Pages

Search This Blog

Wednesday, October 6, 2010

பா.ம.க.வின் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நம்பமாட்டார்கள் முதலமைச்சர் கலைஞர் சாட்டை

பா.ம.க.வின் ஆர்ப்பாட் டங்களை பொது மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள், நம்பமாட்டார்கள் என்று பா.ம.க. குறித்த கேள்விகளுக்கு முதல் வர் கலைஞர் மேற் கண்டவாறு பதிலளித் துள்ளார்.
முதல்வர் கலைஞர் அவர்கள் இன்று முர சொலியில் அளித் துள்ள பதில்கள் வரு மாறு:
கேள்வி: ஜாதி வாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தி பா.ம.க; ஆர்ப்பாட்டங்களும், பொதுக்கூட்டங்களும் நடத்தப் போவதாக அறிவிப்பு கொடுத் திருக்கிறார்களே?
கலைஞர்: ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது திராவிடர் இயக்கமான தி.மு.க. வுக்கோ அல்லது தி.மு.க. ஆட்சிக்கோ உடன் பாடில்லாத ஒன்று என்பதுபோல கற்பனை செய்துகொண்டு, கிளர்ச்சிகளில் ஈடு பட்டு, தாங்கள்தான் அதற்கு மூலவர்கள் என்று சொல்லிக் கொள் ளும் போக்கினை யார் கடைப்பிடிக்கிறார்கள் அல்லது எந்தக் கட்சி கடைப்பிடிக்கிறது என் பதை மக்கள் நன் றாகவே அறிவார்கள்.
2011, ஜூன் திங்களில் ஜாதி வாரிக் கணக் கெடுப்பு தொடங்கும் என்று மத்திய அரசே அறிவித்திருக்கிறது. திருமதி.சோனியா காந்தி அம்மையார் அவர்களும் எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் அதுபற்றி உறுதிபடத் தெரிவித்திருக்கிறார். இந்தச் செய்திகள் எல்லா ஏடுகளிலும் வெளிவந்திருக்கின்றன.
இதற்கிடையே, தி.மு.க. ஆட்சியை எதிர்த்து ஏதாவது கிளர்ச்சி செய்யவேண் டும்; ஆர்ப்பாட்டம் நடத்தவேண்டும் என்று எண்ணுகிறார் கள். மக்களைத் தூண்டி விடுகின்ற தோரணை யில் வெளியிடுகிற கிளர்ச்சி, அறிவிப்பு எதனையும் - எந்த மக் களைக் கவர்வதற்காக செய்யப்படுகின்றதோ - அந்த மக்களே, அதன் உள்நோக்கத்தை உணர்ந்து நடந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிரம்ப இருக்கிறது.
கேள்வி: இடஒதுக் கீடு கோரி வன்னியர் சார்பாக நடத்தப்பட்ட போராட்டத்தில் உயிர் நீத்த குடும்பத்தினர்க்கு நீங்கள் செய்த உத வியை எல்லோரும் மறந்து விட்டார்களே?
கலைஞர்: இட ஒதுக்கீடு கோரி, 1987 ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் அ.தி. மு.க. ஆட்சியில் உயிர் நீத்த 24 பேரின் குடும் பங்களுக்கு; 11 ஆண்டு கள் கழித்து கழக ஆட் சியில்தான், 1998இல் தலா 3 இலட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.
அத்துடன், 24 தியா கிகளின் வாரிசுகளுக் குக் குடும்ப ஓய்வூதிய மாக மாதம் ஆயிரத்து 500 ரூபாய் அனுமதிக் கப்பட்டது. அந்தக் குடும்ப ஓய்வூதியமும் மீண்டும் கழக ஆட்சி யில்தான், 2006 நவம்பர் முதல், மாதம் 1,500 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
கழக அரசு உதவி கள் செய்வதையும், சலுகைகள் வழங்குவ தையும் கடமையாகக் கொண்டு ஆற்றி வரு கிறது. இதனை சிலர் மறந்திருக்கலாம்; மன சாட்சி உள்ள எவரும் எளிதில் மறந்துவிட முடியாது. மறந்து விட்டார்கள் என்பது உண்மையானால்; மறந் தோர் செயலை நாமும் மறப்போம்!
http://www.viduthalai.periyar.org.in/20101005/news01.html

No comments:


weather counter Site Meter