Pages

Search This Blog

Wednesday, December 15, 2010

மதப் போதையும் - மனித நேயமும்

அய்யப்பப் பக்தர்களைக் கேட்டுப் பாருங்கள். ஒரு மண்டலம் (40 நாள்கள்) விரதம் - புலால், புகை, மது, மாது, சூது என்ற எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது - ஒழுக் கத்தை வளர்க்கக் கூடிய சமாச்சாரம் என்று நீள மான கட்டுக் கதைகளை அளந்து கொட்டுவார் கள்.

(அது என்ன 40 நாள் கள் மட்டும் ஒழுக்கம்? அப்படியென்றால் மீதி நாள்களில்?)

மண்டல விரதம் இருந்தவர்க்கும், மனதில் ஆசை விட்டவர்க்கும், மலையை வந்து அடைந்த வர்க்கும் மகரஜோதியாய் தோன்றிடுவார் என்று பாட்டாய்ப் பாடுவார்கள்.

ஒரு தகவல்: கரூர் மாவட்டம் குளித்தலையில் திராவிடர் கழகத்தின் சார்பில் கிராமப் பிரச்சாரம் நடந்து கொண்டிருந்தது. கழகச் சொற்பொழிவாளர் முத்து கதிரவன் பேசிக் கொண்டிருந்தார். கொஞ்ச தூரத்தில் ஒரு ஆசாமி நிதானமிழந்து வீழ்ந்து கிடந்தார். அவர் அணிந்தி ருந்த உடையில் இருந்து அய்யப்பப் பக்தன் என்பது பளிச்செனத் தெரிந்தது.

ம(து)தப் போதை ஏறி ஆள் மல்லாந்து கிடப் பதைக் கண்டு கருஞ் சட்டைத் தோழர்கள் கேலி, கிண்டலில் ஈடுபடவில்லை.

எந்த ஊரோ - எங்குப் போக வேண்டுமோ? சரக்கு அடித்து ஆள் மல்லாந்து விட்டான். இரவு நேரம் என்ன ஆகுமோ? என்ற உணர்வில் பக்கத்திலிருந்து தண்ணீர் கொண்டு வந்து, முகத்தில் தெளித்து, வேட்டி அவிழ்ந்தது கூடத் தெரியாமல் கிடந்த அந்த அய்யப்பப் பக்தன் மீது ஊற்றி, ஆளைக் கொஞ்சம் உலுக்கித் தெளிய வைத்து, பத்திரமாக அனுப்பி வைத் தனர்.

இதில் இரண்டு விடயம் கவனிக்கத் தக்கதாகும். விரதம் இருந்தால் ஒழுக்கம் வளரும், மது, மாது, சூது, புகை இவையெல்லாம் புகை என்று கதை விடும் ஆசாமி கள், வரிந்து கட்டிக் கொண்டு எழுதும் ஏடுகள், இதழ்கள் - இது போன்ற காட்சிகளைக் கண்ட பிற காவது போதை தெளிந்து புத்தியுடன் நடந்த கொள்ள வேண்டும்.

இரண்டாவது - கடவுள் இல்லை, மதம் ஒழிக என்று கருதும், பிரச் சாரம் செய்யும் திராவிடர் கழகத்தினர் - கருப்புச் சட்டைத் தோழர்கள் - ஏதோ ஒரு பக்திக் கிறுக் கன் விழுந்து கிடக்கிறான் என்று கிண்டலடித்துச் செல்லாமல், அந்த ஆளைத் தெளிய வைத்து, வீட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைத்ததில் தலை தூக்கி நிற்கும் மனிதாபி மான உணர்வையும், பகுத் தறிவையும் கொஞ்சம் சீர் தூக்கிப் பார்க்க வேண் டும்.

கடவுளை மற -மனிதனை நினை!

என்ற தந்தை பெரியா ரின் தத்துவம் மனித குலத்துக்கு எவ்வளவுத் தேவை என்பதை நிதானத் துடன் நினைத்துப் பார்க்கட்டும்! - கருஞ்சட்டை

குறிப்பு: கரூர் மாவட்ட விடுதலை செய்தியா ளர் அலெக்சாண்டர் இந் தச் செய்தியை அனுப்பி உதவினார்.
http://www.viduthalai.periyar.org.in/20101215/news40.html

No comments:


weather counter Site Meter