Pages

Search This Blog

Wednesday, December 1, 2010

தமிழர் தலைவர் வீரமணி பற்றி ஏடு, இதழ்கள்

வாழ்க்கைப்
பாதையில்...
அந்நாட்களில் இயக்க மாநாடுகளில், நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றோர் மட்டுமே சொற்பொழிவு ஆற்றுவது வழக்கம். ஆனால், திராவிடர் கழகப் பெயர் மாற்றம் கொண்டு வரப்பட்ட சேலம் மாநாட்டின் (1944 ஆகஸ்டு 27) அழைப்பிதழில் பெயர் இல்லாத ஒருவர் அழைத்துப் பேச வைக்கப்பட்டார். அவர்தான் கி.வீரமணி. அப்போது வயது 11.

ஆனந்தவிகடன் பார்வையில் வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மற்றவர் பேசும்போது குறுக்கே பேசமாட்டார். கவனமாக சில சமயம் தன் கைகளைக் கட்டிக் கொண்டு கூர்மையாக கேட்பார். வயதில் சின்னவர்களை கூட வாங்க போங்க என்றுதான் சொல்வார்.
நன்றி: ஆனந்த விகடன், 22.5.1983
சிந்தனைத் தெளிவும், கொள்கை நெறியும் பிசகாது மலிவான விமர்சனங்களில் இறங்காது தொய்வு தட்டாமல் பேசக்கூடிய நா. வல்லர்களில் மூன்று நான்கு பேர்களில் வீரமணியும் ஒருவர்.
நன்றி: சிங்கப்பூரிலிருந்து வெளிவரும் தமிழ் முரசு 1983
பிராமணர்கள் மனிதர்களாகத்தான் இருக்க வேண்டும்; தங்களை மற்றவர்களை விட உயர்ந்தவர்களாகக் கருதக் கூடாது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறுகிறார்.
நன்றி: இந்தியா டுடே, ஜனவரி 15, 1
 


சாவியின் பார்வையில்....
கருப்புச் சட்டை அணிந்து கொண்டு இவர் நாத்திகவாதம் பேசுவதைக் கேட்டால், பலர் காதை மூடிக் கொள்வார்கள். இன்னும் பலர் துடிப்பார்கள். நாராயணா, இதை எல்லாம் கேட்டுக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டுமா? என்றும் சிலர் வருத்தப்படுவார்கள். ஆனால், அதே வீரமணியைத் தனிப்பட்ட முறையில் சந்தித்துப் பழகினால் - தர்ம சாஸ்திரங்கள் ஒரு நல்லவனைப் பற்றி எப்படி எல்லாம் சித்திரிக்குமோ, அப்படிக் காட்சி தருவார்.
பண்புப் பழமாய்க் கனிந்திருக்கும்! பேச்சு நெய்யாய் உருகி நிற்கும்! நாகரிகம் இதம்பதமாய் இருக்கும்!
சின்னஞ்சிறு வயதில் மேடையில் ஸ்டூல் போட்டு ஏறி நின்று பேசிப் பழகினார். இப்போது எந்த மேடையிலும் இவர் பேச்சின் உயரத்துக்கு யாரும் வர முடிவதில்லை.
கொள்கையில் சிங்கம்; குணத்தில் தங்கம்.
(சாவி, 31.3.1985 இதழ்)
தமிழர்தலைவரின் பன்முகம்!
தமிழர் தலைவரின் பணியில் பல்வேறு முகங்களைக் காணலாம். கழகப் பொறுப்பாளர்கள் காண வரும் போது அவர்களிடம் அந்தந்த பகுதி பெரியார் தொண்டர்களின் நலம் விசாரிப்பு முதல் கழகத் தோழர்களின் பணி, எந்த பகுதி தோழர் இயக்கப் பணி ஆற்றாமல் நிகழ்ச்சிக்கு மட்டும் தலைகாட்டுகிறார் போன்றவற்றை கடகடவென இரண்டு நிமிடங்களில் விசாரித்து முடிப்பார். கல்வி யாளர்கள் வரும் அடுத்த நொடியே பல்வேறு நூல்களில் வந்துள்ள தகவல்களைச் சுட்டிக் காட்டி, இதற்கெல்லாம் நீங்கள் ஆதாரபூர்வ மாக மறுப்பெழுத வேண்டுமென தகவல் அளிப்பார்.
அமெரிக்கா போன்ற வெளிநாட்டு அழைப்புகளில் பேசும்போது, பன்னாட்டு தோழர்களையும் நலம் விசாரித்தும், இணைய தளத்தில் வரும் செய்திகளை பற்றி கலந்துரை யாடல், வெளிமாநிலங்களி லிருந்து வரும் இ-மெயில் களுக்கு உடனுக்குடன் பதில் அனுப்புதல்- பல்கலைக்கழக துணை வேந்தர்கள் சந்திக்கும் போது வரலாற்றில் உள்ள தகவல்கள் பற்றி விவாதம், முதல்வர் கலைஞரைச் சந்திக்கும் போது சமுதாய மறுமலர்ச்சிக்கும், ஏழை எளிய மக்களுக்குமான - சமூக நீதிக்கான உரையாடல்கள், பள்ளி, கல்லூரி மாணவர் களைச் சந்திக்கும் போது, முதலில் படிப்பு எனக் கூறி அவர்களிடம் பகுத்தறிவு சிந் தனை வளர்த்தல், அறிவியல் மனப்பான் மையை வளர்க்க பல்வேறு அரங்கங்கள், இப்படி எத்தனையோ இருக்கின்றன. சில மட்டும் இங்கே- சிந்தனைக்கு. இன்னும் பல்லாண்டு வாழ்க; பல கோடி தமிழர்கள் வாழ்க்கை உயர!
பா.சிவகுமார், ஒளிப்படக் கலைஞர்

No comments:


weather counter Site Meter