Pages

Search This Blog

Saturday, October 16, 2010

ரொம்பவே துள்ள வேண்டாம் ராமர் கூட்டம்! - மின்சாரம்

ராமன் ஜென்ம பூமி வழக்கில் தங்களுக்குச் சாதகமான தீர்ப்புக் கிடைத்து விட்டதையொட்டி மகிழ்ச்சியில் திளைத்து ஒருவருக்கொருவர் கேக் ஊட்டிக் கொள்கின்றனர் விஷ்வ ஹிந்து பரிஷத் தலைவர்கள். இந்த அமைப்பின் பொதுச் செயலாளர் ப்ரவின் தொகாடியாவுக்கு கேக் ஊட்டப்படும் காட்சி.

அயோத்தி தீர்ப்புப்பற்றி பார்ப்பன வட்டாரம் குதூகலிக்கிறது; சங்பரிவார் கும்பல் சதுராடுகிறது _ பா.ஜ.க., தலைவர்கள் ஒருவருக்கொருவர் கேக்குகளை ஊட்டிக் கொண்டு சிறுவர்கள் போல குதியாட்டம் போடுகிறார்கள்.

இந்த வரிசையில் துக்ளக் சோ ராமசாமி பூணூலுக்கு ஒரு முத்தம் கொடுத்துப் புளகாங்கிதம் அடைவதில் ஆச்சரியம் எப்படி இருக்க முடியும்?

இது மத்தியஸ்த தீர்ப்பு என்ற தலையங்கம் தீட்டியுள்ளார்.

சம்பந்தப்பட்ட இடம் ராமர் பிறந்த இடம்தான் என்று, இரண்டு நீதிபதிகள் கூறியிருப்பதுபற்றி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. ராமர் அங்கே பிறந்தார் என்று ஒரு நீதிமன்றத்தினால் எப்படிச் சொல்ல முடியும்? என்பது அந்தக் கேள்வி. உண்மைதான். இது நீதிமன்றத்தில் சாட்சியங்களின் அடிப்படை யிலோ, சட்ட ரீதியாகவோ முடிவு செய்யக்கூடிய விஷயம் அல்ல. ஆனால் ஒரு மதத்தினரின் நம்பிக்கை என்று கூறப்படுகிற விஷயம், திடீரென பிரச்சாரத்திற்காகவோ, வழக்கில் வெற்றி பெறுவதற் காகவோ எழுப்பப்பட்ட விஷயமா? அல்லது தொன்று தொட்டு அந்த மதத்தினரிடையே இருந்து வருகிற நம்பிக்கையா? என்பதை நீதிமன்றம் ஆதாரங்களின் அடிப்படையில், உறுதி செய்ய முடியும். அதைத்தான் இப்போது அலகாபாத் நீதிமன்றத்தின் மெஜாரிட்டி தீர்ப்பு செய்திருக்கிறது என்று வாதிட வருகிறார்.

நம்பிக்கை நீண்ட காலமாக இருந்து வந்தால், அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றால் அந்த நம்பிக்கை இந்து மதத்திற்கு மட்டுமே உள்ள தனி உரிமையா? அந்த நம்பிக்கை இஸ்லாமியர்களுக்கு இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ளக் கூடாதா? பிர்மாவின் நெற்றியிலிருந்து பிராமணன் பிறந்தான்; தோளிலிருந்து சத்திரியன் பிறந்தான்; இடுப்பிலிருந்து வைசியன் பிறந்தான்; பாதத்திலிருந்து சூத்திரன் பிறந்தான் என்பதுகூட இந்து மதக்காரர்களின் நம்பிக்கைதான்.

இது பார்ப்பனர்களின் நம்பிக்கை-யானால் அவர்களுக்கு அதில் வசதியும், மரியாதையும் அதிகமாக உண்டு. அதனை சூத்திரன் ஏற்றுக் கொண்டால் அவன் நிலை என்னாவது? பிறப்பிலேயே வேசி மகன் என்பதை ஒப்புக் கொண்டாக வேண்டுமே! நம்பிக்கை என்பதை அவரவர்களின் வசதியைப் பொறுத்து மாறாதா?

இந்தியாவில் வாழும் சிறுபான்மை மதத்தவர்கள் தங்கள் மதங்களை இந்தியமயமாக்கிக் கொள்ள வேண்டும். இந்துக் கடவுள்களான ராமனையும், கிருஷ்ணனையும் வணங்க வேண்டும் என்று சொல்பவர்கள் அடுத்த மதத்தவர்களின் நம்பிக்கைகளில் தலையிட்டவர்கள் ஆக மாட்டார்களா?

நம்பிக்கை என்ற வார்த்தையைப் பயன்படுத்தி இரு நீதிபதிகள் தீர்ப்புக் கூறிவிட்டார்கள் என்பதற்காக அந்த நம்பிக்கை என்பதற்கு சோ கும்பல் பட்டுப் பீதாம்பரமும், சிவிகையும் தயாரிப்பதைப் பார்ப்பனர் அல்லாதார் -_ சிறுபான்மையினர் உள்ளிட்டோர் புரிந்துகொள்ள வேண்டும்.

தொல்லியல் துறை ஆதாரங்களைக் காட்டுகிறார்களே _ இதுவரை பல தொல்லியல் துறைகள் ஆய்வு செய்து முரண்பட்ட தகவல்களைத் தெரிவித்-துள்ளன. எதை எடுத்துக் கொள்வது? தங்களுக்கு வசதிப் பட்ட அறிக்கையை மட்டும் லபக்கென்று கவ்விக் கொள்-வதுதான் உச்சிக்குடுமி தத்துவமோ!

கோத்ரா ரயில் விபத்து தொடர்பாக நீதிபதி பானர்ஜி கொடுத்த அறிக்கை தங்களுக்குச் சாதகமாக இல்லை என்றவுடன் இதே சோ ராமசாமி எப்படி எப்படியெல்லாம் கிண்டல் செய்தார்? பாபர் மசூதி இடிப்புத் தொடர்பாக நீதிபதி லிபரான் தலைமையில் அமைந்த விசாரணை ஆணையம் கொடுத்த அறிக்கையை எதிர்த்த இதே சோ அய்யர்வாள் எப்படி எப்படி-யெல்லாம் சண்டப் பிரசண்டம் செய்தார்?

சாதாரணமாக, ஒரு நீதி விசாரணையின் அறிக்கை என்றால், அதை சமர்ப்பிக்கிற நீதிபதி, சாட்சி-யங்கள் கூறியது என்ன? அதில் ஏற்கத்-தக்கது எது? _ ஏன்? நிராகரிக்கத்தக்கது எது? ஏற்கப்பட்ட சாட்சியங்கள் மூலம் தெரிய வருவது என்ன? என்பதைக் கூறி, தனது முடிவையும் கூறுவார். ஆனால் லிபரான் அவர்கள், தனது அறிக்கையில் அந்த மாதிரி எல்லாம் அவஸ்தைப்பட்டதாகத் தெரியவில்லை (துக்ளக் 9.12.2009) என்று தலையங்கம் தீட்டினாரா -_ இல்லையா?

லிபரான் ஆணையத்தின் அறிக்-கைக்கு சாட்சியங்கள் உண்டா என்று கேட்கிறார். அயோத்தி தீர்ப்பைப்பற்றிச் சொல்லும்போது நம்பிக்கை விஷ யத்துக்கு சாட்சியம் எதற்கு என்று உருட்டல் _ புரட்டல் கேள்வியை எழுப்புகிறார். சூத்திரன் கொலை செய்தால் மரண தண்டனை; பார்ப்பான் கொலை செய்தால் தலையை முண்டிதம் செய்துவிட வேண்டும் (கொலை செய்யப்பட்டவனின் உயிரும் கொலை செய்த பார்ப்பானின் மயிரும் சமம்!) என்பது தானே அவாளின் மனுதர்மம்!

அந்தப் புத்தி இன்று வரை போகவில்லையே! அலகாபாத் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கொண்டு நாட்டில் இன்னும் என்னென்ன தெருப் புழுதிகளும், கார்ப்பரேஷன் குப்பைத் தொட்டிகளும் பூகம்பமாகப் புறப்படப் போகின்றனவோ தெரியவில்லை!

காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில் புத்தர் கோயில் என்பதற்கு நம்பிக் கையல்ல; ஆதாரமே இருக்கிறது. காஞ்சி மீனாட்சி கோயில் தாரா கேசரி ஆலயம் என்பதற்கும் ஆதாரம் இருக்கிறது. மதுரையையடுத்த யானை மலைக் குகைகளில் சமண முனிவர்களின் படுக்கைகளும், பிராமி எழுத்துக்களைக் கொண்ட கல்வெட்டுகளும் உள்ளன. இப்பொழுது அங்கு நரசிங்கப் பெருமாள் கோயில் உள்ளது. திருப்பதி கோயில் புத்த விகார் என்பதை ருசுப்படுத்தி நூலே வெளி வந்துவிட்டது. அய்யப்பன் கோயிலும் அப்படியே!

ராமன் கோயிலை இடித்து பாபர் மசூதி கட்டினார் என்று தீர்ப்பு வாங்கி விட்டதானது பல இந்துக் கோயில்களை இடிக்க வேண்டிய அவசியத்திற்கு அவர்களே அடிக்கல் நாட்டி விட்டார்கள். உப்பு தின்ற அளவுக்கு தண்ணீர் குடித்துத்தான் ஆக வேண்டும் சோ கூட்டம் ரொம்பத் துள்ள வேண்டாம்!

குறிப்பு: அய்யப்பன் கோயில் புத்தர் கோயில் என்பதற்கு ஜோசப் எடமருகு எழுதிய கட்டுரை இதே பக்கத்தில் தனியே வெளியிடப்பட்டுள்ளது. அது போலவே திருப்பதி வெங்கடாசலபதி கோயிலும் புத்த விகாரமே என்பதற்கு ஆதாரமாக _ மராட்டியத்தைச் சேர்ந்த டாக்டர் கே. ஜமனதாதாஸ் F.R.C.S என்பவர் எழுதியுள்ள Tirupati Balaji was a Buddhist Shrine எனும் நூலி லிருந்து ஒரு பகுதி தனியே வெளியிடப் பட்டுள்ளது.

இவை நம்பிக்கையின் அடிப்படை-யில் அல்ல; ஆதாரங்களின் _ ஆவணங்-களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்-டுள்ளன. இக்கோயில்களை மீண்டும் புத்த விகார்களாக மாற்ற குரல் கொடுக்க வேண்டியது அவசியம்தானே!

No comments:


weather counter Site Meter