Pages

Search This Blog

Tuesday, December 7, 2010

ஆ.இராசா ஊழல் செய்தார் என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா?-திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி சவால்

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் ஆ.இராசா ஊழல் செய்தார் என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டுள்ளதா? திருச்சி பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் சவால்!

திராவிடர் இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது! பேரா.சுப. வீரபாண்டியன்


முன் னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா மீது சில ஊடகங்களின் வேட்டை ஏன்? திராவிடர் கழக எழுச்சி மிகு பொதுக் கூட்டம் நேற்று மாலை சரியாக 6.00 மணிக்கு திருச்சி புத்தூர், நான்கு சாலையில் நடைபெற் றது. இப்பொதுக் கூட்டத் திற்கு திருச்சி மாவட்ட தி.க. தலைவர் மு.சேகர் தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்டச் செயலாளர் மா.செந்தமி ழினியன் வரவேற்புரை யாற்றினார். மண்டலத் தலைவர் ஞா.ஆரோக்கி யராஜ், மாவட்ட அமைப்பாளர் மூ.இள வரி, மாநகரத் தலைவர் கணேசன், செயலாளர் செயராஜ், பெரியார் வீரவிளையாட்டு கழகத் தலைவர் பேரா.ப.சுப்பிர மணியன், லால்குடி மாவட்ட தலைவர் வால் டர், செயலாளர் ஆல் பர்ட் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.

உரையாற்றியோர்

இக்கூட்டத்தில் திரா விடர் கழகத் தலைவர் கி.வீரமணி, திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செய லாளர் பேரா.சுப.வீர பாண்டியன், தொலைக் காட்சி ஊடகவியலாளர் ரமேஷ்பிரபா, திராவிடர் கழகப் பொதுச் செயலா ளர் சு.அறிவுக்கரசு ஆகி யோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது உரை யில் குறிப்பிட்டதாவது:

ஆ.இராசா மீது ஆதா ரமற்ற பொய் பிரச்சாரத் தால், பார்ப்பனர் ஊட கங்களின் கற்பனை செய்தி களால் தி.மு.க. ஆட்சி வருவதை தடுத்துவிட முடியாது. மீண்டும் ஆறா வது முறையாக கலை ஞர் முதல்வர் ஆவார்.

இராசா செய்த புரட்சி

திராவிடர் கழகம் என்றைக்கும் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் அல்லர். சமுதாயப் பணிக்காகத்தான் திரா விடர் கழகம் இயங்கி வருகிறது. தி.மு.க.வின் தலைமைக்குக் கட்டுப் பட்டுதான் நமது இராசா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இராசாவின் அமைதி புரட்சியால் இன்றைக்கு கைபேசி கட்டணங்கள் குறைந்துள்ளன.

முன்பிருந்த அமைச்சர்கள் செய்தது

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் அலை வரிசை ஒதுக்கீடு செய்த தில் ரூபாய் ஒரு லட் சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாற்றை கூறுகின் றனர். பொதுவாக ஆடிட் டர் ஜெனரல் தாக்கல் செய்த அறிக்கையில், ஊழல் நடந்ததாக ஒரு இடத்திலாவது குறிப்பிடப்பட்டுள்ளதா? மேலும் இராசா பெய ரும் குறிப்பிடப்பட்டுள் ளதா? டிராய் அமைப் பின் கொள்கையின்படி தான் இராசா அலை வரிசை ஒதுக்கீடு செய் தார். இராசாவுக்கு முன்பு பதவியில் இருந்தவர்கள் பிரமோத் மகாஜன், அருண்ஷோரி, தயாநிதி மாறன் ஆகியோர் பின் பற்றியதைத்தான், அதே கொள்கைப்படிதான் இராசாவும் செய்தார். ஒரு லட்சத்து 76 ஆயி ரம் கோடி ரூபாய் வரு மானம் இழப்பு ஏற்பட் டுள்ளது என்றுதான் யூகிக்கப்பட் டுள்ளது. சி.ஏ.ஜி. அறிக்கை குற்றப் பத்திரிகை அல்ல. தற் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை வேண் டுமென்று கூறி வருகின் றன. இந்தக் கூட்டுக்குழு விசாரணையால் ஒரு பயனும் இல்லை. ஆதா ரமற்ற பொய்ப் பிரச்சா ரத்தில் கற்பனையான குற்றச்சாற்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற்படுத்தவே!

தி.மு.க.வுக்கு அவப்பெயர் ஏற் படுத்தவே இதுபோன்ற குற்றச்சாற்றை கூறி வருகின்றனர். வருகின்ற 2011 சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறக் கூடாது என்று எண்ணுகின் றனர். ஆனால் ஆறாவது முறையாக தி.மு.க. ஆட்சி அமைவது உறுதி.

- இவ்வாறு தமிழர் தலைவர் கி. வீரமணி பேசினார். சுப.வீரபாண்டியன் உரை


சுப. வீரபாண்டியன் ஆற்றிய உரை வருமாறு:

பழைய சேரி, புதுச்சேரிக்கு வருவ தையே பொறுத்துக் கொள்ளாத பார்ப்பனக் கூட்டம், புதுடில்லிக்கு, இராசா போனதையா பொறுத்துக் கொள்வார்கள்? இன்றைக்கு இராசா விசயத்தில் சில ஊடகங்கள் செய்து வரும் பொய்ப் பிரச்சாரத்தால் ஒன் றும் செய்ய முடியாது. திராவிடர் இயக்கத்தை சோ ராமசாமியும், சு.சாமியும், வேறு எந்த சாமி நினைத் தாலும் அழித்து விட முடியாது. - இவ்வாறு அவர் பேசினார்.


ரமேஷ்பிரபா

தொலைக்காட்சி ஊடகவியலாளர் ரமேஷ் பிரபா தனது உரையில் கூறிய தாவது: பெரும் முதலாளிகளின் கைகளில் ஆங்கில ஊடகங்கள் அதிகமாக இருந்து வருகின்றன. ஹெட்லைன் டுடே போன்ற ஊடகங்கள் 2 ஜி ஸ்பெக்ட்ரம் சம்பந்தமாக வெளி யிட்டு வரும் செய்திகளால் பெரிய மாற்றம் ஒன்றும் வரப்போவதில்லை. அந்த சேனல்களை பார்ப்பவர்கள் மிகவும் குறைவு. நூற்றுக்கு

ஜீரோ ஒன்று சதவிகிதம் பார்க்கக் கூடிய ஆங்கில ஊடகங்களால், ஒரு பொய் யான, ஆதாரமற்ற குற்றச்சாற்றை இராசாவின் மீது சுமத்தப்பட்டு மீண்டும் மீண்டும் சொல்லி வருவதால் அது உண்மையாகாது. இளைஞர்கள், மாணவர்கள் இதுபோன்ற ஆங்கில ஊடகங்களுக்கு செல்லும்போது, இந்த வட நாட்டுப் பெரு முதலாளி களை புறந்தள்ளி விட்டு, அந்த இடங்களுக்கு புதிய தலைமுறைகள் வரவேண்டும். அப்பொழுதுதான் உண்மையான செய்திகள் மக்களுக் குச் சென்றடையும். இதுபோன்ற திரிபுவாத செய்திகளைத் தடுத்துவிட லாம். - இவ்வாறு ரமேஷ் பிரபா பேசினார்.

சு.அறிவுக்கரசு

திராவிடர் கழகப் பொதுச்செய லாளர் சு. அறிவுக்கரசு பேசியதாவது:

இன்றைக்கு பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள், இந்நாளில் இராசாவைப் பற்றி, அவர் பணியாற்றி தொலைத்தொடர்பு துறையில் கடந்த மூன்றாண்டு காலம் சூட்சமம் இல்லாமல் ஆற்றிய பணியைப்பற்றி பேசுவது சரியாக இருக்கும் என்று கருதுகிறோம். திராவிடர்

கழகம் ஆதாரம் இல்லா மல் எதையும், என்றைக்கும் பேசிய தில்லை. சென்னையில் தொடங்கி, இன்றைக்கு நாடு முழுவதும் ஸ்பெக்ட் ரம் விவகாரத்தில் நடந்த உண்மை களை எடுத்துக் கூற திராவிடர் கழகம் முன்வந்திருப்பது பல வகையில் பார்ப்பன ஊடகங்களும், பார்ப்பன கூட்டங்களும், இராசா ஒரு சமூகத்தை சார்ந்தவர் என்பதால், பழி தீர்த்து விடலாம் என்ற எண்ணத்தை முறியடிக்கவே தமிழர் தலைவர் இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளார். - இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் இப்பொதுக் கூட்டத்தில் மாநகர ப.க. தலைவர் மதிவாணன், செயலாளர் மலர்மன்னன், தி.தொ.க. பேரவை பொதுச் செயலாளர் ஆறு முகம், தி.தொ.க. அமைப்புச் சாராத் தொழிற்சங்கத் தலைவர் திராவிடன் கார்த்திக், மாநகர அமைப்பாளர் விடுதலை செல்வம், திருவரங்க நகரத் தலைவர் குமார், செயலாளர் மோகன் தாஸ், மாவட்ட இளைஞரணித் தலைவர் நேதாஜி, மாநகர இளை ஞரணி அமைப்பாளர் குணசேகரன், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் தமிழ்ச்சுடர், உண்மை துரை, ஆசிரியர் நற்குணம், த.அண்ணாதுரை, ஆட்டோ பழனி, திருவரங்கம் சண் முகம், ந.வீரமணி, மாவட்ட வழக்கறி ஞரணித் தலைவர் மு.வீரமணி, சேவியர், குத்புதீன், ரெஜினா பால்ராஜ், கே.கே.நகர் பகுதி தலைவர் மூர்த்தி, இலால்குடி ஒன்றியத் தலைவர் உலகநாதன், செயலாளர் பிச்சைமணி ஆகிய திராவிடர் கழக பொறுப் பாளர்களும், தோழர்களும் மற்றும் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர்களும், திரளான பொதுமக்களும் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மா.தமிழ் மணி நன்றி கூறினார்.

http://www.viduthalai.periyar.org.in/20101207/news12.html

No comments:


weather counter Site Meter