Pages

Search This Blog

Sunday, January 30, 2011

வகுப்புவாரிப் போரில் வீரமணி!

வீரமணி வரைவு: வகுப்புவாரி உரிமைப்போரில் தந்தை பெரியாருக்குப் பின்னர் திராவிடர் கழகத்தலைவர் வீரமணி 69 விழுக்காட்டை உறுதிப்படுத்துவதற்காகத் தமிழ்நாடு அரசிற்கு உருவாக்கி அளித்த அரசியல் சட்டத்திருத்த வரைவு 31 (சி) ஆகும்.

தமிழ்நாடு அரசு வழியாக டில்லி சென்ற அந்த வரைவினை நாடாளுமன் றம் 76ஆம் அரசியல் சட்டத்திருத்த வரைவாக ஏற்றுக்கொண்டு நிறை வேற்றித் தந்திருக்கிறது.

நாடாளுமன்றம் நிறைவேற்றிய அந்த வரைவிற்கு அன்றைய குடியரசுத் தலைவரான சங்கர் தயாள் சர்மா _ 19.7.1994 ஆம் நாள் அவருடைய ஒப்புதலை அளித்திருக்கிறார்.

குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்ற வரைவினை மாநிலங்கள் அவையும் _ மக்கள் அவையும் 24, 25.8.1994 ஆம் நாள் வாக்கில் ஏற்றுக் கொண்டு வகுப்புவாரி வரைவைப் பாதுகாக்கும் பொருட்டு அரசியல் சட்ட ஒன்பதாம் அட்டவணையிலும் சேர்த்துக்கொண்டது.

விசயன் வழக்கு: ஒன்பதாம் அட்ட வணையில் ஏறிய 76 ஆம் திருத்தத்தை எதிர்த்து வாய்சு விசயன் என்பவர் வழக்கொன்றைப் போட்டார்.

2007 ஆம் ஆண்டு அவ்வழக்குத் தொடர்பான எல்லா வழக்குகளும் மேல் விசாரணைக்கு அனுப்பிவைக்கப்பட் டன.

விரிவாக வழக்கை ஆராய்ந்த உச்சநயன் (சுப்ரீம் _நீதி) மன்றம் தன்னு டைய வழிகாட்டுத் தீர்ப்பொன்றை 13.7.2010 ஆம் நாள் வாக்கில் வழங்கியது.

தீர்ப்பும் திருப்பமும்: வழக்கம்போல ஏமாற்றாமல் வந்துள்ள தீர்ப்பின் வாயிலாக ஓராண்டிற்கு 69 விழுக்காடு வகுப்புவாரி உரிமை தொடர வழி ஏற்பட்டிருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோர் நல ஆணை யம் விழுக்காட்டின் அளவை உறுதிப் படுத்தி ஆணை பிறப்பிக்கலாம்; அரசு அதன் அடிப்படையில் வகுப்புவாரி உரிமை அளவை நிறைவேற்றலாம்.

வெற்றியும் விளைச்சலும்: வீரமணியின் வகுப்புவாரிக் காப்பு வரைவு எதிர்ப்பு வழக்கினால் பல நன்மைகள் விளையத் தொடங்கி இருக்கின்றன.

உள்ஜாதி ஒதுக்கீட்டிற்கு ஜாதிவாரிக் கணக்குத் தேவை என்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு நடுவண்அரசும் ஒப்புதலைத் தந்திருக் கிறது.

அரசு வேலைகளில் மேல்ஜாதிக் காரர்களின் கொடுமையான வல்லாண் மையைத் தடுக்க வாய்ப்பு அமைந் திருக்கிறது.

விடியல் போருக்கு முறைப்படி வரவேண்டிய வெற்றித் தீர்ப்பு வந்திருக்கிறது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியைச் சேர்ப்பது ஜாதி உணர்ச்சியை வளக்கும் என்று கூறி நடுவண் _ மாநில அரசினர் செய்த _ செய்து வருகிற தடுப்புகளைத் தீர்ப்பு மெல்ல வந்த போதிலும் வலிவோடு தகர்த்தெறிந் திருக்கிறது.

காகாகலேல்கர் _ மண்டல் _ அம்பா சங்கர் குழுக்களின் கணக் கெடுப்பு வேண்டுகோள்கள் கைகூடி இருக்கின்றன.

முதலமைச்சர், தலைமையமைச்சர், குடியரசுத் தலைவர் ஆகிய மூவரும் பார்ப்பனராய் இருந்த காலத்தில் நிறைவேறிய வீரமணியாரின் வரைவு வழக்கு எதிர்ப்புத் தீர்ப்பு மாபெரும் வரலாற்று வெற்றியாகும்.

வெற்றித் தீர்ப்பின் எல்லையைத் தாண்டி ஜாதிவாரிக் கணக்கெடுப்புப் பணி நடைபெறும் என்று நடுவணரசு அறிவித்திருப்பது மற்றோர் முட்டுக் கட்டையாகும்.

வேண்டுமென்றே தள்ளிப் போடு வது அவாள் வேலை.

விரைந்து நடவடிக்கைக்குப் பணியவைப்பது நம்முடைய வேலை.

போராளி வீரமணி வென்று, மக்களின் வாழ்த்தையும் பாராட்டையும் பெறுவாராக!

- புலவர் குறளன்பன்
http://viduthalai.in/new/page7/2317.html

No comments:


weather counter Site Meter