காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் திக்விஜயசிங் எழுப்பிய கேள்விகள் பாரதீய ஜனதா சங் பரிவார் வட்டாரத்தில் பல அதிர்வுகளை ஏற்படுத்திவிட்டன.
மும்பைத் தாக்குதலில் மகாராட்டிர மாநில பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுத் தலைவர் ஹேமந்த் கர்காரே கொல்லப்பட்ட விதம் பல அய்யப்பாடுகளைத் தொடக்க முதலே ஏற்படுத்தியது. மத்திய அமைச்சராக உள்ள அப்துல் ரகுமான் அந்துலே அவர்களே நாடாளு மன்றத்திலேயே தன் அய்யப்பாட்டைப் பதிவு செய்தார்.
அதே பிரச்சினையைத்தான் காங்கிரஸ் கட்சியில் அகில இந்தியப் பொதுச்செயலாளர் திக்விஜயசிங் கிளப்பி உள்ளார்.
இதற்கு நியாயமான மறுப்பு இருந்தால் அதனைத் தருவதுதான் அறிவு வயப்பட்டவர்களுக்கு அழகே தவிர, எவ்வாறு எப்படி சொல்லலாம் என்று தாண்டிக் குதித்தால் - அதுவும் பா.ஜ.க. சங் பரிவார்க்கும்பல் தாண்டிக் குதித்தால், அது சந்தேகப்படக் கூடிய ஒன்றாகவே இருக்கும்.
எந்தச் சூழ்நிலையில் அவர் கொல்லப்பட்டார் என்பதுதான் முக்கியமாகும்.
மகாராட்டிர மாநிலம் மாலேகான் சிமி அலுவலகம் முன் குண்டு வெடிப்பில் (29.9.2008) அய்ந்து பேர் பலி யானார்கள். 90 பேர் படுகாயமடைந்தனர். மோட்டார் சைக்கிளில் டைமர் கருவி பொருத்தப்பட்டு வெடிகுண்டு வெடிக்கச் செய்யப்பட்டுள்ளது.
அந்த மோட்டார் சைக்கிளுக்கு உரிமையாளர் ஒரு பெண் சாமியார். அவர் பெயர் சாத்வி பிரக்ஞா தாக்கூர். மாணவப் பருவந்தொட்டு ஆர்.எஸ்.எஸ். என்ற அமைப் புடன் தொடர்பு உடையவர். குஜராத் மாநில முதல மைச்சர் நரேந்திர மோடியின் பேரன்புக்கு மிகவும் பாத்திரமானவர்.அதனால் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர் குஜராத்துக்கே குடியேறிவிட்டார்.
இந்தக் குண்டு வெடிப்பில் மூளையாக இருப்பவர் இந்திய இராணுவத்தின் மிக முக்கியமான புலனாய்வுத் துறையில் பணி புரிந்தவர் - கர்னல் சிறீகாந்த் புரோகித்.
மாலேகான் குண்டு வெடிப்பில் பயன்படுத்தப்பட்ட வெடிமருந்து - இராணுவத்தில் மட்டுமே பயன்படுத்தப் படக் கூடியதாகும். இதன்மூலம் இராணுவ அதிகாரி புரோகித்துக்கு இதில் உள்ள தொடர்பை வலுவாக அறுதியிட்டுக் காட்டமுடியும். இந்த ஆசாமி நாசிக் அருகில் இராணுவக் கல்லூரி ஒன்றை நடத்துபவர்.
வெடிகுண்டுகளைத் தயாரிப்பது எப்படி? கையா ளுவது எப்படி? என்பது போன்ற பயிற்சிகள் இந்தக் கல்லூரியில் கொடுக்கப்பட்டுவருகின்றன.
கர்னல் சிறீகாந்த் புரோஹித், பெண் சாமியார் பிரக்ஞாசிங் தாக்கூர், சாமியார் தயானந்த பாண்டே, சிவநாராயண கல்சங்கரா, ஷாம் சாகு, முன்னாள் இராணுவ அதிகாரி ரமேஷ் உபாத்யாயா, சமர்குல் கர்னி, அஜய ரசிர்கர், ராகேஷ் தாவ்டே, சுதாகர் சதுர் வேதி ஜெகதீஷ் மார்த்ரே ஆகியோர் குற்றவாளிகள் என்பதைக் கண்டுபிடித்தவர் கார்கரே!
பரிதாபாத், போபால், ஜெய்ப்பூர், இந்தூர், நாசிக் முதலிய இடங்களில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு களிலும் இந்தக் கும்பலுக்குத் தொடர்பு உண்டு என்ற தகவல்கள் திரட்டப்பட்டு 4000 பக்கங்கள் கொண்ட அறிக்கை தயாரிக்கப்படுவதற்குக் காரணமாக இருந்தவர் கார்கரே.
அத்தகைய திறமையும், கடமை உணர்வும் நிறைந்த ஒரு காவல்துறை உயரதிகாரி மர்மமான முறையில் கொல்லப்பட்டார் என்றால் அது குறித்த சந்தேகங் களை எழுப்பக் கூடாதா?
மத்திய அமைச்சர் எழுப்பிய வினாக்கள் அப்படியே இன்று வரை நிற்கின்றனவே.
தீவிரவாதத் தடுப்புக் குழுவின் தலைவர் ஹேமந்த் கார்கரேயையும், அவருடன் இரு மூத்த அதிகாரி களையும் சேர்த்து காமா மருத்துவமனைக்கு அனுப்பி யவர்கள் யார்? உத்தரவிட்டது யார்? எந்தச் சூழ் நிலையில் அந்த மூன்று மூத்த அதிகாரிகளும் பொதுவாக யாரும் அறிந்த சம்பிரதாயப்படி ஒரே வாகனத்தில், சம்பிரதாய விதிகளை (Protocol Norms) மீறி பயணம் செய்தனர். சிஎஸ்டி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த அம் மூவரையும் அங்கிருந்து விடுவித்தது யார்? தாஜ் ஓட்டலுக்கும், ஓபராய் ஓட்டலுக்கும் போகாமல் காமா மருத்துவமனைக்கு அம் மூவரையும் அனுப்பி வைத்ததில் ஏதோ காரணம் இருக்கவேண்டும். அந்தக் காரணம் என்ன?
தீவிரவாதிகள் என்றால் முஸ்லிம்கள்தான் என்று பிரச்சாரம் செய்து வைக்கப்பட்ட நிலையில், அது உண்மைக்கு மாறானது என்பதை உண்மையான தீவிரவாதிகளை ஆணிவேர்வரை சென்று கண்டு பிடித்த ஒருவர் திடீர் என்று மர்மமான வகையில் கொல்லப்பட்டது குறித்து கேள்வி எழுப்பக்கூடாதா? அதைத் தானே காங்கிரஸ் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் செய்துள்ளார்.
மகாராட்டிர மாநிலக் காவல்துறை முன்னாள் தலைவர் முஷ்ரீஃப் எழுதிய நூல் ஒன்றில் (Who Killed Karkare) அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளிச் சத்துக்குக் கொண்டு வந்துள்ளாரே!
பா.ஜ.க. கதறுகிறது என்றால் அதற்கு அர்த்தம் உண்டு. காங்கிரஸ் தலைவர்களுக்கு என்ன வந்தது? திக் விஜய்சிங் சொன்னது அவரின் தனிப்பட்ட கருத்து என்று ஏன் சொல்லவேண்டும்?
காங்கிரசே கொஞ்சம் பதமான இந்துத்துவா அமைப்பாக இருப்பதுதான் இதுபோன்ற அணுகுமுறை களுக்குக் காரணம் என்ற பொதுவான அபிப்பிரா யத்தை இது உறுதி செய்கிறதோ என்றுதான் கருத வேண்டியுள்ளது.
http://www.viduthalai.periyar.org.in/20101214/news06.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment