Pages

Search This Blog

Friday, November 26, 2010

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்! ஓர் அபாரமான கற்பனையே! ஊமைக்குரல்

நாவில் பிழை இருந்தால் ஒழிய தேன் கசக்காது! வேம்பு இனிக்காது!

பிறவியில் மாற்றம் இருந்தாலொழிய புலி புல்லைத் தின்னாது!

அதுபோலத்தான் பார்ப்பனர்களின் தன்மையும்!

என்பது திராவிட இயக்க அறிஞர், செம்மல், தந்தை பெரியாரின் கூற்று.

ஏமாற்றி மற்றவரை ஏட்டால் அதை மறைத்து

தாம் மட்டும் வாழச் சதை நாணா ஆரியம்

என்பது புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் கவிதைப் படைப்பு!

பார்ப்பனர்களின் தன்மை குறித்து மேலே கூறப்பட்டுள்ள கணிப்புகள், எக் காலமும் பொருந்தும் பண்புவரிகளைப் போல இன்றைய காலகட்டத்தின் நிகழ்வுகளுக்கும், நிலைப்பாடுகளுக்கும் பொருத்தமாகவே இருக்கின்றன.

இப்பொழுதெல்லாம் பார்ப்பனர்கள் முன்புபோல இல்லை. நிறைய மாறி விட்டார்கள் என்று பேசும் பார்ப்பனர் அல்லாதவர்களின் தலையில் ஓங்கி குட்டு வைத்தது போன்ற ஒரு நிகழ்வுதான் - பொய்யாகப் புனையப்பட்ட 2-ஜி அலைக் கற்றை ஊழல் குற்றச்சாற்று!

சமூகநீதி, பகுத்தறிவு, பெண்ணுரிமை, ஜாதி ஒழிப்பு என்னும் மனிதநேயக் கொள்கைகளை உயர்த்திப்பிடித்துக் குரல் கொடுப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களின் குரல் வளையைப் பிடித்து நெரிக்கும் கொடிய வன்முறையின் மறு பெயர்தான் பார்ப்பனியம்!

இன்றைய காலகட்டத்தில் சமூக நீதியின் முகவரிகளாக இருக்கின்ற தமிழக முதல்வர் அவர்களும், தமிழர் தலைவர் அவர்களுமே இதுபோன்ற வன்முறைகளைச் சந்தித்தவர்கள்தான்!

பார்ப்பனச் சவுண்டிகளால், பாடை யிலே கட்டி தூக்கி எடுத்துச் செல்லப்பட் டது, தமிழர் தலைவரின் உருவ பொம்மை. வடநாட்டில் நடைபெற்ற மண்டல் எதிர்ப்புப் போராட்டத்திலே எரிக்கப்பட்டது கலை ஞரின் உருவ பொம்மை!

இராமாயணம் தொடங்கி இராசாவரை

இதற்கு முந்தைய காலகட்டத்தில் வேதகால அசுரர்கள் தொடங்கி, இராவ ணன், இரணியன், ஏகலைவன், வாலி, அதன்பின் நந்தனார், சித்தர்கள், அறி வின் மறுஉருவான புத்தர், வள்ளல் ராம லிங்க அடிகளார், அறிவாசான் தந்தை பெரியார், பேரறிவாளர் அண்ணல் அம் பேத்கர், மண்டலுக்காக மகுடத்தைத் துறந்த சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் என இன்றுவரை நீண்டு கொண்டிருக்கும் இந்த வன்முறை வரலாற்றின் இன்றைய இலக்கு (target) முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா அவர்கள்!

இந்திய அரசியல் எத்தனை எத்த னையோ ஊழல் வரலாறுகளை கண்டிருக் கிறது. அதிக அளவில் பணம் கைமாற் றப்பட்ட சர்வதேச ஊழல் குற்றச்சாற்றுகள், முகாந்திரம் (Prima facie) உள்ளது என கண்டறியப்பட்டு, சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், String Operation எனச் சொல்லப்படும் பொறி வைத்து குறி பார்க் கப்பட்டு அதிரடியாக கையும் களவுமாக தெகல்கா வீடியோ மூலம் பிடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் குதிரைபேர ஊழல் குற்றச்சாற்றுகள், கேள்வி கேட்பதற்குக்கூட பணம் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்மீதான ஊழல் குற்றச்சாற்றுகள்.

அரசியல் ரீதியாக வேண்டுமென்றே முன்னாள் பிரதமர் சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள்மீது சுமத்தப்பட்ட செயின்ட்கிட்ஸ் ஊழல் குற்றச்சாற்று, தொலைத்தொடர்புத் துறை கருவிகள் உபகரணங்கள் வாங்கியதில் நடைபெற்ற முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் மீதான ஊழல் வழக்குகள்.

சி.பி.அய். என்னும் மத்திய புலனாய் வுத் துறையால் கண்டுபிடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாற்றுகள், CVAC எனப் படும் (Central Vigilance and Anti corruption) என்னும் மத்திய லஞ்ச ஒழிப்புத் துறை பொறி(Trap) ச் வைத்து பிடித்த ஊழல் குற்றச்சாற்றுகள்.

முதலமைச்சர் ஜெயலலிதா அவர் களின்மீது இருக்கும், ஊழல் குற்றச் சாற்று பட்டியல்கள், மருத்துவக் கல்லூரி அனுமதிக்கு கையூட்டுப் பெற்று, கத்தை கத்தையாக பணம் கைப்பற்றப்பட்ட கேதன் தேசாய் மீதான ஊழல் குற்றச் சாற்றுங்கள் என ஒரு மிகப்பெரிய பட்டி யலே உண்டு.

தலித் விரோத வலைப்பின்னல்

ஆனால், மேலே உள்ள இந்தப் பட் டியலின் எதற்குள்ளும் அடங்காத, விசித் திரமான, பொய்யான வேண்டுமென்றே புனையப்பட்ட ஒரு ஊழல் குற்றச்சாற்று தான் 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு குற்றச்சாற்று, ஏதோ அமைச்சர் ஆ.இராசா அவர்கள் 1.76 லட்சம் கோடி ரூபாய்களையும் தன் வீடு முழுவதும் ரகசியமாக நிரப்பி வைக்கும்பொழுதோ, அல்லது வெளிநாட்டு சுவிஸ் வங்கியில் போடும்போதோ பிடிபட்டதுபோன்ற ஒரு தோற்றத்தை அம்மையார் ஜெயலலிதா தலைமையில் இயங்கும் தலித் விரோத வலைப்பின்னல்(Anti Dalit Network) உருவாக்கி, இதற்காக நாடாளுமன்றத் தின் அன்றாட அலுவல்கள் முடக்கப் பட்டு, கோடிக்கணக்கில் மக்கள் வரிப் பணம் பாழடிக்கப்பட்டுக் கொண்டிருக் கிறது.

இந்தப் பிரச்சினையில் காங்கிரசின் மென்மையான அணுகுமுறைதான் பிரச் சினையை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத் துவதற்குக் காரணமாக அமைந்துவிட் டது என்பதை மறுப்பதற்கில்லை! இந்த அடிப்படையில்தான் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு அய்யா கி. வீரமணி அவர்கள் அண்மையில் கலைஞர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி யில், விரட்ட விரட்ட ஓடுபவர்களைக் கண்டால், விரட்டுபவர் விரட்டிக் கொண்டே தான் இருப்பார்கள். கொஞ்சம் நின்று திரும்பியாவது பார்க்கவேண்டும் என்று சொன்னார்கள்.

பார்ப்பனிய முன்வரலாறு:

இந்த நேரத்தில் சில முன் வரலாறு களையும் தாம் நினைவுக்குக் கொண்டு வர வேண்டும். மிகப்பெரிய முற்போக்கு சிந்தனையாளர் என்று போற்றப்பட்ட ஜவகர்லால் நேரு அவர்களேகூட, இந்து சனாதனவாதிகளிடம் சரணடைந்து அண்ணல் அம்பேத்கர் அவர்கள் கொண்டு வந்த இந்து மசோதா திருத்த பில் தீர்மானத்தை ஏற்க மறுத்து, தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், சமூகநீதியை நிலை நாட்ட முடியாத இந்த சட்ட அமைச்சர் பதவி எனக்குத் தேவையில்லை என முடிவெடுத்து அண் ணல் அம்பேத்கர் அவர்கள் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 1925 இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புவாரி தீர்மானத்தை நிறை வேற்றியே தீரவேண்டும் என்ற ஒற்றைக் காரணத்துக்காக, எந்த தந்தை பெரி யாரால் திரு.வி.க. அவர்கள் மாநாட்டுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாரோ, அதே தந்தை பெரியார் கொண்டு வந்த வகுப்புரிமைத் தீர்மானத்தை, காங்கிரஸ் பார்ப்பனர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகி திரு.வி.க. அவர்களே தோற்கடித்த வரலாறும் உண்டு! பொய்யாகப் புனையப்பட்ட இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் குற்றச்சாற்றில், பொதுமக்கள் மத்தியில் கோடிக்கணக் கான ஊழல், கோடிக்கணக்கான ஊழல் என்று தொடர்ந்து கோயபல்ஸ் பாணி யில் பத்திரிகைகளும், ஊடகங்களும், பிரச்சாரத்தை தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

1-ஜி, 2-ஜி, 3-ஜி என்றால் என்ன?

மக்களில் Common Mass என்று கருதப்படும் சாமான்ய மக்களுக்கு 1-ஜி, 2-ஜி, 3-ஜி அலைக்கற்றை, தொழில் நுட்பம் குறித்து அடிப்படைத் தகவல் கள்பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதும் இந்தப் பொய்ப் பிரச்சாரத்துக்கு மிகவும் வாய்ப்பாக போய்விட்டது. தொழில்நுட்ப ரீதியான அந்தத் தகவல்களையும் பொதுமக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டும்.

1-ஜி என்பதுFirst Generation என்று சொல்லப்படும் முதல் தலைமுறை தொழில்நுட்பம். மிகக் குறைந்த அளவே அலைக்கற்றை வேகம் இருந்ததால், ஒரு சில குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே செல்போன் சேவை இருந்தது.

இந்தச் சேவையை தனியார் நிறு வனங்களான மோட்டரோலா, ஆர்.பி.ஜி., பி.பி.எல்., போன்ற நிறு வனங்கள் மட்டுமே வழங்கி வந்தன. அப்பொழுது பி.எஸ்.என்.எல். என்னும் பொதுத் துறை உருவாகவில்லை. அப் பொழுது இருந்த அரசுத் துறையான தொலைத்தொடர்புத் துறை (DOT) இந்த செல் சேவையில் இறங்கவில்லை. ஒருவருக்கொருவர் பேசும் (வாய்ஸ் மெயில்) வசதி, பேஜர் சேவை வசதி (பேஜர் சர்வீஸ்) மட்டுமே 1-ஜி தொழில் நுட்பத்தில் வழங்க முடிந்தது. அப் பொழுது செல்போனின் வெளி அழைப்பு கட்டணம் ரூ.16 ஆக இருந்தது.

1-ஜி-க்கு பிறகு வந்த தொழில்நுட்பம் தான் 2-ஜி.

2-ஜி என்பது Second Generation என்று சொல்லப்படும், இரண்டாம் தலைமுறை தொழில்நுட்பம்.

2-ஜியின் அலைக்கற்றை வரிசை 900MHZ மற்றும 1800 MHZ

(1 மெகா ஹெர்ட்ஸ் என்பது 1000 கிலோ ஹெர்ட்ஸ், 1 கிலோ ஹெர்ட்ஸ் என்பது 1000 ஹெர்ட்ஸ்)

அதிக வேகம் உடையதால் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் இந்தச் சேவை கிடைக்க ஆரம்பித்தது. முதலில் தனியார் நிறுவனங்கள் மட்டும்தான் இந்தச் சேவையை வழங்கிக் கொண்டிருந்தன. பி.எஸ்.என்.எல். பொதுத்துறை 2002 ஆம் ஆண்டிலிருந்து செல்போன் சேவையில் நுழைந்தது. இந்த 2-ஜி அலைக்கற்றை தொழில் நுட்பத்தில் வாய்ஸ் கால் எனப்படும் பேசும் வசதி, எஸ்.எம்.எஸ். எனப்படும் குறுஞ்செய்தி சேவை, இண்டர் நெட் ப்ரவுசிங் எனப்படும் இணையத் தேடல் சேவை, புளூ டூத் (படங்களைப் பரிமாறிக் கொள்ளுதல்), எம்.எம்.எஸ். போன்ற மதிப்புக் கூட்டு சேவைகள் இந்த 2-ஜி தொழில் நுட்பத்தில் கிடைத்தன.

ஆரம்ப காலத்தில் இதில் அழைப்புக் கட்டணங்கள் அவுட்கோயிங் ரூ.1.80 ஆகவும், இன்கமிங் 0.90 பைசா ஆகவும், எஸ்.எம்.எஸ். கட்டணம் 0.80 பைசா ஆகவும் இருந்தன. தனியார் நிறுவனங் களான ஏர்செல், ஏர்டெல், ரிலையன்ஸ், டாடா இண்டிகாம், டொக்கோமோ, எம்.டி.எஸ். அய்டியா, யுனிநார், வீடியோ கான் உள்ளிட்ட நிறுவனங்களும் இந்த சேவையை வழங்கிக் கொண்டிருக் கின்றன.

2-ஜிக்குப் பின்னர் வந்த சேவைதான் 3-ஜி.

3-ஜி என்பது Third Generation எனப்படும் மூன்றாம் தலைமுறை தொழில் நுட்பம். இதனுடைய அலைக்கற்றை வேகம் 10,782 MHZ

2-ஜியைப் போல 10 மடங்கு அலைக்கற்றை வேகமுடையதுதான் 3-ஜி. அதிக வேகம் உடையதால் ஏராளமான நவீன சேவைகள் கிடைத்தன. தந்தை பெரியார் அவர்கள் இனிவரும் உலகம் என்ற தலைப்பில் கூறிய கருத்துகளில் ஒன்றான ஒருவருக்கொருவர் முகம் பார்த்துப் பேசும் வசதி எதிர்காலத்தில் கண்டுபிடிக்கப்படும் என்று கூறியது உண்மை ஆனது, இந்த 3-ஜி தொழில் நுட்பத்தால்தான்.

இந்த 3-ஜி தொழில்நுட்பத்தில் வீடியோ கால் எனப்படும் முகம் பார்த்துப் பேசும் வசதி, மொபைல் டி.வி. எனப்படும் மொபைல் தொலைக்காட்சி சேவை, VOD, GOD போன்ற சேவைகள், அதிவேக இன்டர்நெட் ப்ரவுசிங், 7.2 MbpS (Mega Bits per Second) டேட்டா வேகமுடைய 3-ஜி டேட்டா கார்டுகள், போன்ற பல சேவைகள் இந்த 3-ஜி தொழில்நுட்பத்தில் வழங்கப்படுகின்றன. இந்த 3-ஜி சேவையை 3-ஜியின் நுட்பம் கட்ட மைக்கப்பட்ட இரண்டு கேமராக்கள் உடைய செல்போன் செட்களில்தான்(3G Enabled Set) பெற முடியும்.

தொலைத்தொடர்புத் துறையில் மிகப்பெரிய புரட்சியாக அமைச்சர் ஆ.இராசா அவர்கள் முயற்சியால் இந்த 3-ஜி தொழில்நுட்பம் முதன்முதலாக பொதுமக்கள் துறையாம்; பொதுத் துறையான பி.எஸ்.என்.எல்.-க்கு மட்டுமே ஒதுக்கப்பட்டது. இப்பொழுதுதான் தனியார் நிறுவனங்கள் ஏலத்தில் எடுத் துள்ளன. இதுதான் 1-ஜி, 2-ஜி, 3-ஜி.யின் தொழில்நுட்ப வரலாறு!

(தொடரும்)
http://www.viduthalai.periyar.org.in/20101124/news05.html


2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்!ஓர் அபாரமான கற்பனையே! (2)
நேற்றைய கட்டுரையின் தொடர்ச்சி...- ஊமைக்குரல்

அய்வருக்கும் தேவி அழியாத பத்தினிக் கதைதான்

இந்த ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர் பான பொய்யான ஊழல் குற்றச்சாற்று 2008 இல் தொடங்கி, கின்னஸ் சாதனை என்று சொல்லப்படும் அளவிற்கு திரும்பத் திரும்ப உயிர்ப்பிக்கப்பட்டு, ஊழல் தொகை ரூ.20,000 கோடியிலிருந்து ரூ.1.76 லட்சம் கோடிவரை கற்பனை யாகவே உயர்த்தப்பட்டு இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அய் வருக்கும் தேவியாம்; அழியாத பத்தினி யாம் என்று பொய்யான தகவல் ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக சொல்லப்படு வதைப்போல பொய்யாகவே உருவாக் கப்பட்டு, பொய்யாகவே வளர்க்கப்பட்டு, அந்தப் பொய்யின் அடிப்படையில் கற் பனையாகப் போடப்பட்ட ஒரு கற்பனைக் கணக்கீடுதான் இந்த ரூ.1.76 லட்சம் கோடி என்பது.
நாம் சற்று பின்னோக்கிச் சென்றால் பி.ஜே.பி. மத்தியில் ஆண்டபொழுது அரசுத் துறை, பொதுத் துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்பதற்கென்றே Disinvestment Minister திரு. அருண் ஷோரி இருந்த வரலாறும் இங்கே நினைவு கூரத்தக்கது. அதே பி.ஜே.பி. ஆண்ட பொழுது தனியார் நிறுவனங்களின் வேண்டுகோளை ஏற்று தொலைத் தொடர்புத் துறையில் லைசென்ஸ் கட் டணம் ரூபாய் 85 ஆயிரம் கோடி தள் ளுபடி செய்யப்பட்டது என்பது தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமான ஒரு நிலைப்பாடு என்று பொருள் கொள் வதா? அப்பொழுது இதனை யாரும் இந்த அளவு எதிர்க்கவில்லை என்பது உண்மை.
இந்தப் பிரச்சினையில் அறிவார்ந்த வர்கள் மத்தியிலும், நடுநிலைச் சிந்த னையாளர்கள் மத்தியிலும் நிலவிவரும் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும், பொய்க் குற்றம் சுமத்தும் அந்தத் தலித் விரோத சக்திகள் கண்டிப்பாகப் பதில் அளித்தே தீரவேண்டும் என்பது காலத் தின் கட்டாயம்.

கேட்கிறார்கள்... தலைவர்கள்

மத்திய அரசாங்கத்தின் கொள்கை யான தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை அடிப்படையில் 1999 ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வந்த அதே நடைமுறையில், அதாவது இதற்கு முன் இருந்த தொலைத்தொடர்புத் துறை அமைச்சர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் ஆகி யோர் பின்பற்றிய அதே நடைமுறைதான், அலைக் கற்றை ஒதுக்கீட்டில் ஆ. இராசா அவர்கள் செய்திருக்கும்பொழுது, முன் தேதியிட்டு, பின் தேதியிட்டு, இப்படிச் செய்திருந்தால், அப்படிச் செய்திருந் தால் என ஆயிரத் தெட்டு குற்றச்சாற்று களை ஏன் இதற்கு முன் இருந்த அமைச்சர்கள்மீது சுமத்தவில்லை? அப்பொழுது இந்த அறிவாளிகளின் மூளைகள் எல்லாம், அவர்களது தலையைவிட்டு வெளியேறி எங்கே யாவது சுற்றுப்பிரயாணமா செய்து கொண்டி ருந்தன?
6.2 MHz -க்கு மேல் ஒதுக்கீடு செய்யும் பொழுது 3ஜி-க்கு இணையாக கட்டணம் நிர்ணயிக்கவேண்டும் என்ற வழிகாட்டுதல் 2010 ஆம் ஆண்டில்தான் TRAI (Telecom Regulatory Authority of India) ஆல் அறிவிக்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டு கணக்கீட்டை 2008-க்கும் பொருத்திப் பார்ப்பது ஒரு கற்பனைக் கணக்கீடு (Imaginary Calculation).
இதற்குமுன் இருந்த தொலைத் தொடர்பு அமைச்சர்களும் 6.2MHz -க்கு மேல் ஒதுக்கீடு செய்துள்ளார்கள். 6.2MHz -லிருந்து 10MHz -வரை மாண்பு மிகு அமைச்சர் பிரமோத் மகாஜன் அவர்களும், 21MHz வரை மாண்புமிகு அமைச்சர் அருண்ஷோரி அவர்களும், 38.8ஆழண வரை மாண்புமிகு அமைச்சர் தயாநிதிமாறன் அவர்களும் ஒதுக்கீடு செய்துள்ளபொழுது இவர்கள் மூவரும் இந்தக் கணக்கீட்டில் வராதது ஏன்? அமைச்சர் ஆ.இராசா அவர்களை மட்டும் குறி வைக்கப்படுவது ஏன்?
இன்றைக்கு இந்த அளவுக்கு பிளந்து கட்டும் திறமை வாய்ந்த மத்திய தணிக் கைத் துறை மூளைகள் 2000 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டுவரை, தலையணை போட்டு மெத்தையில் உறங்கிக் கொண்டா இருந்தன? 2000 ஆம் ஆண்டில் அது சமர்ப்பித்த கடுமை யான ஆட்சேபங்களுக்கும், அறிக்கை களுக்கும் PAC என்று சொல்லப்படும் பொதுக் கணக்குத் துறை ஏன் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற கேள்வி அவர்களுக்கு 10 வருடங்களாக வரவேயில்லையா? திடீரென்று இப் பொழுது மட்டும் சலங்கை கட்டி ஆட வேண்டிய அவசியம் என்ன? 10 வரு டங்களாக மெய், வாய் அனைத்தும் மூடி இருந்ததற்கு என்ன காரணம்?
ரகசியமானதோ, ரகசியம் இல்லா ததோ, ஓர் அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்பாகவே, வெளியில் பத்திரிகைகள், ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சியினருக்கு தெரிவிக் கப்பட்டதன் உள்நோக்கம் என்ன? 
http://www.viduthalai.periyar.org.in/20101125/news07.html



2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்!
ஓர் அபாரமான கற்பனையே! (3) - ஊமைக்குரல்

இதுதான் பத்திரிகை தர்மமா?

இந்திய வரலாற்றில் முன் எப் பொழுதும் இல்லாத அளவிற்கு, இந்தப் பொய்க் குற்றச்சாற்றில் பார்ப்பன பத் திரிகைகளும், தொலைக்காட்சி ஊடகங் களும் ஈடுபாடு காட்டுவது பத்திரிகை தர்மமா? இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து தங்கள் தலித் விரோத மனப் பான்மையைக் காட்டும் பத்திரிகைகளும், ஊடகங்களும், தொலைக்காட்சிகளும் நடுநிலை என்ற வார்த்தையை உச் சரிக்க யோக்கியதை உள்ளவர்கள் தானா?
Mother of Scandals என்று அமைச்சர் ஆ. இராசாவை விமர்சிக்கிற யோக்கிய தையும், பொறுப்பும், தார்மீகமும் ஊழல் ராணி என மக்களால் புறக் கணிக்கப் பட்டு, தெருவில் தூக்கி வீசி எறியப்பட்டு, நீதிமன்றப் படிக்கட்டுகளை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் எதிர்க் கட்சி அம்மை யாருக்கு உண்டா? என்பது கிண்டலாகக் கேட்கப்படும் கேள்வி!

இந்தக் கேள்விகள் அனைத்தும், தமிழர் தலைவர், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களாலும், முத் தமிழ்க் காவலர் முதல்வர் டாக்டர் கலை ஞர் அவர்களாலும், அமைச்சர் ஆ.இராசா அவர்களாலும் தன்னிலை விளக்கமாக வும் தொடுக்கப்பட்ட கேள்விகள்! பொது மக்கள் மத்தியிலும் நிறைய கேள்விகள் பரவலாகக் கேட்கப்படுகின்றன.

யார் இந்த ஜெயலலிதா?

ஸ்பெக்ட்ரம் ஊழலை பகடைக் காயாகப் பயன்படுத்தி காங்கிரசுக்கு நான் ஆதரவு தருகிறேன் என்று சொல் லும் தார்மீக யோக்கியதை (Moral High Ground) அம்மையார் ஜெயலலிதா அவர் களுக்கு இருக்கிறதா? என்ற கேள்வி!
ஜானகி அம்மையாரை விமர்சித்த அதே பாணியில்,
ஆளுநர் சென்னாரெட்டியை விமர் சித்த அதே பாணியில்,
எம்.ஜி.ஆர். என் புகழைக் கண்டு பொறாமைப்படுகிறார், என்னை அடக்கி வைக்க நினைக்கிறார் என்று குற்றம் சுமத்திய அதே பாணியில்,
கிழடு தட்டிப்போனாது என்று பி.ஜே.பி.யை விமர்சித்த அதே பாணியில்,
கொஞ்சும்கூட நாக்கும், வாயும் கூசா மல் கணவனுக்குத் துரோகம் இழைத்த சோனியா காந்தி! பதிபக்தி இல்லாத சோனியா காந்தி! என்று குற்றம் சுமத் திய அதே வாயால் எப்படி காங்கிரசுக்கு நான் ஆதரவு தருகிறேன்! என்று சொல்லத் துணிந்தார்? என்பது மக்கள் மன்றத்தில் எழுந்துள்ள கேள்வி!
மூச்சுக்கு முந்நூறு முறை அன்னை! அன்னை! என்று அழைக்கும் தலைவியை கேவலமாக விமர்சித்த ஜெயலலிதா அம்மையார் எப்படி எங்கள் கட்சிக்கு ஆதரவு தருகிறேன் என்று சொல்லலாம்? என்று கோபமும், ஆத்திரமும் ஏன் யாருக்கும் பொங்க வில்லை?
அதேபோன்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்த யதார்த்த நிலை சிந்தனையாளர்கள் மத்தியிலும் ஒரு கேள்வி பிறந்துள்ளது! ஆ.இராசாவை நீக்கினால் ஆதரவு என்று சொன்னால், ஆ.இராசாவை நீக்குவது ஒன்றுதான் அ.தி.மு.க.வின் அடிப்படைக் கொள்கையா? அல்லது அடிப்படை லட்சியமா? அதற்கு வேறு கொள்கைகளே இல்லையா?
இதுபோன்று ஏன்? எப்படி? என்று கேட்கப்பட்டுள்ள அத்துணை கேள்வி களுக்கும் ஒரே, ஒரு விடைதான்.

ஆ.இராசா... ஆதிதிராவிட இராசா என்பதுதான்!

இந்தப் பிரச்சினையில் கைகொட்டிச் சிரித்த கருங்காலிகளும் உண்டு! கைகட்டி வேடிக்கை பார்த்த கோழை களும் உண்டு! இந்தப் பிரச்சினையின் உள்ளடக்கமும், உண்மையும் தெரிந் திருந்துமே, வெளியில் சொல்லாமல், மாட்டியிருப்பது ஒரு தலித் சமூகத்துக் காரன்தானே! என்று மெத்தனமாக இருந்த மெத்தப் படித்த மேதாவிகள், அறிவு ஜீவிகள், பொருளாதார மேதை கள் என்று தங்களை சொல்லிக் கொண் டவர்களும் உண்டு!

ஒரு மிகப்பெரிய ஊதிய மாற்றத் துக்கு வித்திட்ட ஒரு மத்திய அமைச்சர் என்ற உணர்வு ஏதுமின்றி அமைச்சரைக் களங்கப்படுத்துபவர்களுடன் கைகோத்த தொலைத்தொடர்பு தொழிற்சங்கங் களும், அதனுடைய தலைவர்களும் உண்டு!

இவ்வளவு பெரிய போராட்டக் களத்திலே அமைச்சர் ஆ.இராசா தனித்து விடப்பட்டு விடுவாரோ, என்று இந்திய நாட்டின் ஒட்டுமொத்த தலித் சமூகம் கலங்கிக் கொண்டிருந்த வேளையில், இப்பிரச்சினையில் ஆரம்பம் முதல் இன்றுவரை தோன்றாத் துணை யாக, தொட்டு அணைத்துத் தூக்கி நிறுத்திய தாயாய், தந்தையாய் இருந் தவர்கள் இரண்டு தலைவர்கள் - தந்தை பெரியாரின் நீட்டிக்கப்பட்ட வரலாறுகளாய் வாழ்ந்து கொண்டி ருக்கும், தமிழக முதல்வர் கலைஞர் அவர்களும், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்களும்தான்.

விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர், அன்புச் சகோதரர் தொல். திருமாவளவன் அவர்கள், தலித் விரோத பார்ப்பனிய ஜாதிய வளையத் தின், சதிவலைதான் இந்தப் பொய்க் குற்றச்சாற்று என முழங்கியிருக்கிறார்.

மானமிகு மாண்புமிகு முதல்வர் கலைஞர் அவர்கள் வழங்கிய புரட்சி யாளர் என்ற பட்டம் ஆ.இராசா வுக்குப் பொருத்தமான பட்டம்! தந்தை பெரியார் மொழியில், சொல்வதென்றால், புரட்சி என்றால் புரட்டிப் போடுதல்!

ஒரு காலத்தில் செல் அழைப்புக் கட்டணம், தனியார் நிறுவனங்கள் மட்டும் இருந்த காலத்தில் ரூ.16. அதற்குப் பின் இருந்த அமைச்சர்கள் காலத்திலும் அழைப்புக் கட்டணம் ஒரு ரூபாய்க்குக் கீழே இறங்கவில்லை. இப்பொழுதோ வினாடிக்கு ஒரு பைசா, அம்மா, உங்களை பார்க்க நாளை வைகையில் வருகிறேன் என்று சென்னையில் இருக்கும் மகன், மதுரை யில் இருக்கும் தன் அன்னைக்கு ஒரு விநாடியில் சொல்லும் இந்தச் செய்திக்கு கட்டணம் ஒரு பைசா மட்டுமே!
இந்தக் கட்டணம் வந்த காலகட்டம், யாருடைய காலகட்டம்?
அமைச்சர் ஆ.இராசா அவர்களின் காலகட்டம் அல்லவா!

சமூகப் புரட்சியல்லவா!

சமூகத்தின் உயர்மட்டத்திலிருந்து, அடித்தட்டு மக்கள் வரை செல்பேசி சேவையை அனுபவிப்பது ஒரு சமூகப் புரட்சி அல்லவா?
தொலைத்தொடர்புத் துறையின் தொழிற்சங்கத் தலைவர்களும், அதி காரிகள், சங்கத் தலைவர்களும் வைத்த வேண்டுகோளை ஏற்று பி.எஸ்.என்.எல். பொதுத் துறையில் 74 சதவிகித பங்கு களை தனியாருக்கு விற்கும் முடிவை நிறுத்தி வைத்து, ஊழியர் நலத்துறையாக பொதுமக்கள் நலத்துறையை பி.எஸ். என்.எல். துறையை நிலை நிறுத்தியது ஒரு புரட்சி அல்லவா!
தந்தை பெரியார் அஞ்சல் உறை மத்திய அரசின் சார்பில் வெளியிடப்பட்டதும், அமைச்சர் ஆ.இராசா அவர்களின் கால கட்டத்தில்தான். கலைஞர் அவர்கள் பொருத்தமாகத்தான் பாராட்டியிருக்கிறார் ஆ.இராசாவை - புரட்சியாளர் என்று!

மாண்புமிகுவைப் பறிக்கலாம்!மானமிகுவைப் பறிக்க முடியுமா?

என்று தமிழர் தலைவர் அய்யா கி. வீரமணி அவர்களைத் தவிர, வேறு யாரால் இதுபோன்று கேட்க முடியும்!

இந்த ஸ்பெக்ட்ரம் பொய்க் குற்றச் சாற்றில், தலித் சமூகத்திற்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? எதிர்த்து நின்றவர்கள் யார்? என்பது தலித் சமூகத்துக்கும் தெரியும்!

அவர்கள் ஒன்றும் தெரியாத மூடர்கள் என்றோ, முட்டாள்கள் என்றோ யாராவது தப்புக்கணக்கு போடுவார்களேயானால், அவர்கள்தான் முட்டாள்கள்!

தலித் சமூகம் உறைந்துவிட்ட பனி மலை அல்ல! மாறாக, ஆறாத உள் நெருப்புடன் உறங்கும் எரிமலை!

அவர்களை எழுப்ப ஓர் அலாரம் அடிக்கும்! வெடித்துக் கிளம்பும் வெப் பத்துடன்! சரியான நேரத்துக்கு அவர்கள் விழிப்பார்கள்!

தேர்தல் என்னும் உணவுக் கூடத்தில், வெடித்து கிளம்பும் அந்த எரிமலையின் வெப்பத்தில், எரிக்க வேண்டியதை எரிப்பார்கள். சமைக்க வேண்டியதைச் சமைப்பார்கள்! படைக்க வேண்டிய வர்களுக்குப் படைப்பார்கள்!

கருஞ்சிறுத்தை கண் விழித்தால் தெரியும் சேதி! என்ற புரட்சிக்கவிஞரின் புரட்சி வரிகளின் வழியில் ஒரு சரித்திரம் நிகழும்!
(நிறைவு)

http://www.viduthalai.periyar.org.in/20101126/news04.html

1 comment:

Boopathy said...

What did these same people did when the spectrum issue was raised by SUN TV?

Why are they come out now?!!!!


weather counter Site Meter