Pages

Search This Blog

Friday, December 17, 2010

ஆ.இராசா செய்த குற்றமென்ன?

பெரியாரின் கொள்கையை அரசியல் களத்திலும், சமூகத்தளத்திலும் சாதனை களாக மாற்றிய கலைஞரின் அன்புத்தம்பி என தன்னை அடையாளம் காட்டிக் கொள்ளும் முன்னாள் மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ஆ.இராசா, அவர்கள் உலகிலேயே மிகக் குறைந்த தொலைபேசிக் கட்டணம் உள்ள நாடு இந்தியா என்றும், தொலை தொடர்புத் துறையில் ஒரு புரட்சியே ஏற்படுத்தப்பட் டுள்ளது என்றும் பெருமையுடன் தெரி விக்கின்றார்.

தொலை தொடர்பு துறையில் மாதந் தோறும் 2 கோடி புதிய இணைப்புகள் கொடுத்திடவும், 2009 ஆம் ஆண்டில் 39 சதவிகிதமாக இருந்த தொலை தொடர் பின் அடர்த்தியை 53 சதவிகிதமாக மாற்றிடவும், 2012 இல் எட்ட வேண்டிய இலக்கான 60 கோடி தொலைபேசி இணைப்புகளை 2010 மார்ச்சுக்குள் முடித் திட்டதையும், தனியார் நிறுவனங்களுடன் போட்டி போட்டு மிக குறைந்த கட்டணத் தில் தொலைபேசியை உபயோகப்படுத்த வைத்ததையும், 3ஜி சேவையை மூடி மறைத்து வைத்து இத்துணை ஆண்டுகள் பயன்படாமல் வைத்திருந்ததைக் கண்டு பிடித்து மக்களின் சேவைக்கு பயன்படுத்த வைத்ததையும் பாராட்டாமல் அவர் மீது வசைபாடுகின்றனர்.

தொலைத் தொடர்புத் துறையில் புரட்சி!

தொலை தொடர்பு தகவல் தொழில் நுட்ப சேவைகள் இன்று மக்களுக்கு எளிய முறையில் கிடைத்திடவும் கடந்த 10 ஆண்டுகளில் தகவல் தொழில் நுட்பம் பலவகையில் வளர்ச்சி அடைந்துள்ளதற்கு தகவல் தொழில் நுட்பமும், தொலைத் தொடர்புதுறையில் புரட்சியும் முக்கிய காரணமாகும். இன்று உலகிலேயே இரண் டாவது இடத்தில் இந்தியாவின் தொலை தொடர்பு நெட்வொர்க் உள்ளதென்றால் அதன் பெருமையை உலகுக்கு நிலை நாட்டிய பெயருக்குச் சொந்தக்காரர் முதலமைச்சர் கலைஞரின் அன்புத்தம்பி ஆ.இராசாவே ஆவார்.

120 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இந்நாட்டில் 22 ஆட்சி மொழிகளில் பல்வேறு இனங்கள் அடிப் படை கட்டமைப்பு வசதிகளால் வித்தி யாசம், கல்வி, அரசு சேவைகள் பெறுதல், தகவல்களை உடனுக்குடன் பெறுதல் என எல்லாவற்றிலுமே ஒரு பகுதிக்கும், இன் னொரு பகுதிக்கும் பெருத்த வித்தியா சங்கள் இருக்கின்றன. அவசரமான முக்கியமான தகவல்களை மக்களுக்கு உடனுக்குடன் தெரிவிப்பதிலும், பொது சேவைகளை விரைந்து நிறைவேற்று வதிலும், அவை மக்களை சென்றடையச் செய்வதிலும் தற்போது உள்ள நடை முறைகளை விட, தகவல் தொழில்நுட்பத் தின் உதவியுடன் செயல்படுத்துவது மிகவும் சிறப்பாகவும், விரைவாகவும் இருக்கும் என்றும் மின்னணு சேவை உள்ளிட்ட சேவைகளைப் பெற முடியாத நிலையில் இருக்கும் அல்லது குறைவாகப் பெறும் மக்களுக்கு இவற்றை கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். எனவே, அதற்கேற்ற திட்டங்களை வேகமாகச் செயல்படுத்தினார்.

இ-நிருவாகப் பணி

அரசுப் பணிகளில் தகவல் தொழில் நுட்பம் மற்றும் தொலை தொடர்பு தொழில் நுட்பத்தைப் புகுத்தியதில் தேசிய தகவல் மய்யத்தின் பங்கு மகத்தானது. நாடு முழுவதும் இந்த அமைப்பு ஏற்படுத்தி வைத்துள்ள கட்டமைப்பு வசதிகள் மூலமாகவும், மற்ற நவீன வசதிகள் மூலமாகவும் இ-நிருவாகப் பணிகளும் மக்களுக்குச் சேவைகளை வழங்குவது விரைவாக முடிக்க முயற்சி எடுக்கப் பட்டது.

இணைய தள பயன்பாடு அதிகரித் துள்ளதால், மக்களுக்குத் தகவல்கள் சென்றடைவதும், சேவைகளை உடனுக் குடன் வழங்குவதும் இ- நிருவாகத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஆ.இராசா அவர்கள் செய்த குற்றமென்ன?

தொழில் நுட்பத்துறை:

தேசிய அறிவுசார் இணையம் வழி யாக ஆப்டிகல் கேபிள் இணைப்பில் எல்லா பல்கலைக்கழகங்கள், நூலகங் கள், மருத்துவமனைகள் மற்றும் விவசாய நிறுவனங்களை ஒருங்கிணைத்தது குற்றமா?

தேசிய மின் ஆளுமைத் திட்டத்தின் கீழ் 77,338 கிராமங்களில் நிலப்பதிவேடு கள் மற்றும் அரசு ஆவணங்களைப் பெறு தல் போன்ற 70-க்கு மேற்பட்ட சேவை களைக் கொண்டு வந்தது குற்றமா?

22 இந்திய மொழிகளுக்கான மென் பொருள் மற்றும் கணினி எழுத்துருக்கள் கொண்டு வந்தது குற்றமா?
தகவல் தொழில் நுட்பத்துறை ஆராய்ச்சி நிறுவனம் கொண்டு வந்தது குற்றமா?

அஞ்சல் துறை:

தனியார் கொரியர்கள் வந்துவிட்ட பிறகு அஞ்சல் துறை நலிவடைந்துவிடும் என்றும், அது இழுத்து மூட வேண் டியதுதான் என்றும் இருந்த நிலையை மாற்றிட, நலிவடைந்த அஞ்சல் துறையில் பணியாற்றிடும் லட்சக்கணக்கான ஊழியர்களை காப்பாற்றிட அஞ்சல் துறையை நவீனமயமாக்கியது குற்றமா?

பெண்களையும், நலிவுற்ற பிரிவின ரையும் கருத்தில் கொண்டு இந்தியா வின் மிகப்பெரிய குறுங்காப்பீட்டுத் திட்டம் (60 லட்சம் காப்பீடுகள்) கொண்டு வந்தது குற்றமா?

3000-க்கு மேற்பட்ட அஞ்சலகங் களில் கணினி மயமாக்கவும், 8000 அஞ்சலகங்களில் மின்விசைப் பணப்பரி மாற்றம் வசதி கொண்டு வந்தது குற்றமா?

வெளிநாட்டிற்கு இணையம் மூலமாக பணம் செலுத்தும் வசதிகள் கொண்டு வந்தது குற்றமா?

இப்படி முதல்வர் கலைஞர் அவர்கள் சொல்வதை செய்வோம்- செய்வதை சொல்வோம்-சொல்லாததையும் செய்வோம் என்று செய்து வருவது போல் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.இராசா கலைஞர் அவர்களின் வழியைப் பின் பற்றி செய்து வருகின்றார்கள். இந்திய பிரதமர் மன்மோகன்சிங் அவர்களின் சீரிய தலைமையில் தொலை தொடர்பு மற்றும் தொழில் நுட்ப அமைச்சராக இருந்து தொழில் நுட்ப வளர்ச்சிக்குப் பணியாற்றி வந்தார்கள்.

தொலைபேசி துறையைக் காப்பாற்றியவர்:

கிராமப் புறங்களில் பி.எஸ்.என்.எல். ரூரல் லைன் வைத்துக் கொண்டு இருப்ப தால் நிருவாகத்திற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படுகின்றது. பி.எஸ்.என்.எல். சம்பந் தப்பட்ட கேபிள்களை வேறு தனியார் நிறுவனங்கள் (ஏர்டெல், வோடோ போன்) பயன்படுத்துகின்ற கட்ட ணத்தை பி.எஸ்.என்.எல்-லுக்குச் செலுத்த வேண்டும். இதன் மூலம் 2000 கோடி வருமானம் ஆண்டுக்கு வந்து கொண் டிருந்தது. இது 2003ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதை நிவர்த்தி செய்ய யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. முன்னாள் அமைச்சர் இராசா பொறுப் பேற்ற பிறகு நிதி அமைச்சர் அவர் களிடம் வாதாடி கிராமப்புற சேவைகள் நிதியில் இருந்து ரூ.2000 கோடியை வாங்கிக் கொடுத்து பி.எஸ்.என்.எல் நிறுவனத்தைக் காப்பாற்றினார்கள். டெலிபோன் ஈட்டுகின்ற நிறுவனங் களிலிருந்து வருகின்ற லாபத்தில் அரசாங்கத்திற்கு 3,4 சதவிகிதம் கட்ட வேண்டும். அதைப் போல கிராமப்புற லேண்ட் லைனுக்குச் சேர்த்து கட்ட வேண்டும். ரெவின்யூ ஷேர் கொடுக்கக் கூடாது என்று யாரும் கேட்காமலேயே அமைச்சர் அவர்கள் பி.எஸ்.என்.எல் லேண்ட் லைன் அனைத்திற்கும் ஏ.ஜி.ஆர். இனிமேல் கிடையாது என்று உத்தரவு போட்டு பி.எஸ்.என்.எல்-அய் காப்பாற்றினார்கள்.

இன்று நவீனமயமாக்கப்பட்ட தொலைத் தொடர்பு துறையின் மூலம் டி டெய்ல்டு பில், டைனமிக் லாக்கிங், கால் வெயிட்டிங், காலர் அய்டி, ஒரே செல் மூலம் பலரிடம் தொடர்பு கொள்ள கான்பிரன்ஸ் வசதி, கால் டிரான்ஸ்பர் வசதி, அதி நவீன வயர்லெஸ் கருவி, கம்பியில்லா தொலைபேசி (வில்), மிக குறைந்த கட்டணத்தில் வெளிநாட்டு டன் பேச வசதி, நவீன பிராட்பேண்ட் வசதி, 3ஜி மூலம் நவீனமாக்கப்பட்ட இன்டர்நெட் வசதி, தொலைபேசியில் டி.வி. பார்க்க வசதி, தொலைபேசி பெற பதிவு கட்டணம் இலவசம், தனியார் துறைகளுடன் போட்டி போட்டு இன்று பி.எஸ்.என்.எல்- லின் தரம் உயர்த்த முயற்சி இப்படி பல வகையிலும் பி.எஸ். என்.எல்-அய் உலகத்தில் இரண்டாவது இடத்திற்குக் கொண்டு வந்த பெருமை முன்னாள் அமைச்சர் இராசாவையே சாரும்.

3ஜி ஏலம் மூலம் வருமானம்

3ஜி ஏலம் மூலமாக ரூ.67,719 கோடியை மத்திய அரசிடம் செல்போன் நிருவாகம் ஒப்படைத்தது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் 3ஜி சேவையை தொடங்கி உள்ளன.

இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம் டிராய் தனது அறிக்கையில் ஏப்ரல் மாதம் முடிவில் 2.70 சதவிகித வளர்ச்சியாக 63.80 கோடி தொலைபேசி வாடிக்கையாளர் களையும் இதே போல் ஏப்ரல் மாத முடிவில் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ., உள்ளிட்ட அனைத்து வயர்லெஸ் சந்தா தாரர் எண்ணிக்கை 2.89 சதவிகிதம் உயர்ந்து 60.12 கோடியாகவும், ஏப்ரல் மாத முடிவில் பிராட்பேண்ட் சந்தாதா ரர்கள் எண்ணிக்கை 90 லட்சமாக உயர்ந்துள்ளது.

தொலை தொடர்பு அலைவரிசை ஒதுக்கீட்டு ஏலம் வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செல் போன் சேவைக்கான மூன்றாம் தலை முறையினருக்கான (3ஜி) அலைவரிசை ஒதுக்கீடு வாயிலாக மத்திய அரசுக்கு ரூ.67719 கோடி வருவாய் கிடைத் துள்ளது. இந்நிலையில் பி.டபில்.யூ.ஏ என்று அழைக்கப்படும் ஒயர்இணைப்பு இல்லாத அகண்ட அலைவரிசை ஒதுக் கீட்டிற்கான ஏலம் நடைபெற்றுள்ளது. இதுவரையில் நடைபெற்ற ஏலம் வாயி லாக ரூ.28,566 கோடி வருவாய் வந்துள்ளது. ஆக மொத்த வருமானம் ரூபாய் ஒரு லட்சம் கோடியாகும். நாடு முழுவதும் உள்ள 17 ஆயிரத்து 300 கிராமங்களில் தொலைபேசி சேவை அளிக்கப்பட்டுள்ளது.

2007 இல் அமைச்சராக பொறுப் பேற்றுக் கொண்ட போது ஒரு மாதத்திற்கு சராசரியாக 7.5 லட்சம் தொலைபேசி இணைப்புகள் புதியதாக பெறப்பட்டதை மாற்றி மாதம் 12 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. மாதம் 2 கோடி என்று இலக்கு வைத்து 2012 மார்ச் மாதத்திற்குள் 60 கோடி என்ற இலக்கை 2010 மார்ச்சிலேயே முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.

நாளுக்கு நாள் நுகர் பொருள்களின் விலைகள் ஏறிக்கொண்டே இருந்தாலும் இன்று தொலைபேசிக் கட்டணம் குறைந்து கொண்டு வருகின்றது. இருந்தாலும் இன்று எஸ்.டி.டி. கட்டணத்தை 25 காசுக்கு கொண்டு வருவதாக அமைச்சர் 2007 இல் வாக்குறுதி கொடுத்து இன்று நடைமுறைக்கு வந்துள்ளது. இப்போது உள்ளூர் கட்டணத்தை 10 பைசா அள வுக்கு கொண்டு வந்துள்ளார்கள். இவ் வாறு தொலை தொடர்புத்துறையை நவீன மயமாய் ஆக்கியதுடன் வருவாய் ஈட்டு கின்ற வகையில் செயல்படுத்திய முன் னாள் மத்திய அமைச்சர் ஆஇ.ராசா அவர்கள் மீது வேண்டுமென்றே காழ்ப் புணர்ச்சியால் வழக்கு தொடுத்துள்ளார் கள். அவர் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் இல்லை என்றும், நான் திறந்த புத்தகம் என்றும், என் மீது சுமத் தப்பட்ட குற்றச்சாற்றுக்கு எந்த மன்றத்தி லும் பதில் தர தயாராக இருக்கின்றேன் என்று கூறியுள்ளார்.

மனம் திறந்த பேட்டி

2001இல் நிர்ணயிக்கப்பட்ட அதே ரூ. 1650 கோடி உரிமைக் கட்டணத்துக்கே 2008 இல் ஸ்பெக்ட்ரம் அலை வரிசையை ஒதுக்கீடு செய்வது நியாயமா? என்ற கேள்விக்கு அவரது பதில்:

உரிமைக் கட்டணமாக 1650 கோடியை 2001இல் நிர்ணயம் செய்திருந்தது டிராய் கமிட்டி, 2001-க்கு பிறகு எந்தவித பரிந்துரைகளையும் டிராய் செய்யவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மொத்த வருவாயில் சரிசெய்து கொள்ளப்பட்ட பங்கை தொடர்ந்து அது உயர்த்திக் கொண்டே இருந்தது. அதனால் ஆண்டு தோறும் ரூ.15000 கோடி வருவாய் அரசுக்கு கிடைத்தது.

முதலில் வந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கியது:

இந்த கேள்விக்கு பதில் என்னவென் றால் 1999இல் அமைச்சரவை எடுத்த முடிவின் படி, ஸ்பெக்ட்ரம் அலைவரி சையை ஏலம் விடுவதில்லை என்றும், வருவாய் பங்கீட்டு முறையை பின்பற்றுவது என்றும் எடுத்த முடிவே காரணமாகும். இன்று இதை குறை கூறும் பாரதீய ஜனதா ஆட்சியில் அமைச்சராக இருந்த பிரமோத்மகாஜன், அருண்ஜெட்லி ஆகியோர் காலத்தில் பின்பற்றிய முறையே தான் இப்போதும் பின்பற்றப்பட்டது. இதை பாரதீய ஜனதா கட்சி மறுக்க முடியுமா?

3ஆவது கேள்வி

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் விடுத்தது குறித்தானது:

2007ஆம் ஆண்டு முதல் டிராய் கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படை யிலேயே இயங்கி வந்ததற்கு மாற்றாக ஏதும் செய்யவில்லை. 1999ஆம் ஆண்டு முதல் ஏலம் இன்றி அளித்திருப்பதால் ஒரு சமமான ஆடுதளத்தை உருவாக்கித் தரவேண்டும் என்பதற்காக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை ஏலம் விடுவது நியாயமற்றது என்ற டிராயின் பரிந்துரைகளை 2007இல் ஏற்றுக் கொண்டது.

உரிமம் பெற்ற நிறுவனங்கள் ஸ்வான் மற்றும் யுனிடெக் நிறுவனங்கள் தங்கள் பங்குகளை விற்கவில்லை என்றும், தொலைபேசி கோபுரங்கள் கட்டுவது போன்ற கட்டுமான பணிகளுக்கென நிதியைப் பெறுவதற்காக நிலை வைப்புத் தொகையில் இருந்த தங்களின் பங்குகளை நீர்த்துப் போகச் செய்தன என்பதையும் ஏற்றுக் கொண்டு அவற்றின் செயல்பாடுகள் அவர்களின் வணிகத்தைப் பெருக்குவதற்காக சட்ட வரையறைக்குட்பட்ட செயல்கள்தான் என்ற நிதி அமைச்சகத்தின் கருத்தை அமைச்சரவைக் குழு ஏற்றுக் கொண்டு ஒப்புதல் வழங்கியுள்ளது.

தொழிலாளர்கள் வாழ்வுக்கு வழிவகுத்த கலைஞரின் அன்புத்தம்பி ஆ.இராசா அவர்கள் பி.எஸ்.என்.எல். ஊழியர்களின் ஊதிய உயர்வு வருவதற்கு பெரும் உதவியாக இருந்தார்கள்.

டான்சி ஊழல், சொத்துக்குவிப்பு வழக்கு, போன்ற வழக்கை சந்திக்க மறுத்து திரைமறைவில் முதலமைச்சர் ஆனவர், பார்ப்பனியம் தலைதூக்கி ஆடுகின்றவகையில் சட்டமன்றத்தில் நான் ஒரு பாப்பாத்தி என்று ஓங்காரக் குரல் கொடுத்தவர், கரசேவைக்கு இங்கிருந்து செங்கல்லை அனுப்பியவர், உடல் முழுவதும் தங்கத்தால் தன்னை அலங்காரப்படுத்தி பவனி வந்த அம்மையார், மக்களை சந்திக்க மறுத்து, கழகத் தொண்டர்களை மதிக்காது கொடநாட்டில் ஓய்வெடுக்கும் அம்மையார் இன்று யாரைப் பார்த்துக் கேட்கிறார்? ஊழலின் ஊற்றுக்கண் ஜெயலலிதா இன்று தொலை தொடர்புத் துறையை நவீனமாக்கி இன்று உலகநாடுகளுடன் போட்டி போட்டு தரம் உயர்த்தி வந்த முன்னாள் அமைச்சர் ஆ.இராசாவைப் பார்த்து ஊழல் என்கிறார். நாட்டை ஆண்டபோது ப.ஜ.அரசு செய்த செயலை தொடர்ந்து செய்யும் அமைச்சர் இராசாவைப் பார்த்து ஊழல் என்கிறார்கள். அவர்கள் ஸ்பெக்ட்ரமிற்குப் போட்ட கொள்கையைத்தானே அமைச்சர் கடைப்பிடித்துள்ளார். இதில் யார் ஊழல் பேர்வழி? மக்களே புரிந்து கொள்ளுங்கள்.

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் அடிமைப்படுத்தப் பட்ட சமுதாயத்திலிருந்து இன்று தந்தை பெரியார் அவர்களாலும், பேரறிஞர் அண்ணா அவர்களாலும், கலைஞர் அவர்களாலும், தமிழர் தலைவர் அவர்களா லும் உயர்நிலைக்கு கொண்டு வரப்பட்ட சமுதாயத்தி லிருந்து உயர்வு பெற்ற ஆ.இராசா இன்று கலைஞர் அவர்களின் அன்புக்குப் பாத்திரமாகவும், கலைஞர் அவர்களால் தனது இல்லத்தை மருத்துவமனைக்கு ஒப்படைத்து நிருவாகித்து வரும் அறங்காவலர் குழுவில் ஒருவராக நியமனம் செய்து பணியாற்றி வரும், மத்திய அரசில் ஒரு மதிப்பு மிக்க அமைச்சராக செயல்பட்ட ஆ.இராசா அவர்களது செயல்பாடுகளை பொறுக்காத சில ஆதிக்க சக்திகள் அவர் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்ச்சியால் அவர்மீது சுடுகணைகளை விடுகின்றது. அவர்மீது வீசுகின்ற சுடுகணைகளை சுட்டெரிப்போம்.

தலித் இனத்தின் தகத்தகாய கதிரவன் என்றும் ஏற்றுக் கொண்ட பணியில் நேர்மை, நியாயம், கடமையுணர்வு ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடித்து வரும் அருமைத்தம்பி இராசா என்று கலைஞர் அவர்களும், மாண்புமிகுவை பறிக்கலாம் எவரும்; மானமிகுவை எவராலும் பறிக்கமுடியாது என்று தமிழர் தலைவர் வீரமணி அவர்களும் மானமிகு. ஆ.இராசா அவர்களைப் பாராட்டி உள்ளனர். ஆரியம் மீண்டும் தலை தூக்கி உள்ளது. ஆரிய பாப்பாத்தி கொக்கரிக்கின்றார். தமிழர்களே நாம் விழிப்புடன் இருக்க வேண்டும். மண்டல் கமிஷனை அமல்படுத்தியதற்காக அன்று பிரதமராக இருந்த மனிதருள் மாணிக்கம் வி.பி.சிங் அவர்களை பலி கொடுத்தோம். இன்று உலகமே வியக்கும் வண்ணம், நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமும் மக்களையே நினைத்து பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திவரும் கலைஞர்ஆட்சிக்குக் கேடு நினைக்கும் சில மதி கெட்டவர்கள் போடும் கூச்சலுக்கு பயந்து இன்று ஆ.இராசாவை பலி கொடுத்துள்ளோம். கூட்டணி தர்மத்தை எப்பொழுதும் காப்பாற்றிவரும் கலைஞர் இன்று ஆ.இராசாவை பதவி விலக வைத்து சரித்திரம் படைத்துள்ளார். சோதனைகளைத் தாண்டி சாதனை படைத்த கழகம் இதைக்கண்டு சோர்வடைந்து விடாது. தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் அறைகூவல் விட்டது போல் தி.மு.கவின் பிரச்சார படை கிளம்பட்டும். பொய்யர்களின் முகத்திரையைக் கிழித்திடட்டும். கலைஞர் அவர்களின் வழியிலும், தளபதி அவர்களின் வழிகாட்டுதலுடனும் புதிய சமுதாயத்தை வென்றெடுப்போம்.
http://www.viduthalai.periyar.org.in/20101216/news13.html

No comments:


weather counter Site Meter