Pages

Search This Blog

Friday, October 29, 2010

இடது... சாரி!

சபரிமலைக்கு இயக்கப் படும் மாநில அரசு போக்கு வரத்துக் கழகப் பேருந்து களில் சுவாமியே சரணம்! என்றோ, அம்மே நாரா யணா என்றோ எழுதிடத் தடையேதும் இல்லை என்று கேரள மாநிலப் போக்கு வரத்துத் துறை அமைச்சர் ஜோஸ் தெற்றியல் தெரி வித்துள்ளார் என்ற செய்தி ஏடுகளில் வெளிவந்துள்ளது.

இதன் பொருள் என்ன?

இவ்வாறு எழுதக் கூடாது என்ற சரியான ஒரு நிலை எடுத்த காரணத்தால், சங் பரிவார்க் கூட்டத்தின் எதிர்ப்புக் காரணமாக, முடிவு மாற்றப்பட்டு விட்டது என்பதுதானே!

மதச் சார்பின்மைபற்றி வாய் நீளமாகப் பேசும் இடது சாரி ஆளும் ஒரு மாநிலத் தின் சிந்தனையும், போக்கும் எந்த நிலையில் உள்ளன என்பதுதான் முக்கியம்.

மற்ற மற்ற மதக்காரர் களும் இந்த நிலையைப் பின்பற்றலாமா? பின்பற்ற மாட்டார்களா? பகுத்தறிவு வாதிகள் தங்கள் கருத்து களை அரசுப் பேருந்துகளில் எழுதிட அனுமதிக்கப்படு வார்களா என்ற கேள்விகள், நியாயமாக -உரிமையின் அடிப்படையில் எழத்தானே செய்யும்?

அத்தகையவர்களுக்கும் மார்க்சிஸ்ட் ஆட்சி பச்சைக் கொடி காட்டுமா என்பதை அறிந்துகொள்ள விரும்புகி றோம்.

ஆர்.எஸ்.எஸ்., எதிர்ப்புக் குரல் கொடுத்தால், அதற்கு ஒரு மார்க்சிஸ்ட் அரசு பணிந்துவிடவேண்டுமா? அப்படியானால் பா.ஜ.க. - சங் பரிவார்களின் மதவாதத்தை இந்திய அளவில் எதிர்ப்ப தாகக் கூறுவதில் என்ன பொருள் இருக்க முடியும்?

சபரிமலைக் கோயிலில் மகரஜோதி என்பது அசல் பித்தலாட்டம் - கேரள மாநில மின்வாரியத்தைச் சேர்ந்தவர் கள் பொன்னம்பல மேட்டில் இருந்து சூடத்தைக் கொளுத்திக் காட்டி செயற் கையாக ஜோதியை அதா வது வெளிச்சத்தைக் காட்டு கிறார்கள் என்று கேரள மாநிலப் பகுத்தறிவாளர்கள் நிரூபித்துவிட்டனர்.

இந்த உண்மையை கேரள மாநில முதலமைச் சராக இருந்த ஈ.கே. நயினார் அவர்களைச் சந்தித்து ஜோசப் எடமருகு (இந்தியப் பகுத்தறிவாளர் அமைப்பின் தலைவர்) சொன்ன பொழுது, நீங்கள் கூறுவது உண்மை தான்; ஆனாலும், அதில் தலையிடமாட்டோம்! என்று சொன்னாரே - இதுதான் மார்க்சிய அரசின் நிலைப் பாடா?

தற்போதைய கேரள மாநில அரசின் அறநிலையத் துறை அமைச்சர் ஜி. சுதா கரன் கூட மகரஜோதி பொய் தான் என்று ஒப்புக் கொண்டுவிட்டாரே! அதனை கோயில் அர்ச்சகர் கே. மகேஸ்வரரும் வழி மொழிந்தாரே!

ஆயமயசய ஏடையமமர ளை ஆய-ஆயனந, ளயல ஞசநைளவ ஆளைவநச (Makara Vilakku is Man-Made, say Priest Minister (The New Indian Express, 29.5.2008)) என்று செய்தி வெளியிட்டதே!

பொய்யென்று பச்சை யாகத் தெரிந்துகொண்ட பிறகும் அதற்குப் பச்சைக் கொடியா?

ஆட்சி, பதவி என்று வந்துவிட்டால், மார்க்ஸிய மாவது - மண்ணாங்கட்டியா வது - எல்லாம் சமரசம் தானோ!

- மயிலாடன்
http://viduthalai.periyar.org.in/20101028/news03.html

No comments:


weather counter Site Meter