Pages

Search This Blog

Saturday, October 30, 2010

சமூக வலைத்தளம்(Social Networking Site) ஒன்றில் நடந்த விவாதம்

சமுக வலைத்தளம் ஒன்றில் பின்வரும் செய்தி பதியப்பட்டு இருந்தது

இதோ அந்த செய்தி :
கா.சு. பிள்ளை கேட்கிறார்
தமிழர்கள் தீபாவளி கொண்டாடலாமா?தீபாவளிப் பண்டிகை தமி ழருக்கு உரியதாகத் தோன்றவில்லை. நர காசுரன் என்ற ஓர் அசு ரனைக் கொன்றதற்காக மகிழ்ச்சி அடைதலைக் குறிப்பதற்காக அப்பண் டிகை வழக்கத்தில் கொண் டாடப்படுகிறது. அது புராண மதத்தைச் சார்ந்தது. அசுரர் என்பதை இன்னார் என்று தீர்மானித்தல் கடினமாயினும், சரித்திர ஆராய்ச்சியாளர் ஆரியர் பகைவரே அசுரர் எனப் பட்டார் என்பர். ஆரியர் பகைவருள் ஆதியில் திரா விடர்களும் அடங்குவர். ஆதலில் அசுரர் கொலைக் காகத் தமிழர் மகிழ்ச்சி அடைதல் ஏற்றதன்று என்ப.

- தமிழ் அறிஞர் கா. சுப்பிரமணியன் பிள்ளை அவர்கள் எழுதிய தமிழர் சமயம் எனும் நூல் பக்கம் 62

கா.சு. பிள்ளை பக்தர்தான் - சைவ மெய்யன் பர்தான். ஆனாலும், தீபாவளி கொண்டாடக் கூடாது என்கிறார் - பக்தர்களே சிந்திப்பீர்!


மேற்கண்ட அந்த பெட்டி செய்திக்கு நண்பர் ஒருவர் கேட்டார் "சரி...அவரை போல நெற்றியில் பட்டை அடித்து சாதி பெயரை வைத்து கொள்வது பற்றி உங்கள் கருத்து?"

இதோ அவருக்கு நான் அளித்த பதில் இந்த பதில் :

சாதி பெயரை அந்த காலத்தில் குறிப்பிடுவது மரியாதையாக கருதப்பட்டது .பெருபாலான தலைவர்கள் அந்த காலத்தில் அவ்வாறே அழைக்க பட்டனர்.
ஏன் பெரியாரையே மற்றவர்கள் நாயக்கர் என்றும்,திரு.வி.வை முதலியார் என்றும்,தியாகராயரை செட்டியார் என்றும்,ஏன் அண்ணாமலை ...பல்கலை கழகத்தை தோற்றுவித்த அண்ணாமலை அவர்களையும்,அவரின் மகன் முத்தையாவை யும் செட்டியார் என்றும் தான் இன்றும் அலுவலக குறிப்பில் கூட குறிப்பிடுகிறார்கள். இதை போல இன்னும் பலர் அவ்வாறே அழைக்க பட்டனர்.இவ்வாறு அழைக்க பட்டபோது சில பெயர்கள் உதாரணதிற்கு கா. சுப்பிரமணியன் பிள்ளை யை கா.சு பிள்ளை என்றே அழைத்தே சுப்பிரமணியன் பிள்ளை,கா.சு பிள்ளை யாக பல பேருக்கு அறிமுக படுத்த பட்டுள்ளார்.எனவே மற்றவர்களுக்கு சுப்பிரமணியன் பிள்ளை என்றால் தெரியாது அல்லது புரியாது .

இன்றைய சூழலில் தமிழ்நாட்டில் அரசியல் வாதிகள் சாதி பெயரை போட்டுகொள்வதற்கே யோசிக்கிறார்கள் அல்லது வெட்கப்படுகிறார்கள்.

மாறாக மற்ற மாநிலங்களில் அரசியல் தலைகளை எடுத்துகொண்டால் ரெட்டி என்றும்,கவுடா என்றும்,நாய்டு என்றும்,ஜோஷி என்றும்,சர்மா என்றும் ...இன்னும் பல சாதி பெயரை இன்றும் பயன் படுத்துகின்றனர்.

ஆனால் தமிழகத்தில் இன்று அத்தகைய நிலை இல்லை.

பட்டை யார் தான் அடிக்கவில்லை பார்ப்பான் முதல் பறையர் வரை அடித்து கொள்ளுகிறார்கள்.
அவர்களின் நெற்றியில் உள்ளதை பொய் நாம் அழிக்க முடியாது .அது முறையும் அல்ல.

இங்கே காசு பிள்ளை பயன்படுத்த பட்டதே அவர் பக்தாரக இருந்தும் தீபாவளியை கொண்டாட வேண்டாம் என்று சொல்லி இருக்கிறார் அப்படியாவது பக்தர்கள் கொஞ்சம் சிந்திப்பார்கள் என்பதற்காக தான்.

ஒருவன் ஆத்திகராய் இருந்தாலும் அவருடைய கருத்து நம் கருத்தோடு ஒன்றும் பொது அதை ஆதரிப்பது பெரியார் காலத்திலிருந்தே கடை பிடிக்க கூடிய ஒன்று.
சோவும்,சங்கராச்சாரியும் தீபாவளி கொண்டாட வேண்டாம் என்றால் அதையும் ஆதரித்து எழுதுவோம்.அதனால் அவர்களை முழுமையாக ஏற்று கொண்டுவிட்டோம் என்று சொல்ல முடியாது.அடிப்படை கொள்கைகளில், சிலர் ஆதரிக்கும்போது அதை ஆதரிப்பதும்,முரண்படும்போது எதிர்ப்பதும் அப்படித்தான்.இத்தைகைய முடிவுகள் கொள்கையை அடிப்படையாக கொண்டதே தவிர தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை பொருத்து அல்ல.அரசியலிலும் இதே நிலை பாடுதான். ஆகவே இதை புரிந்து கொள்ளாத ,புரிந்து கொள்ள மறுக்கிற மக்களை பற்றி கவலை இல்லை.எங்கள் பின்னால் தான் மக்கள் வர வேணுமே தவிர பாமர மக்களுக்காக கொள்கையில் சமரசம் செய்து கொண்டு அவர்கள் பின்னால் செல்பவர்கள் அல்ல நாங்கள்.

அனைத்து சாதிகார்களும் அர்ச்சர்கர் உரிமையை கூட ஆதரிக்கிறோம் எதற்க்காக ? உதாரணத்திற்கு நான் நாத்திகன் ,என் சகோதரன் ஆத்திகன் என்று வைத்து கொள்வோம். என் சகோதரனை ஒருவன் நீ தீண்ட தகாதவன் கோவிலுக்குள் வராதே நீ அர்ச்சனை செய்தால் கடவுள் தீட்டாகி விடுவார் வெளியே நில் என்று கூறினால் நான் நாத்திகனாய் இருந்தாலும் கோபம் வரும் தானே எதற்காக அவனை உள்ள விடமாட்டேன் என்கிறிர்கள் என்று கேட்பேன் தானே.அது தான் சுயமரியாதை .

அந்த சுயமரியாதை கொள்கை அடிப்படையிலே இந்த அனைத்து சாதியினரும் அரச்சர்கர் சட்டத்துக்கு ஆதரவும் போராட்டமும்.

பார்பனர்கள் உச்சாணி கொம்பாக எதன் அடிப்படியில் இருக்கிறார்கள்.இந்த கடவுளையும்,கோவிலையும் வைத்து தானே?அந்த கடவுளை வைத்து தானே தானை உயர் சாதியாக பிரம்மா படைத்தார் என்கிறார்கள் அந்த இழிவும் ஒழிக்க பட்டு விடுமே.

நாளைக்கே அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் உரிமை கிடைத்து விட்டால் உள்ளே மணி ஆட்டுபவர் எல்லாம் நம்மாள் ஆதலால் கோவிலுக்கு செல்லுங்கள் என்று பிரச்சாரம் செய்ய மாட்டோம் .

அப்போதும் கடவுள் இல்லை .கடவுள் இல்லவே இல்லை கடவுளை கற்பித்தவன்  முட்டாள் பரப்பியவன் அயோக்கியன் வணங்குபவன் காட்டு மிராண்டி என்று தான் சொல்லுவோம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சர்கர் உரிமை கிடைத்து விட்டால் நாளைக்கு பார்பனர்கள் எல்லாம் ஒன்றும் கூடி கடவுளுக்கு சக்தி இல்லை.யாரும் கோவிலுக்கு செல்லாதிர்கள் என்று ஒவ்வொரு கோவிலின் வாசலில் நின்று பிரசாரம் செய்ய ஆரம்பித்து விடுவார்கள் .

ஆகவே பார்பனர்களும் தி.க வினுடைய கொள்கைகளை கடை பிடிப்பவர்கள் ஆகி விடுவார்கள் .
அவர்கள் கடவுள் இல்லை என்று சொல்வது அவர்களின் இன நலத்திற்காக இருக்கும்.நாங்கள் சொல்வது திராவிட மக்களின் முன்னேற்றதிக்கானதாக இருக்கும்.

இது தான் பெரியாரியலின் பால பாடமும் கூட.இத்தைகைய புரிதல் என்பது படித்த மேதாவிகளுக்கு கூட கிடையாது பிறகு எப்படி பாமரர்களுக்கு இருக்கும்.இதனால் தான் நாங்கள் பகுத்தறிவாளர்கள் என்று சொல்கிறோம்.ஏன் நாங்கள் எல்லாம் இல்லையா என்று கேட்பவர்கள் மேற்கண்ட புரிதல் கொண்டு இருக்கிறார்களா என்பதே என் கேள்வி?

வாழ்க பெரியார் ! வளர்க பகுத்தறிவு !

இது தான் நான் அளித்த பதில் .இதை இங்கே சொல்ல காரணம் இதை போல் புரிதல்  இல்லாத தோழர்களும்,பெரியோர்களும் உள்ளனர் என்பதற்காகவே .

நன்றி :அசுரன் திராவிடன்

No comments:


weather counter Site Meter