கட்டுவது, துண்டறிக்கை அளிப்பது போன்ற மாநாட்டுப் பணிகளில் முழு வீச்சில் செயலாற்றிக் கொண்டு வருகின்றனர்.

இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? என்ற வீர கர்ச்சனையோடு, மாநாட்டு வெற்றியை வென்றெடுக்க மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மண்டல செயலாளர் பழ. வெங்கடா சலம், மாவட்ட செயலாளர் க.மகேந் திரன், மாநில ப.க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், மேனாள் மாவட்ட செயலளர் பழ.பிரபு, மாவட்ட துணைச் செயலாளர் எம்.கே.எஸ். இளங்கோவன், மாவட்ட இளைஞ ரணி தலைவர் வி.ஜி. இளங்கோ, அண்ணா அருணகிரி, கனகராஜ், ஆசி ரியர் வையாபுரி காளிதாஸ் உள்ளிட்ட தோழர்கள் மாநாட்டு பணியாற்றி வருகின்றனர்.

கலைஞர் தொலைக்காட்சியில்...

புதன்கிழமை முதல் கலைஞர் தொலைக்காட்சியிலும் உள்ளூர் தொலைக் காட்சிகளில் ஆடியோ-வீடியோ மாநாட்டு விளம்பரம் திருப் பத்தூர், கிருட்டினகிரி, ஊற்றங்கரை போன்ற பகுதிகளில் ஒளிபரப்பப் பட்டு வருகிறது. நடக்கப்போவது மண்டல மாநாடா? மாநில மாநாடா? என்று மக்களை வியப்பில் ஆழ்த்தும் அளவுக்கு அவ் வளவு சிறப்பாக பணிகள் உற்சாகத்து டன் நடைபெற்று வருகின்றன.

மாநாட்டின் சிறப்பான ஏற்பாடு களை கவனித்து வரும் பெரியார் பெருந் தொண்டர்களும், கழக ஆதரவாளர் களும் ஆர்வத்தோடு செயல்படுகின்றனர்.

தமிழர் தலைவரை சோலையார் பேட்டை அய்யா சிலை அருகே 100 ஆட்டோ, 100 நான்கு சக்கர வாகனங் கள், 100-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களில் தோழர்கள் வரவேற்ப தென முடிவு செய்யப்பட்டுள்ளது.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்குத் தோழர்கள் தனி வாக னங்களில் பங்கேற்பதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

No comments:


weather counter Site Meter