Pages

Search This Blog

Friday, October 15, 2010

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் அலகாபாத் தீர்ப்பு: பிரகாஷ் காரத் பேட்டி


பாபர் மசூதி அமைக்கப்பட்டிருந்த நிலம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் வழங்கியுள்ள தீர்ப்பு பற்றி ஃபிரண்ட் லைன் பத்திரிகைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் பேட்டி அளித்துள்ளார்.
கேள்வி: தீர்ப்பு பற்றி உங்கள் கருத்துகள் என்ன? அது கவலையளிக்கக்கூடியதாக இருக்கிறதா?
பதில்: 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதிலிருந்து, பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான வாய்ப்பு போய்விட்டது. நீதிமன்ற நடை முறைகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்பின் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறேம். இந்த வழக்கை எவ்வாறு தீர்த்து வைக்கிறோம் என்பது நாட்டின் ஜனநாயக மற்றும் மதச்சார்பின்மை அடித் தளத்தைச் சோதித்துப் பார்ப்பதாக இருக்கும். அதனால்தான் ராமர் கோவில் கட்டுவதென்பது நம்பிக்கை சம்பந்தப்பட்டது; இதை நீதிமன்றம் முடிவு செய்ய முடியாது என்ற இந்துத்துவா அமைப்புகளின் கருத்துகளை நாங்கள் நிராகரித் தோம். தற்போது இந்தப் பிரச்சினையில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு நீதியை வழங்கியுள்ளதா, இதுபோன்ற விவகாரங்களைத் தீர்ப்பதில் கடைப்பிடிக்கவேண்டிய அம்சங்கள் கடைப்பிடிக்கப்பட்டனவா மற்றும் மதச்சார்பற்ற, ஜனநாயகக் கோட்பாடுகள் நிலை நிறுத்தப்பட்டனவா என்பதையெல்லாம் நாம் பார்க்க வேண்டும்.

2.77 ஏக்கர் நிலத்தைப் பிரித்து இரண்டு பங்கை இந்து மனுதாரர்களுக்கும், மூன்றில் ஒரு பங்கை முஸ்லிம் மனுதாரருக்கும் லக்னோ பெஞ்ச் வழங்கியுள்ளதை சமரசத்திற்கான வழி என்றும், முழுமையான தீர்வை நோக்கிச் செல்வதில் முதல் படி என்றும் பொதுவாகச் சொல்லப்படுகிறது. அதேவேளையில், நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகள் நெருடலாக இருக்கின்றன. நிலம் யாருக்கு சொந்தம் என்பது தான் லக்னோ பெஞ்சின் முன்னிற்கும் வழக்கில் உண்மையான பிரச்சினை. இதற்கு உண்மையையும், ஆதாரங்களையுமே பெஞ்ச் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். நாலரை நூற்றாண்டு காலமாக இருந்து 1992 இல் இடிக்கப்பட்ட மசூதி குறித்த வழக்கின் தீர்ப்பு, ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கையை அடிப் படையாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ளது. இது ஆபத்தான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும்.

கேள்வி: நம்பிக்கையைப் பிரதான மாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட் டுள்ளதால், எத்தகைய முன்னுதார ணத்தை இந்தத்தீர்ப்பு ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

பதில்: சிலரின் மத நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு இதுபோன்ற பல கோரிக்கைகளும், சச்சரவுகளும் உருவாக இது வழிவகுக்கும். மதுரா மற்றும் காசியில் உள்ள இடங்களைத் தந்து விட வேண்டும் என்று விஸ்வ இந்து பரிசத் கேட்டுக் கொண்டிருக்கிறது. நிலம் தொடர்பான விஷயங்களை விட்டு விட்டு தங்கள் எல்லையைத் தாண்டித் தேவையில்லாமல் பல விஷயங்களை மூன்று நீதிபதிகளைக் கொண்ட பெஞ்ச் இணைத்துள்ளது. மசூதி கட்டப்பட்டுள்ள இடத்தில் ஏற்கெனவே கோவில் இருந்ததா, இல்லையா என்ற கேள்வியை அப்போதைய நரசிம்மராவ் அரசு, ஜனாதிபதி மூலம் உச்சநீதிமன்றம் முன்பு 1993 ஆம் ஆண்டில் நிறுத்தியது. அதை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. அத்த கைய முயற்சியை உச்சநீதிமன்றம் நிரா கரித்தது சரியானதுதான். நிலம் தொடர் பான வழக்கிற்கு உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்து அதை அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ பெஞ்ச் முன்னால் நிறுத்தியது.

கேள்வி: தற்போது நடந்துவரும் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்குகளில் இந்தத்தீர்ப்பு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

பதில்: பாபர் மசூதி இடிப்பு தொடர் பான வழக்குகள் ஏற்கெனவே நீர்த்துப் போயுள்ளன. குற்றப்பத்திரிகைகளும் அவ்வளவு வலுவாகத் தயாரிக்கப்பட வில்லை. இருந்தாலும், மசூதியை இடித்துத் தள்ளிய குற்றம் குறித்து சட்டம் முடிவு செய்யவேண்டும். எந்த அடிப்படையில் தனது தீர்ப்பை லக்னோ பெஞ்ச் வழங்கியுள்ளதோ, அதன்படி பார்த்தால் இடிக்கப்பட்ட வழக்கின் நீதிமன்ற செயல்பாடுகள் மீது பாதகமான தாக்கத்தையே இந்தத் தீர்ப்பு ஏற்படுத்தும்.

கேள்வி: குறிப்பிட்ட பகுதியினர் மத்தியில் கொண்டாட்டங்களும், வேறு சிலர் மத்தியில் விரக்தியும் ஏற்கெனவே காணப்படுகிறது. இதையே முன்னெடுத்துச் செல்வதுதான் சிறந்த தீர்வு என்று ஆளும் அரசியல் வர்க்கம் கருத்து சொல்கிறது...!

பதில்: லக்னோ பெஞ்ச் வழங்கி யுள்ள தீர்ப்பை பார்த்தால், இறுதி முடிவுக்காக இந்த விவகாரம் உச்சநீதி மன்றத்திற்குச் செல்லும். தனது இறுதித் தீர்ப்பை உச்சநீதிமன்றம் தரும்வரை, குறிப்பிட்ட பிரிவு மக்களோ அல்லது பிரச்சினையில் சம்பந்தப்பட்டுள்ள ஒரு தரப்போ எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கும்படி கோர முடியாது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சட்டவிதிகளின்படியே பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று பெரும்பாலான மக்கள் விரும்புகிறார்கள். சின்னச்சின்ன தீவிரவாதக்குழுக்களின் கோரிக்கைகள் பொது மக்களின் கருத்தைப் பிரதிபலிக்கவில்லை.

கேள்வி: நீதிமன்ற நடைமுறை களுக்குப்பிறகு இறுதியாக என்ன தீர்ப்பு வரும் என்று நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்?

பதில்: நில உரிமையாளர் யார் என்ற கேள்விக்கும், சச்சரவு குறித்து பதிவு செய்யப்பட்டுள்ள வரலாற்றைத் தீர்மானிக்கவும் மத நம்பிக்கை என்பதை தகுதியாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வாதத்தை உச்சநீதிமன்றம் மறுக்கவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
http://www.viduthalai.periyar.org.in/20101015/news07.html

No comments:


weather counter Site Meter