Pages

Search This Blog

Thursday, December 9, 2010

தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது சூத்திரர் களின் அரசு என்று பிரகடனப்படுத்தியவர் கலைஞர்

வேலூரில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் ஆரியர் - திராவிடர் போராட்டம்பற்றி வெளிப்படையாகக் கருத் துத் தெரிவித்தார். முரசொலியில் மனுதர்மத்துக்கு மறுபிறவி கிடையாது என்றும் எழுதிவிட்டார். இதன் பொருளைத் தமிழர்களைவிடப் பார்ப்பனர்கள் மிகத் தெளிவாகவே, நுட்பமாகவே புரிந்துகொண்டுள் ளார்கள்.

திருவாளர் சோ ராமசாமியிலிருந்து, ஞாநி - டி.கே. ரெங்கராசன் எம்.பி., வரை நூலிழை வேறுபாடு இல்லாமல் ஒட்டுமொத்தமாகக் குழுப் பாட்டு (கோரஸ்) பாடியுள்ளனர்.

ஒருவர் பச்சையான ஆர்.எஸ்.எஸ்.காரர் - இன் னொருவர் லவுகீக வேடம் தரிக்கும் ஆபத்தான பார்ப்பனர் - மூன்றாமவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்.

தனக்கு நெருக்கடி வரும்போதெல்லாம் ஜாதி யத்தை கருணாநிதி கையில் எடுத்துக்கொள்வார். இந்த உளுத்துப்போன பழைய விதண்டாவாதம் தமிழகத்தில் எடுபடாது என்றெல்லாம் பேச, எழுத ஆரம்பித்துள்ளனர்.

உண்மையிலேயே இவர்கள் எல்லாம் பார்ப்பன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்தானா?

நாட்டில் ஜாதியப் பிரச்சினை உணர்வு என்பது இல்லாது போய்விட்டதா? அதுவும் தேர்தலில் இந்தப் பிரச்சினைக்கு இடம் இல்லாமற் போய்விட்டதா? சோ போன்ற பார்ப்பனர்கள் ஆண்டுதோறும் ஆவணி அவிட்டம் அன்று பூணூலைப் புதுப்பிக்காமல்தான் இருக்கிறார்களா? இவர்கள் வீட்டில் பூணூல் கல்யாணம் நடக்காமல்தான் இருக்கிறதா? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அறிவு நாணயமான முறையில் பதில் சொல்லிவிட்டு, அடுத்த வார்த்தை பேசவேண்டும்.

இந்த 2010 இலும் மனுதர்ம சாஸ்திரத்துக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, எழுதிக் கொண்டு இருக்கிறார் திருவாளர் சோ ராமசாமி. இதைப்பற்றி கல்கியில் பத்து வரி எழுதுவாரா திருவாளர் ஞாநி?

தனக்கு எதிரான சாட்சிப் பட்டியலில் இருந்தவர் களையெல்லாம் பிறழ் சாட்சியாக மாற்றிக் கொண்டு வருகிறாரே காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி - இதன் பின்னணிபற்றி ஓ பக்கங்களில் எழுத முன்வரட்டுமே பார்க்கலாம். டி.டி.கே. விஷயத்தில் சோ ராமசாமி என்ன எழுதுகிறாரோ - அதனைக் கடன் வாங்கித் தானே ஞாநி அய்யர்வாள் எழுதுகிறார்.

இராமாயணம் உள்ளிட்ட இதிகாசங்களும், புரா ணங்களும் ஆரியர் - திராவிடர் போராட்டத்தை மய்ய மாகப் புனையப்பட்டவை என்பதுதான் வரலாற்று ஆசிரியர்களின் கணிப்பாகும்.

ஆனால், தீக்கதிர் தீபாவளி மலர் வெளியிடுகிறதே - இதுகுறித்து திருவாளர் டி.கே. ரெங்கராசன் எம்.பி. என்ன கருதுகிறாரோ! இவையெல்லாம் உளுத்துப் போன பழைய குப்பை என்பது இந்தக் காம்ரேடின் கண்களுக்குத் தெரியாதோ!

இவர்கள் 1967 இல் தி.மு.க.வுடனும், சுதந்திராக் கட்சியுடனும் கூட்டணி வைத்துத் தேர்தலில் ஈடுபட்ட போது பூணூலைப் பிடித்துக் கொண்டு பிராமணர்களே தி.மு.க.வுக்கு ஓட்டுச் செய்யுங்கள் என்று சொன்ன போது, தோழர் பி. இராமமூர்த்தியோ மற்ற காம்ரேடு களோ தேர்தலில் இப்படிப் பச்சையாக ஜாதிய வாதத்தை முன் வைக்கக் கூடாது என்று சொன்ன துண்டா? ஆச்சாரியாரைக் கண்டித்ததுண்டா? தெரிந்துகொள்ள ஆர்வமாக இருக்கிறோம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் களுள் ஒருவரான சோம்நாத் சட்டர்ஜி தன் பேரன் பூணூல் கல்யாணத்துக்குப் பத்திரிகை அடித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக்கூட அழைப்புக் கொடுத்தாரே - ஊர் சிரித்தது எல்லாம் மறந்து போய்விட்டது என்று நினைப்பா?

பிராமணர் சங்கம் மாநாடுகளை நடத்துகிறதே - அந்தணர் ஆற்றிய அருந்தொண்டு என்று தொகுதி தொகுதியாக நூல்களை வெளியிடுகிறதே - அவற்றை சங்கராச்சாரியார் வெளியிட்டு, கடவுளுக்குமேலே பிராமணன் என்று முழங்கியபோது, இந்த முற்போக்குத் திலகங்களின் பேனாக்கள் எங்கே போய் ஒளிந்து கொண்டன?

தமிழ்நாடு சட்டப் பேரவையிலேயே இது சூத்திரர் களின் அரசு என்று பிரகடனப்படுத்தியவர் கலைஞர்.

அய்ந்தாவது முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த நிலையில் (1) அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை சட்டம் - 69 சதிவிகித அடிப்படையில் அதில் இட ஒதுக்கீடு - பயிற்சி (2) புராண தமிழ் வருடங் களைத் தூக்கி எறிந்து தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்று சட்டம் (3) தமிழ் செம்மொழி அங்கீகாரம் (4) பெரியார் நினைவு சமத்துவப் புரங்கள் (5) தீட்சதர்களின் கைகளில் இருந்த சிதம்பரம் நடராஜன் கோயில் இந்து அறநிலையத் துறையின் கீழ் (6) வடலூர் சத்திய ஞான சபையிலிருந்து பார்ப்பனர் வெளியேற்றம் - இத்தியாதி நடவடிக்கைகள் பூணூல் கூட்டத்திற்கு நெரிகட்ட வைத்துவிட்டன. அந்தக் கோபத்தில்தான் எல்லா மூலைகளிலும் உள்ள பார்ப் பனர்களும் ஒன்று சேர்ந்து கலைஞர் மீது சேறு வாரி இறைக்கிறார்கள் என்பதைத் தமிழர்கள் உணர்வார் களாக!
http://www.viduthalai.periyar.org.in/20101209/news02.html

No comments:


weather counter Site Meter