Pages

Search This Blog

Wednesday, December 29, 2010

சோர்ந்து போகும் எதிர்க்கட்சிகள்!

2ஜி அலைக்கற்றைப் பிரச்சினை பூமராங்காக திருப்பித் தாக்க ஆரம்பித்துவிட்டது. தணிக்கை அதிகாரி - நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுமுன் நேரில் வந்து வெளியிட்ட தகவல் - இதுவரை ஆட்டம் போட்டவர்களைக் கொஞ்சம் அடக்கி வாசிக்கச் செய்யும் என்பதில் அய்யமில்லை.

ரூபாய் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி இழப்பு என்று பெரும் பிரச்சாரப் புயலில் ஒரு சதிக் கூட்டம் ஈடுபட்டது.

2001 ஆம் ஆண்டிலிருந்தே விசாரணை என்று சொன்ன மாத்திரத்திலேயே சில வட்டாரங்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது. அதனைத் தொடர்ந்து வெளிவரும் தகவல்கள் அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாகவும் இல்லை.

எந்தத் தணிக்கை அதிகாரியால் வீண் குழப்பம் ஏற் பட்டதோ, அதே தணிக்கை அதிகாரி நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு முன் தோன்றி, 2ஜி அலைக்கற்றை விடயத்தில் ரூ.57,666 கோடியிலிருந்து ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் வரை இழப்பு இருக்கலாம் என்று வெறும் அனுமானத்தால் எழுதியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். வெறும் யூகம், அனுமானம் என்ற அடிப்படையில் பழி தூற்றலாம்; அடுத்தவர்களைக் கொச்சைப்படுத்தலாம்; நாடாளுமன்றத்தையே 23 நாள்கள் நடக்கவிடச் செய்யாமல் முடக்கிப் போடலாம் என்றால், இது நாடுதானா? இங்கு நிலவும் நிருவாகத்தின் இலட்சணம் இதுதானா என்று வெட்கத்துடன் கேட்கத் தோன்றவில்லையா?

குற்றச்சாற்றுக்கு ஆளானவர்கள் சி.பி.அய். விசார ணைக்குச் சென்று கேட்ட கேள்விகளுக்கெல்லாம் தங்கு தடையின்றி விடையிறுத்துள்ளார்கள். நல்ல ஒத்துழைப்புக் கொடுத்ததாக விசாரணை அதிகாரிகளே கூறியிருக்கிறார் கள். மீண்டும் எப்பொழுது அழைத்தாலும் வரத் தயாராக இருக்கிறேன் என்று மானமிகு ஆ.இராசா கூறியுள்ளார்.

குற்றஞ்சாற்றப்பட்டவர் கம்பீரமாக இருக்கும் நிலையில், குற்றம் சுமத்தியவர்கள் முகம் சுருங்கிக் காணப்படு கிறார்கள்.

அரசியல், தேர்தல் துருப்புச் சீட்டு நம் கையை விட்டே போய்விடும் போலிருக்கிறதே - நமக்கு எதிராகத் திரும்பும் போலிருக்கிறதே என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் முன் நேரில் வரத் தயாராக இருக்கிறேன் என்று பிரதமர் டாக்டர் மன் மோகன் சிங் வாயால் சொன்னதோடு மட்டுமல்லாமல், எழுத்து வடிவத்திலும் பொதுக்கணக்குக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷிக்கு எழுதிவிட்டார்.

இதனை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை போலும்! பிரதமரை அழைக்கும் வழமையில்லை - அவர் நேரில் வரவேண்டுமானால் சபாநாயகர் அனுமதி பெற்றாக வேண்டும்; அதுபற்றி யோசித்து முடிவெடுப்போம் என்று பொதுக் கணக்குக் குழுவின் தலைவரே தடுமாற்றமாகப் பேச ஆரம்பித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவையின் பா.ஜ.க. தலைவர் சுஷ்மா சுவராஜ் என்ன சொல்லுகிறார்? நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின்முன் பிரதமர் வருவது வழமையல்ல; சட்டத்திலும் இடமில்லை. அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்கிறார்! பிரதமர் வரமாட்டார் என்ற நினைப்பில் இருந்தவர்களுக்கு, அவர் வரத் தயார் என்றவுடன், பந்து வேறு பக்கம் போய்விட்டதே என்று கலங்குகிறார்கள்.

இவ்வளவுக்கும் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளிமனோகர் ஜோஷி - பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களுள் ஒருவர். அவர் தலைமையிலான இந்தக் குழு தன் விசாரணையை வேகமாக நடத்த ஆரம்பித்துவிட்டது.

ஆனால், பா.ஜ.க. தலைவர்களோ அந்த விசாரணையை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை - இது என்ன வேடிக்கை - வினோதம்! கட்சிக்குள்ளேயே ஏன் இப்படிப் பட்ட கரணங்கள்!

முரளி மனோகர் ஜோஷிக்கு பிரதமரையே விசாரிக்கும் பெருமை போய்விடக் கூடாது என்று நினைக்கிறார்களா? அந்த விசாரணை குறிப்பிட்ட சில நாள்களுக்குள் முடிந்து விடும்; ஆனால், நாடாளுமன்ற கூட்டுக் குழு விசார ணையோ நீண்ட காலத்திற்கு இழுத்துக்கொண்டே போகும் - அதன்மூலம் நீண்ட காலத்திற்கு அரசியல் லாபத்தைத் துய்க்கலாம்; 5 மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற சுயநல அரசியல் நோக்கத்தில்தான் இப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது கொஞ்சம் கொஞ்சமாகப் பொதுமக்களுக்கும் விளங்க ஆரம்பித்துவிட்டது.

சோ ராமசாமி போன்றவர்கள் (துக்ளக் கட்டுரை) (சு.சாமி உள்பட) நாடாளுமன்ற கூட்டுக் குழுவால் பிரயோசனம் கிடையாது. பொதுக்கணக்குக் குழு விசாரணையே போதுமானது என்று எழுத, சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

பீம் சிங், இது என்ன குழப்பம்? என்று அறிஞர் அண்ணா அவர்கள் குறிப்பிடும் வசனம் போல, இன்றைக்கு எதிர்க்கட்சிகளிடையே குழப்பமும், மயக்கமும் போட்டி போடுகின்றன.

இந்த எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஊழல் குடலைப் புரட்டுகிறது. இந்த லட்சணத்தில் வெறும் யூகத் தின் அடிப்படையில் கதைவிடப்பட்ட ஒன்றைப் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருப்பது எதிர்க்கட்சிகளின் வெறுமையைத் தான் வெளிப்படுத்தும்.

இந்த நேரத்தில் தி.மு.க. இந்தப் பிரச்சினை குறித்துப் பொதுமக்களிடம் பரப்பிட புயல் வேகத்தில் பிரச்சாரத்தைக் கிளப்பியிருப்பது - மேலும் எதிர்க்கட்சிகளைச் சோர்வ டையச் செய்யும் - பொதுமக்களும் உண்மையை உணரக் கூடிய நல் வாய்ப்பும் கிட்டும் - நடக்கட்டும் பிரச்சாரம் நல்ல வகையில்!
http://www.viduthalai.periyar.org.in/20101229/news04.html

No comments:


weather counter Site Meter