Pages

Search This Blog

Friday, October 22, 2010

இந்தியா டுடே விமர்சனத்துக்கு ஒரு மறுப்பு எம்.சி. ராஜா - உண்மையான வரலாற்றுப் பின்னணி

முனைவர் பேராசிரியர்
ந.க. மங்களமுருகேசன்

மயிலை சின்னத்தம்பி பிள்ளை ராஜா என்ற பெயர்தான் எம்.சி. ராஜா என்று அறியப்பட்டிருந்தது. 1883 ஆம் ஆண்டு ராஜா அவர்கள் மயிலை சின்னத்தம்பி பிள்ளையின் மகனாகப் பிறந்தார்.
சிலர் குறிப்பிடுவதுபோல், அவர் செயின்ட் தாமஸ் மவுன்டில் பிறக்கவில்லை. மயி லாப்பூரில் அல்லது அந்நாளில் மயிலாப் பூருடன் சேர்ந்திருந்த ராயப்பேட்டையில் பிறந்து, பின்னர் செயின்ட் தாமஸ் பகுதிக்குக் குடியேறினார். ராஜா அவர்களின் தந்தை சின்னத்தம்பி பிள்ளை ஏழ்மையான தாழ்த்தப்பட்ட வகுப்பினர். லாரன்ஸ் அசைலத்தில் மேனேஜராகப் பணியாற்றியவர். ராயப்பேட்டை வெஸ்லி மிஷன் உயர்நிலைப்பள்ளியில், வெஸ்லி கல்லூரியில் பயின்று சென்னை கிறித் துவக் கல்லூரியில் பட்டம் பெற்று பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார்.

அரசியலில் பங்கேற்று செங்கல்பட்டு டிஸ்டிரிக்ட் போர்டு எனப்படும் செங்கல் பட்டு மாவட்டக் கழகத் தலைவரானார். ராஜா அவர்களை 1916 இல் ஆதிதிராவிட மகாஜன சபை செயலாளராக இருந்த வரை ஈர்த்தது நீதிக்கட்சிதான். சென்னை சட்டமன்றத்திற்கு 1920 இல் தேர்தல் நடைபெற்றபோது முதல் தேர்தலில் 1920 நவம்பரில் நீதிக்கட்சி வேட்பாளராக நின்றுதான் சட்டமன்றம் சென்றார். நீதிக் கட்சியின் துணைத் தலைவராக சட்ட மன்றத்தில் தேர்ந்தெடுக்கப் பெற்றார். சென்னை சட்டமன்றத்திற்கு உறுப்பின ராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தாழ்த் தப்பட்டவர் எம்.சி. ராஜாதான். அதுவும் தேர்ந்தெடுத்தது நீதிக்கட்சிதான். இதை யெல்லாம் மறைத்து விடுகிறார்கள்.

1922 இல் தாழ்த்தப்பட்ட சகோதரர் களைப் பறையன், பஞ்சமன் என அழைத் ததை மாற்றி ஆதிதிராவிடர், ஆதி சூத்திரர் என்று தீர்மானம் கொண்டு வந்தபோது, அதனை ஏற்று நிறைவேற்றி யது நீதிக்கட்சிதான். 1921-க்குப் பிறகு 1923 இல் நீதிக்கட்சியிலிருந்து வெளி யேறித் தனி வழி காணவேண்டும்; தாழ்த் தப்பட்டோர் தலைவராக வேண்டும் என்று நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவர் என்பதைவிட தாழ்த்தப்பட்டோர் தலைவராக வேண்டுமென்று அனைத்து இந்திய தாழ்த்தப்பட்டோர் அமைப்பினை 1928 இல் உருவாக்கி, அதன் தலைவ ரானார். 1926 முதல் 1937 வரை டில்லி சட்டப்பேரவையில் விளங்கினார். 1937 இல் ஏற்பட்ட கூர்மா வெங்கட்டரெட்டி நாயுடு (கே.வி. ரெட்டி நாயுடு) அமைச் சரவையில் சென்னை மாநில வளர்ச்சித் துறை அமைச்சரானார்.

ஆனால், எம்.சி. ராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் இரண்டு சறுக்கல்கள். ஒன்று, நீதிக்கட்சி தொடங்கிய காலத்தி லிருந்து இணைந்து பணியாற்றிய எம்.சி. ராஜா, குறுகிய காலத்தில் சட்டமன்ற உறுப்பினர், துணைத் தலைவர் பதவி களைப் பெற்ற எம்.சி. ராஜா, நீதிக்கட்சி யையும், தியாகராயரையும் விமர்சித்தார்.

இரண்டாவது, அம்பேத்கரின் வழிக்கு மாறுபட்ட சறுக்கல். ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது தனி நியமனாக இல்லாமல், தனி ஒதுக்கீடாக மாற வேண்டும் என்று 1927 இல் மத்திய சட்ட சபையில் அகில இந்திய தாழ்த்தப்பட் டோர் உறுப்பினராக நியமனம் செய்யப் பட்டு, 1928 இல் மத்தியக் குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜாவின் அறிக் கைகள் அம்பேத்கர் அவர்களின் எழுத்துகள் ராஜாவின் அறிக்கையின் தொடர்ச்சி என்பவர்கள் அம்பேத்கரின் எண்ணம், செயலுக்கு எதிராகச் சென்ற மாபெரும் துரோகத்தை எப்படி மன் னிக்கிறார்கள் என்பது வரலாற்றாசிரி யர்கள் வியக்கின்ற ஒன்று.

இந்திய தேசிய காங்கிரசின் இரண்டு வலதுசாரிகளான டாக்டர் பி.எஸ். மூஞ்சேயுடன், ஜாதவுடன் உடன்பாடு மேற்கொண்டார். ராஜா கொடுத்த ஆதரவிற்காக மூஞ்சே தாழ்த்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்தார். அனைத்து இந்திய அளவில் தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தனி தொகு திக்காகப் போராடி வந்த வேளையில், தாழ்த்தப்பட்டோர் தலைவராக ஆன எம்.சி. ராஜா மேற்கொண்டது சறுக்கல் என்பதை விடத் துரோகம் என்று சொல்லலாம்.

எனவேதான், அதாவது அம்பேத் கருக்குச் செய்த துரோகத்தினால் தான், புனேயில் செய்துகொண்ட ஒப் பந்தத்தின் விளைவாகத்தான் அவரு டைய முந்தைய செயல்கள் மதிப்பிழந்து போயின. எனவேதான், சுயமரியாதை இயக்கம் ராஜாவைக் கடுமையாக விமரிசனம் செய்தது.

இங்கே ஓர் உண்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்; நீதிக்கட்சி தொடங்கிய காலத்தில் இணைந்து பணியாற்றிய, நீதிக்கட்சியிலிருந்து வெளியேறி நீதிக்கட்சியையும், தியாக ராயரையும் விமரிசிக்கப்பட்ட காலத்தில் கடுமையாக விமரிசனம் செய்யவில்லை.

ஆனால், எப்போது - 1932 இல் அம்பேத்கர் செயல், எண்ணங்களுக்கு மாறாக, அகில இந்திய தாழ்த்தப்பட் டோர் மாநாட்டில் அம்பேத்கர் - இரட்டைமலை சீனிவாசனே எங்கள் பிரதிநிதி - காந்தியை நம்பாதீர்கள் என் றாரோ அந்த ராஜா, தலித்களுக்குத் தனித் தொகுதி என்ற உயிரான கொள் கையைப் பலி கொடுத்து மூஞ்சேயுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதுதான் அவருடைய வாழ்க்கையின் கரும்புள்ளி.

சமீபத்தில் பெருந்தலைவர் எம்.சி. ராஜா சிந்தனைகள் தொகுதி ஒன்று வே. அலெக்ஸ் தொகுத்து, தமிழில் ஆ. சுந்தரம் மொழி பெயர்த்த நூல் வெளி வந்துள்ளது. இந்நூலில் 1930 இல் ஜே. சிவசண்முகம் பிள்ளை எழுதிய, இண்டியா பப்ளிஷிங் ஹவுஸ் வெளியிட்ட The Life Select writings and Speeches of Rao Bahadur M.C. Raja வின் வாழ்க்கை, 1927 இல் எம்.சி. ராஜா அவர்கள் எழுதி வெளி யிட்ட ஆங்கில நூலினைச் சென்னை சேத்துப்பட்டுக் கூடம், ஒடுக்கப்பட்ட இந்துக்கள் என்னும் தலைப்பில் வெளி யிட்டது. அத்துடன் 1923 ஆம் ஆண்டு ஜூலை 21, 22 ஆகிய நாள்களில் கோவில் பட்டியில் ஆதிதிராவிடர் பேரவையில் ராஜா அவர்கள் பேசிய உரை ஆகியவற் றையும் இணைத்து இந்நூல் வெளி வந்துள்ளது.

இந்த உரைகளில் நீதிக்கட்சியைக் கடுமையாக விமரிசித்துள்ளார். ஆனால், தந்தை பெரியாரும் சரி, சுயமரியாதை இயக்கமும் சரி, எம்.சி. ராஜாவிற்கு அந்தக் காலங்களிலேயே தக்க பதிலை முறையாக அவர் மறுக்கவியலாதவாறு அளித்துள் ளன. குடிஅரசு வெளியிடும் தொகுதி களில், அன்றைய நாள் குடிஅரசு படிக்க இயலாதவர்களுக்கு இன்று திராவிடர் கழகம் வெளியிட்டு அரிய சேவை செய்கிறது.

இந்த நூலைக் குறித்து அக்டோபர் 27, 2010 இந்தியா டுடே தமிழ் ஏட்டில் வரலாற்றில் மறைக்கப்பட்ட தலித் ஆளுமை என்னும் தலைப்பில், அந்நூலை விமரிசனம் செய்துள்ள விமரிசகர் தலைப் பிலேயே நீதிக்கட்சியின் தவறுகளை விமரிசனம் செய்ததால் இருட்டடிப்பு செய்யப்பட்ட எம்.சி. ராஜாவின் எழுத்துகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன என்று ஏதோ இப்போதுதான் இவை வெளி வந்தது போன்ற மாயையை உருவாக்கி உள்ளதைக் காண்கிறோம்.

No comments:


weather counter Site Meter