Pages

Search This Blog

Saturday, December 4, 2010

அண்ணல் அம்பேத்கர் பற்றிய திரைப்படத்தைத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று பார்க்க வேண்டும்-கி. வீரமணி

தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டு வெளிவந்துள்ள அண்ணல் அம்பேத்கர் பற்றிய திரைப்படத்தைத் தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று பார்க்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிக்கை வருமாறு:
இந்திய அரசமைப்புச் சட்ட நிர்ணய அமைப்பின் தலைவராக இருந்தவரும், உலக அறிஞர்களின் பட்டியலில் மிக முக்கிய இடத்தை வகிப்பவரும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவரும், இந்து சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாத நிலையில், கொள்கை பெரிது - பதவி பெரிதல்ல என்று, தமது மத்திய சட்ட அமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தவரும், லண்டனில் நடைபெற்ற வட்டமேஜை மாநாட்டில் தாழ்த்தப்பட்டோருக்குப் பிரதிநிதி நீங்கள் இல்லை என்று காந்தியாரிடமே நேருக்கு நேர் விவாதம் செய்தவருமான அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பற்றிய திரைப்படம் தமிழில் மொழி மாற்றம் செய் யப்பட்டு, தமிழ்நாட்டில் நேற்று முதல் பல திரை யரங்குகளில் ஓடிக் கொண்டு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் உதவி
தமிழ்நாடு அரசு ஏற்கெனவே அறிவித்தபடி, மொழி மாற்றம் செய்யப்பட்ட அம்பேத்கர் திரைப்படத்திற்கு ரூ.10 லட்சம் நிதியை அளித்து ஊக்குவித்துள்ளது - அம்பேத்கர்பற்றிய தமது நல்லெண்ணத்தையும் புலப்படுத்தியுள்ளது.
இந்தத் திரைப்படத்தை தமிழர்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று பார்த்து, இந்தியில் வெளிவந்த இந்தப் படம் ஓடிய நாட்களைவிட தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்ட இந்தப் படம் அதிக நாட்கள் ஓடியது என்கிற சாதனை யைத் தமிழ்நாட்டில் நிகழ்த்திக் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

தந்தை பெரியாரும் - அண்ணல் அம்பேத்கரும்!
தந்தை பெரியாரும், அண்ணல் அம்பேத்கரும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்ற வர்கள்.
பல சந்தர்ப்பங்களில் ஒருவரை ஒருவர் சந் தித்து இந்தியாவில் வேர்ப் பிடித்துள்ள பார்ப் பனர்கள் ஆதிக்கத்தையும், வருணாசிரமத் தையும் வேரோடு வீழ்த்தவேண்டும் என்பதிலே கருத்தொருமித்து வரலாற்றில் நின்றவர்கள்.
பெரியார் திரைப்படம்
தமிழ்நாட்டில் பெரியார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிய நிலையில், இப்பொழுது தெலுங்கில் மக்களின் பேராதரவோடு ஓடிக் கொண்டிருக்கிறது. பாடல் ஒலிப் பேழைகள் மட்டுமே ஒரு லட்சத்துக்கு மேல் விற்பனை யாகி இருக்கின்றன என்பது மிகவும் மகிழ்ச்சியான தகவலாகும்.
ஊடகங்கள் எல்லாம் பார்ப்பனர்களின் கைகளில் பத்திரமாக இருக்கும் நிலையில், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்பற்றி உண்மை விவரங்கள் கடைகோடி மக் களுக்கும் சென்றடைய இந்தத் திரைப்பட ஊடகம் மிகவும் முக்கியமானது.
குடும்பம் குடும்பமாகப் பார்ப்பீர்!
எனவே, அருமைத் தமிழ்க் குடிமக்களே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை மக்களே! இந்தத் திரைப் படத்தைப் பார்ப்பது நமது அடிப்படையான கடமை என்பதை மனதிற்கொண்டு, குடும்பம் குடும்பமாகச் சென்று பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
சென்னையில் ஒரு நாளில் கழகத் தோழர்களுடன் சென்று நானே பார்க்க இருக் கிறேன்.
படம் பார்த்தவர்கள் மற்றவர்களுக்கும் எடுத்துச் சொல்லி, அவர்களையும் பார்க்க வைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன். இது ஒரு சமுதாயக் கடமையும்கூட!

 
தலைவர்,
திராவிடர் கழகம்
குறிப்பு: சென்னையில் அம்பேத்கர் திரைப்படம் சத்யம் சினிமாஸ், அய்நாக்ஸ், எஸ்கேப், அபிராமி, ஆல்பட், மாயாஜால், பி.வி.ஆர்., ஏஜிஎஸ்., அம்பத்தூர் ராக்கி, சந்திரன் ஆகிய திரையரங்குகளில் ஓடிக் கொண்டுள்ளது.

No comments:


weather counter Site Meter