2001 முதலே சி.பி.அய். 2ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டுவிட்ட நிலையில், ஊழல் களின் உண்மை முக்கியத்துவம், என்ற தலைப்பில் மேற்படி கூட்டத்தில் உரையாற்றினார் அருண் ஷோரி. பிரதமர் மன்மோகன் சிங்கை குற்றம் சுமத்திப் பேசியதோடு, ஆ.இராசா வையும் குற்றம் சுமத்திப் பேசினார்.
அதில் மீடியாக்களுக்கு நான் அறிவுறுத்த விரும்புகிறேன்; நீங்களே (ஊடகங்களே) ஒரு கற்பனையான தொகையான 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் என்று எழுதி அதையே திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். அநேகமாக இத்தொகை 30 ஆயிரம் கோடிதான் இருக்கக் கூடும் என்றார்!
1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் பலூனில் எவ்வளவு காற்று இறங்கி விட்டது பார்த்தீர்களா?
(ஆதாரம் 19.12.2010 இந்து நாளேடு) |
இதன்படி, (அருண்ஷோரி கூற்றுப் படி) 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி திடீரென்று மறைந்துவிட்டதே!
இதுதான் CAG என்ற மத்திய கணக்குத் தணிக்கையாளரின் துல்லி யக் கணக்குக்கு நற்சான்றிதழா?
இது மட்டுமல்ல, ஏற்கனவே, சி.பி.அய் தாக்கல் செய்துள்ள முதல் அறிக்கையில் 2009இல் குறிப்பிடப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா?வெறும் 22,000 கோடிதான்!
இதன்படி, அவாள் பிரச்சார 1,76,000 கோடி பலூனில் இறங்கிய தொகை 1 லட்சத்து 54,000 கோடி எப்படி திடீரென போயிற்று?
இதிலிருந்து தெரியும் உண்மை- இந்தப் பொய்ப் பிரச்சாரத் தொகை தான் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி என்பதுதானே!
இதைத்தான் CAG என்ற பெரிய தணிக்கை அதிகாரி-இழப்புத் தொகை விவாதித்து முடிவுக்கு வரவேண்டும் (Debatable) என்று முடித்தார் போலும்!
எங்காவது கணக்கில் கட்டப் பஞ்சாயத்து உண்டா? உண்மை களைப் பலியாக்குகிற ஒருவர், பழிபோட்டு மக்கள் விழியை மறைக்க முயலுகிறார். ஏமாறாதீர்! ஏமாற்றாதீர்!!
(இதைத் துண்டறிக்கையாகவும் அடித்து மக்களுக்கு வழங்குங்கள்
-ஆசிரியர்)
http://www.viduthalai.periyar.org.in/20101219/news07.html
2 comments:
ஒ! 50000 கோடி கொள்ளை அடித்தால் பரவாயில்லையா?
@bandhu: //ஒ! 50000 கோடி கொள்ளை அடித்தால் பரவாயில்லையா? //
ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடியிலிருந்து எப்படி 30000 கோடியாக மாறியது என்பதற்காக தான் இந்த பதிவு.மீதம் உள்ள 1 லட்சத்து 46 ஆயிரம் கோடி திடீரென்று மறைந்துவிட்டதே..என்பது எங்களின் கேள்வி..!!!
Post a Comment