Pages

Search This Blog

Thursday, December 9, 2010

19 இந்திய மாமனிதர்களுள் தென்னிந்தியாவில் பெரியார் மட்டுமே-ராமச்சந்திர குகா

இந்திய அரசியல் பாரம்பரியத்தின் ஆழம் மற்று ம் பன்முகத் தன்மை பற்றி இன்றைய இந்திய அரசியல்வாதிகள் அறியாதவர்களாக இருப்பது, மற்றும் நேரு - அம்பேத்கர் - பெரியார் போன்ற சுய சிந்தனையாளர் கள், அரசியல்வாதிகள் இந்திய நாட்டில் இன்று உருவாகாமல் இருப்பது ஆகிய வையே மிகுந்த கவலை அளிப்பவை யாக இருப்பவையாகும் என்று வரலாற் றாசிரியர் ராமச்சந்திர குகா கருது கிறார்.
இன்றைய அரசியல்வாதிகள் தங்கள் பேச்சுக்களில் யாரைப்பற்றிக் குறிப்பிடுகிறார்களோ, அந்த மாமனிதர் களின் சிந்தனைகளைப் பற்றி அதிக மாக அறிந்திராதவர்களாகவே அவர் கள் உள்ளனர். அரசமைப்புச் சட்ட மன் றத்தில் அம்பேத்கர் நிகழ்த்திய உரையை மாயாவதி படித்தே இருக்கமாட்டார் என்றும், அவ்வாறே, ஜவஹர்லால் நேரு அவர்கள் மாநில முதல் அமைச்சர் களுக்கு எழுதிய கடிதங்களை ராகுல் காந்தி பார்த்தே இருக்கமாட்டார் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். என்றாலும், இந்த அரசியல்வாதிகள் தான், இம்மானிதர்களின் பாரம் பரியத்தைக் காப்பாற்றுபவர்களாகக் கருதப்படுகின்றனர் என்று குகா கூறுகிறார்.
சென்னை தாஜ்கன்னிமரா ஓட்ட லில் கடந்த திங்கள்கிழமை (6.12.2010) அன்று நடந்த தனது நவீன இந்தி யாவை வடிவமைத்தவர்கள் என்ற நூலின் வெளியீட்டு விழாவில் பேசும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்த நூல் 19 இந்திய மாமனிதர் களின் எழுத்துகள் மற்றும் பேச்சுகளின் தொகுப்பாகும். இவர்கள்தான் நவீன இந்தியாவை வடிவமைத்த சிற்பிகள் என்றும், அவர்களின் சிந்தனைகள் தான் இன்றும் நாட்டில் முக்கியத்துவம் வாய்ந்தவைகளாகக் கருதப்படுகின்றன என்றும் குகா கூறுகிறார்.

பெரும்பாலான நாடுகளில் அந் நாடுகள் உருவான போதோ அல்லது அந்நாடுகள் நெருக்கடியில் சிக்கிக் கொண்டிருந்தபோதோ, அந்நாட்டு சிந்தனையாளர்கள் - அரசியல்வாதி கள் உருவாகியுள்ளனர். ஆனால் இந் தியாவோ, அத்தகைய நெருக்கடிகள் ஏதும் இல்லாத நிலையிலும், 1870 ஆம் ஆண்டுமுதல் 1970 ஆம் ஆண்டுவரை ராஜாராம் மோகன்ராய் முதல் ஜெயப் பிரகாஷ் நாராயண்வரை ஒரு நீண்ட வரிசையில் அரசியல் சிந்தனையாளர் களை உருவாக்கிய பாரம்பரியப் பெருமையைக் கொண்டுள்ளது என்று குகா கூறுகிறார். இம்மாமனிதர்களின் எழுத்துக்கள் ஜனநாயகம் முதல் ஜாதி, பாலினம் மற்றும் பொருளாதாரம் வரை வாழ்க்கையின் அனைத்து அம்சங் களையும் தொடுபவைகளாக அமைந் துள்ளன என்று குகா கூறுகிறார். இந்த எழுத்துக்கள் அனைத்தும் ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்த மானவை. தங்களின் சொந்த மாநிலங் களில் வாழ்ந்த சமூக சீர்திருத்தவாதி களின் எழுத்துக்களையும், பேச்சுக் களையும் தேடிக் கண்டுபிடித்துப் போற் றும் முயற்சியில் ஈடுபட மற்ற எழுத்தா ளர்களுக்கும், வரலாற்றாசிரியர் களுக்கும் இந்த நூல் ஒரு வழிகாட்டி யாக, தூண்டுகோலாக அமையும் என நம்புகிறேன் என்று குகா கூறினார்.

பெரியார், ராஜாஜி போன்றவர்கள் இவரது பட்டியலில் இடம் பெற்றிருந்த போதும், காமராஜர், அண்ணா போன்ற தலைவர்கள் ஏன் அதில் இடம் பெறவில்லை என்று தெரிந்து கொள்ள விரும்பிய பார்வையாளர்கள் சிலரது கேள்விகளுக்குப் பதிலளித்த குகா, இப்பட்டியலில் தலைவர்களின் பெயர் களைச் சேர்ப்பதற்கு நான்எடுத்துக் கொண்ட அளவுகோல் மற்றும் கடைப் பிடித்த நடைமுறை என்னவென்றால், அவர்கள் சுய சிந்தனையாளர்களாக இருக்கவேண்டும் என்பதும், அவர் களது படைப்புகள், இலக்கிய, நுண் ணறிவுத் தரம் வாய்ந்தவைகளாக இருக்க வேண்டும் என்பதும், மிகவும் முக்கியமானதாக, அவர்களது கட்டுரை களும், கொள்கைகளும் பல தலைமுறை யினருக்கும் பொருந்துபவைகளாக இருக்கவேண்டும் என்பதும்தான் என்று கூறினார்.

மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபாலகிருஷ்ணன் காந்தி நூலை வெளியிட்டு, அதன் ஆசிரியர் ராமச் சந்திர குகாவை அறிமுகப்படுத்தினார். பல்வேறுபட்ட கருத்துகளை பல்வேறு பட்ட மூலங்களிலிருந்து எடுத்து, பெரும் அளவு மக்கள் சமூகத்திற்கு நன்மை பயக்கக்கூடிய வகையில் தரும் வல்லமை பெற்ற எழுத்தாளர் குகா என்றும், அவ ரது நூல்கள், கட்டுரைகள், செய்தி விளக்கங்கள் பல தலைமுறைகளிலும் பயணம் செய்யக்கூடிய தன்மை வாய்ந் தவை என்றும் கோபாலகிருஷ்ண காந்தி வர்ணித்தார்.

(குறிப்பு: இந்நூலில் ‘‘Makers of Modern India’’19 பேர்களில் தென் னாட்டில் சமூகப் புரட்சியாளர் என்ற முறையில் தந்தை பெரியார் மட்டும்தான் இடம்பெற்றுள்ளார்).
http://www.viduthalai.periyar.org.in/20101209/news07.html

No comments:


weather counter Site Meter