கல்கி போன்ற பார்ப் பன இதழ்கள் - நம் மக்கள் கல்வியில் வளர்ந்து வருவ தைக் கண்டு பொறுக்க முடியாத நிலையில் சில கீழறுப்பு வேலைகளைச் செய்வதாகத் தெரிகிறது.
பொதுவாகப் பக்தியைப் பரப்புவதேகூட தன்னம்பிக் கையைப் பறிமுதல் செய் வதற்குத்தான். நம்மால் முடியும் என்ற உறுதியைத் தகர்ப்பதுதான் அதன் உள் நோக்கமாகும். கடவுளை நம்பினால் போதும் - உழைக்க வேண்டாம் - கேட்டது கிடைக்கும் என்பது உருப்படுவதற்குச் சொல்லப்படும் வழியா?
சென்டிமென்ட் என்ற தலைப்பில் மக்கள் மத்தி யில் மூட நம்பிக்கைக் களை களைத் திணிப்பதில் அது இறங்கி இருப்பதன் நோக் கம் மிகவும் ஆபத்தானது.
பள்ளியிறுதித் தேர் வுக்கு முதல் நாள்வரை சுமார் 15 நாள்கள் மஞ்சள் காமாலை நோயால் பாதிக் கப்பட்டு படுத்த படுக்கை யில் இருந்தேன். படித்த பாடங்கள் எல்லாம் ஞாபக மில்லை. பள்ளியிறுதித் தேர்வு எழுத நான் புறப் பட்டபோது, காஞ்சிபுரத்தில் குடியிருக்கும் சித்தி விநாய கரைத் தரிசித்துவிட்டு பரீட்சை எழுதப் போகச் சொன்னார் என் அப்பா. நானும் அவ்வாறே சென் றேன். தேர்வு முடிவு வெளி வந்த அன்று முதலில் அவரை தரிசித்த பின்னர் தான் நாளிதழையும் பார்த் தேன். தேர்வில் வெற்றி பெற்றிருந்தேன் - என்று பொள்ளாச்சியிலிருந்து ஒரு மாணவர் எழுதியதாகக் கடிதம் ஒன்றை கல்கியில் வெளியிடப்பட்டது.
இப்படி வெளியிடப்படும் ஒவ்வொரு கடிதத்திற்கும் 50 ரூபாய் பரிசாம்.
கடுகளவு புத்தி உள்ள எவருக்கும் தெரியும்- படிக் காமல், முயற்சிகளை மேற் கொள்ளாமல் தேர்வில் வெற்றி பெற்று விடமுடி யாது.
அதுவும் இந்தப் பைய னுக்கு மஞ்சள் காமாலை நோய் வந்து படித்ததெல் லாம் மறந்து போய்விட்ட தாம். சித்தி விநாயகரைக் கும்பிட்டவுடன் மறந்ததெல் லாம் நினைவுக்கு வந்து விட்டதா?
கேழ்வரகில் நெய் வடி கிறதாம் கையில் கிடைத்த பாத்திரங்களை எடுத்துக் கொண்டு ஓடி வாருங்கள், நிரப்பிக் கொண்டு போக லாம் என்று சொல்லும் ஏமாற்றுக்காரனுக்கும், அதை நம்பிக்கொண்டு பாத்திரங்களைத் தூக்கிக் கொண்டு ஓடிவரும் கேனையனுக்கும் - இந்தப் பக்திப் பிரச்சார ஆசாமி களுக்கும் என்ன வித்தி யாசம்?
எந்தப் பார்ப்பான் வீட் டுப் பிள்ளையும் இதனைச் செய்யப் போவதில்லை. அவங்கெல்லாம் சமத்தா படிச்சுண்டு வருவா.
இதை நம்பி நம் இனத் துப் பிள்ளைகள் படிப்பைக் கோட்டை விட்டு விடக் கூடாது. நம் மக்கள் படிக் காமல் பிள்ளையாரைக் கும்பிட்டு உருப்படாமல் போகவேண்டும் என்ற சூழ்ச்சிகூட இதில் இருக்க லாம் - எச்சரிக்கை!
- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101214/news01.html
Search This Blog
Tuesday, December 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment