Pages

Search This Blog

Sunday, January 23, 2011

தீபாவளி பிராண்டு சி.பி.எம். தீக்கதிரின் சீண்டல்

சென்னை பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரை சூட்டக் கூடாது; தந்தைபெரியார் பெயரைச் சூட்ட வேண்டும் என்று சொன்ன திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி;

இப்பொழுது முதல் அமைச்சர் ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டி விட்டார், வீரமணி மவுனியாகி விட்டார்.

ஸ்பெக்ட்ரம் இராசாவைக் காப்பாற்றும் வகையில் தாம் எழுதியுள்ள உறைய வைக்கும் உண்மைத் தகவல்கள் புத்தக விற்பனையில் வீரமணி பிஸியாக இருக்கலாம் என்று தீக்கதிர் ஏடு ஆறு பத்திக்குப் பெட்டி செய்தி போட்டுள்ளது (21.1.2011).

புத்தக விற்பனையில் பிஸியாக இருப்பது என்பது குற்றமான ஒன்றல்ல. டயலிட்டிக் மெட்டீரியலிசம் பேச வேண்டிய மார்க்சிஸ்டுகள் தீபாவளிக்கும், கார்த்திகைக்கும், ஓணத்துக்கும் சிறப்பு மலர் போட்டு விற்பனையில் பிசியாக இருப்பதைவிட, ஒரு நியாயமான காரணத்துக்காகப் புத்தகம் போட்டு விற்பது ஒன்றும் குற்றமானதல்ல.

கேரள மாநில சி.பி.எம்., செயலாள ரும் - மின்துறை அமைச்சராக இருந்தவருமான பினராயி விஜயனின் லாவ்லின் மின் உற்பத்தித் திட்ட ஊழல் ரூ.374 கோடி சம்பந்தப்பட்டதாயிற்றே! சி.பி.அய். விசாரணையிலும் உறுதிப்படுத்தப்பட்ட ஒன்றாயிற்றே!

ஆ. இராசா மீதான குற்றச்சாற்று வெறும் யூகத்தின் அடிப்படையிலானது. பினராயி விஜயன் சம்பந்தப்பட்ட ஊழல் ஊர்ஜிதமானது. ஆனால், இந்த மார்க்சிஸ்டுகள் என்ன சொன்னார்கள்? அரசியல் சதி என்றனர். இவர்களுக்கு வந்தால் அரசியல் சதி.. மற்றவர்களுக்கு வந்தால் மாபெரும் ஊழல்.

ஹி...ஹி... இவர்களின் அகராதியே தனிதான்.

சி.பி.எம். வைத்த கோரிக்கை - சிறுதாவூர் நினைவிருக்கிறதா? ஏன் பேச்சு மூச்சு இல்லை?

- கருஞ்சட்டை

http://viduthalai.in/new/page1/1752.html

No comments:


weather counter Site Meter