Pages

Search This Blog

Thursday, December 9, 2010

தொலைத்தொடர்புத் துறையில் ஊழல் பி.ஜே.பி. ஆட்சியில்தான் தொடங்கியது-தொழிலதிபர் டாட்டா

ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கு கதை போல, தொழிலதிபர் ரத்தன் டாட்டா பா.ஜ.க. ஆட்சிக் காலத்தில், தொலைத்தொடர்புத் துறையில் நடைபெற்ற ஊழல்களை செதிர் தேங்காயாக உடைத்துத் தள்ளிவிட்டார்.

விவரம் வருமாறு:

ஜி.எஸ்.எம். செல்பேசி சேவையை நடத்த இல வசமாக அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற பெரு நிறுவனங்கள் ஒன்று கூடி, தங்களுக்குப் போட்டியாளர்கள் யாரும் இருக்கக்கூடாது என்ற வணிக நோக் குடன் கிளப்பி விட்டதே 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீடு பிரச்சனை என்று டாடா குழுமத்தின் தலை வர் ரத்தன் டாடா கூறியுள்ளார்.

புதுடில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங் கேற்றுப் பேசிய டாடா, 2ஜி அலைக்கற்றை ஒதுக் கீடு செய்வதற்கு 2008 இல் கடைபிடிக்கப் பட்ட கொள்கை, அலைக் கற்றையை இலவசமாக பெற்றுக்கொண்டு, ஏற்கெனவே செல்பேசி வணிகத்தை நடத்தி வரும் பெரு நிறுவனங்களுக்கு போட்டியை ஏற்படுத்தி, அவைகளை உடைத்து விடும் என்பதால் அதனை முறியடிக்க அந்நிறுவ னங்கள் கிளப்பி விட் டதே 2ஜி பிரச்சனை என்று கூறியுள்ளார்.

இன்றைக்கு இந்தக் கொள்கையை எதிர்க் கும் பாரதீய ஜனதா கட் சியின் தலைமையிலான ஆட்சி இருக்கும்போதே, அலைக்கற்றை ஒதுக்கீட் டுக் கொள்கையில் பல பல்டிகள் அடித்ததுள் ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும் என்று கூறியுள்ள ரத்தன் டாடா, 2ஜி அலைக் கற்றை ஒதுக்கீடு தொடர் பாக நடத்தப்பட்டு வரும் புலனாய்வை தான் ஆதரிக்கிறேன். அந்த புலனாய்வை 2001ஆம் ஆண்டு முதலே மேற் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

தொலைத் தொடர்பு (முன்னாள்) அமைச்சர் ஆ.இராசா கையாண்ட கொள்கையில் பெரும் பலனைப் பெற்றது டாடா நிறுவனமே என்று பார தீய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப் பினர் ராஜீவ் சந்திரசேகர் குற்றம் சாற்றியிருப்ப தற்கு பதிலளித்துள்ள ரத்தன் டாட்டா,

நீங்கள் எந்தக் கட்சி யைச் (பாஜக) சேர்ந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். உங்களுடைய அரசியல் எதிர்பார்ப்பும், பிரதமரையும், காங் கிரஸ் கட்சியையும் சங் கடத்தில் ஆழ்த்த வேண் டும் என்பதே; உங்கள் அரசியல் உள்நோக்கும் உங்கள் கடிதத்தில் நன் றாகவே வெளிப்பட்டுள் ளது என்று காட்டமா கப் பதிலளித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் இராசாவோ அல்லது எந்த ஒரு அமைச்சரும் தங்களது டாடா டெலி சர்வீஸஸ் நிறுவனத் திற்கு சாதகமாக எதை யும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் ரத்தன் டாடா.

2004ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை 48 புதிய உரிமங் களை வழங்கியதிலும், அதே நிறுவனங்களுக்கு பின்னாளில் மேலும் 65 மெகா ஹர்ட்ஸ் அள விற்கு மேலும் அலைக் கற்றைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது குறித் தும் இந்தியாவின் தலைமை கணக்காளர் மற்றும் தணிக்கையாளர் எந்த இழப்பீட்டு மதிப் பீட்டையும் செய்யாதது ஏன்? என்றும் டாடா கேள்வி எழுப்பியுள் ளார்.

பி.ஜே.பி. ஆட்சிக் காலத்திலிருந்து விசாரிக் கப்படவேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறிவிட் டதால், பல அதிர்ச்சி யூட்டும் தகவல்கள் வெளிவந்து பி.ஜே.பி.யின் முகத்திரை கிழிக்கப் படும் என்று தெரிகிறது.

கபில் சிபல்

மத்திய அமைச்சர் கபில்சிபல் ரத்தன் டாட்டா கூறியுள்ளவை அனைத்தும் உண் மையே என்றும் கருத் துத் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க தாகும்.http://www.viduthalai.periyar.org.in/20101209/news06.html

No comments:


weather counter Site Meter