Pages

Search This Blog

Wednesday, October 20, 2010

அன்று தீக்கு இரை - இன்று மண்ணுக்கு இரை! திருவரங்க நாமக் கடவுளின் பரிதாபம்

சிறீரங்கம் கோயில் கோபுரம் மண்ணுக்குள் புதைகிறதாம். திருவரங்கம் ராஜ கோபுரத்தில் கீழ்புறம் உள்ள கல்காரம் 13.5 செ.மீ., மண்ணில் புதைந்திருப்பதாக, ராஜகோபுரத்தை ஆய்வு செய்த, முதல் குழுவினரின் அறிக்கை வெளியாகியுள்ளது. 156 ஏக்கர் பரப்பளவில், சப்த எனப்படும் ஏழு வரிசைகள் (பிரகாரங்கள்) மற்றும் 21 கோபுரங்களுடன் கோவில் அமைந்துள்ளது.

கடந்த மே மாதம், திருவரங்கம் ராஜகோபுரத்தில் விரிசலை கண்டறிய ஒட்டப்பட்டிருந்த பெரும் பாலான கண்ணாடித் துண்டுகள் உடைந்துள்ளதை ஒளிப்பட ஆதாரமாகக் கொண்டு, "ராஜகோபுரத் தில் விரிசல்' என்று பெரிய அளவில் செய்திகள் வெளியாயின. அதற்கு பதிலளிக்கும் வகையில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் மற்றும் திரு வரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் விளக்க அறிக்கை வெளியிட்டனர். அதில், "ராஜ கோபுரத்தின் வடகிழக்கு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கட்டடப் பணியின்போது பயன் படுத்திய மரக்கம்பு, இரும்பு பட்டையால், விரிசலை கண்டறிய ஒட்டப்பட்ட கண்ணாடித்துண்டு உடைந்திருக்கலாம்' என்று தெரிவிக்கப்பட்டது.

அதே அறிக்கையில், வடகிழக்கு மூலையில், வடக்கு பகுதியிலும், தென்மேற்கு தெற்கு பகுதி யிலும், கல்காரத்தின் சிற்ப பகுதியிலும் புதியதாக விரிசல்கள் "ஏற்கெனவே ஏற்பட்டுள்ளன என்றும், "விவரமாக' தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே அறிக்கை யின் மூலம்தான், "கோபுரம் புதைகிறது; கோபுர உச்சி நகர்கிறது' போன்ற செய்திகளும் அம்பலமாகி யுள்ளன. ராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்ட 1984 ஆம் ஆண்டே, முதல் நிலையில் வெடிப்பும், கல் காரம் வடமேற்கு, தென்கிழக்கு மற்றும் அருகி லுள்ள கட்டடங்களில் வெடிப்புகளும் ஏற்பட்டன.

வெடிப்பை ஆய்வு செய்ய, இந்து சமய அற நிலையத்துறை சார்பில், 1986 ஜன.,8 ஆம்தேதி முதல் ஆய்வுக்குழு அமைக்கப்பட்டது. சென்னை பொது தலைமை பொறியாளர் (பொது) தலைமையில், சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர், கட்டுமான ஆராய்ச்சி நிலைய இயக்குநர், பாரதிதாசன் பல்கலை முன்னாள் துணைவேந்தர் மணி சுந்தரம், முன்னாள் திருச்சி ஆர்.இ.சி., முதல்வர் நாகரெத்தினம், சென்னை கண்காணிப்புப் பொறி யாளர் (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு), இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்புப் பொறியா ளர் ஆகியோர் ராஜகோபுரத்தை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில், "கல்காரம் கட்டப்பட்டு 300 ஆண்டு ஆனதால், 13.5 செ.மீ., நிலத்தில் கட்டட கல்காரம் இறங்கி இருக்கலாம் என்று தெரிவித் தனர். அதை உறுதி செய்தவதற்கும், பராமரிப்பு பணி மேற்கொள்ளவும் இரண்டாவதாக ஒரு வல்லுநர் குழு அமைக்கப்பட்டது. அதில், சென்னை நெடுஞ்சாலைத்துறை இயக்கு நர் தலைமையில், திருச்சி ஆர்.இ.சி., முதல்வர், இந்து சமய அறநிலையத்துறை கண்காணிப்புப் பொறி யாளர், "டெமேக் ஸ்டெடி' தொடர்ந்து ஆய்வு செய்ய அறிவுறுத்தினர். சென்னை நெடுஞ்சாலைத் துறை (வடிவமைப்பு) ஓய்வு பெற்ற கண்காணிப்புப் பொறியாளர் சீனிவாசராவ், கிண்டி பொறியியல் கல்லூரி மண்வளத்துறை பேராசிரியர் பூமிநாதன் பரிந்துரையால், "அக்கவ்ஸ்டிக் எமிசன் டெஸ்ட்' பொதுப்பணித்துறை மூலம் செய்யப்பட்டது. தொழில்நுட்ப ஆய்வாக, நெடுஞ்சாலைத்துறை யினரால் மண் பரிசோதனை செய்யப்பட்டு, கோபு ரம் அருகே துளையிடப்பட்டு மண்ணின் நிலை பரிசோதிக்கப்பட்டது. கோபுரம் கட்டி முடித்து, மூன்று ஆண்டு 8 மாதம் கழித்து, 18 செ.மீ., மண்ணில் இறங்கி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. கோபுரத்தில் 29 இடத்தில் "டெமெக் ஸ்டடி ஆய்வு செய்யப் பட்டு, வெடிப்பு ஒரு மில்லி மீட்டரில் இருந்து 3 மில்லி மீட்டர் வரை சென்றுள்ளதாக கூறப்பட்டது. சென்னை அண்ணா பல்கலையின், "ரிமோட் சென்சிங் (நகர்வு மின்னணுவியல்) ஆய்வின் மூலம் கோபுர உச்சி சுமார் 0.6 அங்குலம் முதல் 7.1 அங்குலம் வரை நகர்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது. சென்னை மண்வளப் பாதுகாப்பு ஆராய்ச்சி நடத்திய "அக்கவ்ஸ்டிக் பொது ஆய்வின் படி, மண்ணில் எவ்வித நகர்வும் இல்லை எனப்பட்டது. "அடிவாரத்தில் கோபுர கட்டடம் இறங்கும் தன்மை முடிவுக்கு வந்துள்ளது. அடிவாரத்தின் மண் நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. வெடிப்பின் அளவு மற்றும் கட்டடத்தின் தன்மையில் பயப்படும் படி யாக இனி இல்லை. தொடர்ந்து ஏற்பட்ட வெடிப்பு தனது இறுதிக்கட்ட நிலைக்கு வந்து நின்றுள்ளது. இதன்மூலம் கல்காரத்தை கெட்டிப்படுத்தவேண் டும் என்பதை இரண்டாவது வல்லுநர் குழுவினர் ஆய்வின் முடிவில் தெரிவித்தனர்.

பல ஆண்டுகளுக்கு முன் இதே சிறீரங்கம் கோயிலில் தீ பற்றி மூலவிக்கிரகமே வெடித்துச் சிதறி, மறுபடியும் புதிய ரெங்கநாதன் கொண்டு வந்து வைக்கப்பட்டான் என்பது நினைவூட்டத்தக்கதாகும்.
http://viduthalai.periyar.org.in/20101018/news25.html

No comments:


weather counter Site Meter