Pages

Search This Blog

Friday, December 3, 2010

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா-தொல். திருமாவளவன்,இனமுரசு சத்யராஜ் கனிவான உரை

மக்கள் வெள்ளம்-பெரியார் திடல் குலுங்கியது!

தமிழர் தலைவர் அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள்விழா சென்னை பெரியார் திடலில் ஒரு புது அத்தியாயத்தைப் படைத்தது. மாலை முதல் அலைஅலையாக மக்கள் வந்து கொண்டே இருந்தனர். மழைமேகங்கள் ஒரு பக்கத்தில் மிரட்டிக்கொண்டே இருந்தன. அதனை யாரும் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

மாலை 6மணிக்கெல்லாம் நடிகவேள் எம்.ஆர்.இராதா அரங்கமும், முதல் மாடியும் (பால்கனி) மக்கள் வெள்ளம் நிறைந்திருந்தது. வெளியிலும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அதில் தோழர்கள் அமர்ந்து உரைகளைக் கேட்டுக்கொண்டிருந்தனர்.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் எழுச்சியுரையாற்றினார். இனமுரசு சத்யராஜ் அவர்களின் நகைச்சுவை கலந்த பகுத்தறிவு உரையும் மக்கள் வெள்ளத்தை வெகுவாகக் கவர்ந்தது. தமிழர் தலைவர் விழாவில் நேடியாகக் கலந்துகொள்ளாத நிலையில், குடும்பம் குடும்பமாக மக்கள் வந்தது ஒரு தனிச்சிறப்பாகும்.

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தொல். திருமாவளவன் எம்.பி., அவர்களுக்கு கழகப் பொதுச்செயலாளர் கவிஞர் கலி. பூங்குன்றன் பொன்னாடை அணிவித்து நூல்களை வழங்கினார். விழா மேடையில், இனமுரசு நடிகர் சத்யராஜ், கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை, கழகப் பிரச்சார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் உள்ளனர் (சென்னை பெரியார் திடல், 2.12.2010).

தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுடைய 78ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இவ்விழாவில் இனமுரசு நடிகர் சத்யராஜ், விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை, பொதுச் செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன், கழகப் பிரச்சார செயலாளர் அ.அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர். உரையைக் கேட்க ஏராளமான கல்வியாளர்கள், அறிஞர் பெருமக்கள் மற்றும் கழகத் தோழர்கள் பெருந்திரளாக வந்திருந்தனர் (சென்னை, பெரியார் திடல், 2.12.2010)

இனமுரசு சத்யராஜ் அவர்களுக்கு, கழகப் பொருளாளர் வழக்கறிஞர் கோ. சாமிதுரை அவர்கள் பொன்னாடை அணிவித்து நூல்களை வழங்கினார்

 தொல். திருமாவளவன் உரை

தமிழும், தமிழினமும் காக்கப் பட தமிழர் தலைவர் வீரமணி அவர்கள் நீண்ட நாள் வாழவேண்டும்; திராவிடர் கழகம் இருக்க வேண்டும்; தமிழர் தலைவரின் கொள்கை வளர்ச் சிப் பணி, கல்வி - நிறுவனப் பணிகளை எல்லாம் தந்தை பெரியார் உயிரோடு இருந்திருந்தால் அவரை உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார். அதுமட்டுமல்ல தமிழர் தலைவரின் பிறந்தநாளை நாடெங்கும் எழுச்சி விழாவாக கொண்டாட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறி விளக்கவுரையாற்றினார்.

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா சென்னை பெரியார் திடலில் (நேற்று) 2.12.2010 இரவு 7 மணிக்கு நடைபெற்ற கட்டுக்கடங்காத கூட்டத்திற்கிடையே விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், நாத்திக நன்னெறிச் செம்மல் இனமுரசு சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தொல். திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகளின் தலைவர் நாடாளு மன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் ஆற்றிய உரையில், குறிப்பிட்ட முக்கிய செய்திகள் வருமாறு:- தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் அன்று லட்சோப லட்சம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் எங்களு டைய பிறந்தநாள் வாழ்த்துகளை முதற்கண் தெரி வித்துக் கொள்கிறேன். (கைதட்டல்) அதே போல நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை உருவாக்கிய ஆ.திராவிடமணி அவர்களுக்கும் இன் றைக்குப் பிறந்தநாள் என்பதை அறிந்து எங் களுடைய வீர வணக்கத்தை அவர்களுக்கும் தெரி வித்துக் கொள்கின்றோம்.

தமிழர் தலைவரிடம் தொலைபேசியில் பேசினேன்

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஒரு தொலைநோக்காளர். நான் இன்று காலையில் அவ ரிடம் தொலைபேசியில் பிறந்தநாள் வாழ்த்து களைச் சொல்லி இன்றைக்கு மாலையில் நடை பெறுகின்ற பொதுக்கூட்டத்தில் வந்து சந்திக்கிறேன் என்று சொன்னேன். நான் இப்பொழுது வெளியூரில் இருக்கின்றேன். பிறந்தநாள் விழா கொண்டாடு வதை நான் விரும்புவதில்லை என்று அடக்கத் தோடு சொன்னார். பொதுவாக பிறந்தநாளை விரும்பாத தலைவர்களே இருப்பதில்லை. நம் முடைய உணர்வுகள் பட்டை தீட்ட வேண்டு மானால் நம்முடைய ஆசிரியர் அவர்கள் நீடூழி வாழ வேண்டும். ஆகவே நம்மை நாமே பட்டைத் தீட்டிக் கொள்ள அவருடைய களப்பணி நமக்குத் தேவைப்படுகிறது.

பெரியார், ஆசிரியரை அடையாளம் கண்டார்

தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா அவர் களை அடையாளம் கண்டார். அதே போல தந்தை பெரியார் நம்முடைய தமிழர் தலைவரை அடை யாளம் கண்டார். பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களும் நம்முடைய கலைஞர் அவர்களை அடையாளம் கண்டார். தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு இருக்கிற காலத்தில் நமக்கு தமிழர் தலைவரை அடையாளம் காட்டினார். அவருடைய இயக்கம் இன்றைக்கு எல்லா வகைகளிலும் தமிழர் தலைவருடைய கடும் உழைப்பால் சிறப்பாக வளர்ந்திருக்கிறது. ஆனால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் தொடங்கப்பட்ட இயக்கம், அவருடைய வாரிசு களாலேயே தொடரப்பட முடியாமல் இருக்கிறது. தேங்கியிருக்கிறது. புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களுடைய இடம் அய்யா அவர்களுடைய இயக்கத்தைப் போல் அல்லாமல் ஒரு வெற்றிட மாகவே இருப்பதை நம்மால் உணராமல் இல்லை.

பெரியார் திடலுக்கு நானே தேடி வந்தேன். பெரியார் நூலக வாசகர் வட்ட நிகழ்ச்சியில் கருத்துகளை கேட்டேன். தமிழர் தலைவர் அவர்கள் பேசுகின்ற கூட்டத்தில் அவருடைய உரையை தூர இருந்து கேட்டிருக்கின்றேன். பிறகு பகுத்தறிவாளர் கழக மாநாடு, வழக்காடு மன்றம் போன்றவை பெரியார் திடலில் நடைபெறுகின்ற நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டிருக்கின்றேன். ஆசிரியர் அவர்களை எனக்கு அவ்வளவாக அப்பொழுது தெரியாது. பழக்கம் இல்லை.

பெரியார் திடலில் இருந்து பெற்ற கருத்துக்கள்தான்

பெரியார் திடலிலிருந்து பெற்ற கருத்துக்கள் என்னை ஊக்கப்படுத்தின. அந்த வகையிலே இங்கே என்னை ஊக்கப்படுத்தி பேசியதைக் கண்டு ஆறுதல் அடைகின்றேன். நம்பிக்கை பெறுகின்றேன்.

தேர்தல் அரசியலால் துணிந்து கருத்துகளைச் சொல்ல முடியவில்லை என்ற மன உளைச்சல் எங் களுக்கு இருக்கிறது. அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் தேர்தல் பக்கமே தலை வைக்காமல் சுழன்று சுழன்று தனது இறுதிக்காலம் வரை பணியாற்றினார். தந்தை பெரியாரின் நெஞ்சுரம், போர்க்குணம் நம்முடைய தமிழர் தலைவரிடத்திலே இருக்கிறது.

பெரியாரின் மறுபிறவி

ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் தந்தை பெரியாருடைய கொள்கை வாரிசாக மட்டுமல்ல, மறு பிறவியிலே நமக்கு நம்பிக்கை இல்லை என்று சொன்னாலும் தந்தை பெரியாரின் மறுபிறவியாகவே நமக்குக் காட்சி அளிக்கிறார். (கை தட்டல்)

தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரனால்தான் தமிழ் ஈழம் கிடைக்கும் என்பதை முதன் முதலில் நமக்கு அடையாளப்படுத்திக் காட்டியவர்.

என் வாழ்நாளில் தி.க. போராட்டத்தில் முதன்முதலாக கைது ஆனேன்

ஈழப்பிரச்சினைக்காக சென்னை பெரியார் திடலில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. யார் யார் எந்தக் குழு ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்று முடிவெடுக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். நானும் ஒரு குழுவும் சென்று சைதாப்பேட்டையில் மின்சார ரயிலை மறித்தோம். உடனே காவல்துறையினர் எங்களை கைது செய்து பல்லாவரம் காவல் நிலையத்தில் வைத்தார்கள். என் வாழ்நாளில் திராவிடர் கழகம் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தில்தான் முதன் முதலாக கலந்து கொண்டு கைது செய்யப்பட்டேன். இரவு எங்களை விடுதலை செய்தார்கள். இரவு 8 மணிக்கு கைதான தோழர்கள் எல்லாம் விடுதலை செய்யப் பட்டு பெரியார் திடலுக்கு இரவு வந்து சேர்ந்தோம்.

அன்றைக்கு இரவு 8 மணிக்கு மேல் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பெரியார் திடலுக்கு வந்து கைது செய்யப்பட்டு விடுதலையாகி வந்தத் தோழர்களைப் பாராட்டி பேசினார்கள்.

இன்றைக்கும் அவருடைய பேச்சு ஞாபகம் இருக்கிறது. பிரபாகரன் அவர்களால்தான் தமிழ் ஈழப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று தெளிவாகப் பேசினார்கள்.

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற மாநாட்டில் நமது ஆசிரியர் அவர்கள் பத்து வயது சிறுவனாக இருந்து பேசினார். அப்பொழுது தந்தை பெரியார் அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களும் அவரை அடையாளம் கண்டு பாராட் டிப் பேசினார்கள். திராவிடர் இயக்கத்து திரு ஞானசம்பந்தன் வீரமணி என்று பேரறிஞர் பெருந் தகை அண்ணா பாராட்டி பேசினார்.

அப்படிப்பட்ட ஆசிரியரை அவருடைய 78ஆம் ஆண்டு பிறந்தநாளில் இந்தத் திருமாவளவன் வந்து பாராட்டுவது பெரிய செய்தியே அல்ல.

இந்தியாவிலே சமூக நீதிக்காக

இன்றைக்கு இந்தியாவில் சமூகநீதியை கட்டிக் காப்பாற்றுகின்ற ஒப்பற்ற தலைவராக விளங்கு கிறார். நம்முடைய முதல்வர் கலைஞர் அவர்களே அதைப் பாராட்டிச் சொல்வதை நாம் பார்க் கின்றோம்.

எம்.ஜி.ஆர் பிற்படுத்தப்பட்டோருக்கு வருமான வரம்பு ஆணையைக் கொண்டு வந்தார். அதை அன்றைக்கு கடுமையாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களும், கலைஞர் அவர்களும் எதிர்த்தார்கள்.

எம்.ஜி.ஆர். படுதோல்வியை சந்தித்தார்

அதன் விளைவு தோல்வியே கண்டிராத தலைவர் என்று சொல்லப்பட்ட எம்.ஜி.ஆர். நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தார். இரண்டே இடங்களில் தான் வெற்றி பெற முடிந்தது.

69 சதவிகிதத்திற்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் முதல் குரல் கொடுத்தவர் நம்முடைய ஆசிரியர். திரா விடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும், இரட்டைக் குழல் துப்பாக்கியாக செயல்பட்டு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை காத்தார்கள்.

ஒரு தாழ்த்தப்பட்ட வரதராஜன், உச்சநீதிமன்ற நீதிபதியாக வர முடிந்தது என்று சொன்னால் அது தி.க., தி.மு.க., செய்த அரிய சாதனை.


பிரபாகரனின் ஆயுதங்கள் பறிப்பு

தந்தை பெரியார் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, எம்.ஜி.ஆர். ஆட்சியில் பிரபாக ரன் மற்றும் அவர்களுடைய போராளிகளின் ஆயு தங்கள் ஒயர்லெஸ் போன்ற கருவிகளை எல்லாம் காவல்துறையினர் பறித்துச் சென்றபொழுது சென்னை மந்தைவெளி பி.எஸ்.எஸ். மருத்துவ மனையில் இருதய நோயால் தாக்கப்பட்டு இருந்த தமிழர் தலைவர் அவர்கள் பிரபாகரன் அவர்கள் உண்ணாவிரதம் இருந்த செய்தியைக் கேள்விப்பட்டு சென்னை அடையாறு இந்திரா நகரில் தங்கியிருந்த பிரபாகரன் வீட்டிற்குச் சென்றார்.

அப்பொழுது நான், அருள்மொழி போன்றவர் கள் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நிலையில், சட்டக்கல்லூரி மாணவர்கள் எல்லாம் திரண்டு சென்று பிரபாகரன் வீட்டிற்கு முன்பு வந்து ஒலி முழக்கம் எழுப்பினோம். அதற்கு முன்பே தமிழர் தலைவர் அவர்கள் ஆயுதம் ஏந்திய நாம் உண்ணா விரதம் இருக்கக் கூடாது என்று பிரபாகரன் அவர்களிடம் வற்புறுத்திச் சொல்லியிருந்தார்.

நாங்களோ, ஆயுதம் ஏந்திய கைகள் அகிம்சை கைகளை ஏந்த வேண்டாம் என்று ஒலி முழக்கம் எழுப்பிக் கொண்டிருந்தோம்.

தொலைபேசியில் எம்.ஜி.ஆர்.

அறையில் இருந்த தமிழர் தலைவர் அவர்களும், பிரபாகரன் அவர்களும் வெளியே வந்து எங்களிடம் பேசிக் கொண்டிருந்தனர்.

அப்பொழுது தொலைபேசி மணி ஒலித்தது. நமது ஆசிரியர் அவர்களும், பிரபாகரன் அவர்களும் உள்ளே சென்று பேசிவிட்டு வெளியே வந்து சொன்னார்கள். உதகமண்டலத்திலிருந்து எம்.ஜி.ஆர். தொலை பேசியில் பேசினார். நான் ஆயுதங்களை திரும்ப உங்களிடமே கொடுக்கச் சொல்லிவிட்டேன் என்றார். உண்ணாவிரதப் போராட்டம் தேவை யில்லை என்று சொல்லி மேதகு பிரபாகரனுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தவர் நம்முடைய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

அதே போல ஈழத் தமிழர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்களே அதைத் தடுக்க வேண்டும் என்பதற்காக நான் மறைமலை நகரில் உண்ணா விரதம் இருந்தபொழுது முதன் முதலில் ஓடோடி வந்து தடுத்து அறிவுரை சொன்னார்.

எனது உடல்நிலை தொடர்ந்து பாதிக்கும் என்று கவலைப்பட்டு இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பு கொண்டு உண்ணாவிரதத்தை முடிக்கச் சொல்லி என்மீது பாச உணர்வைக் கொட்டியவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் (கைதட்டல்).

கலைஞர் - தமிழர் தலைவர்

தலைவர் கலைஞர் அவர்களும், ஆசிரியர் அவர்களும் பெரியார் இயக்கத்தின் மிகப்பெரிய தூண்கள். மகத்தான தலைவர்கள். ஒரு தாழ்த்தப் பட்ட சகோதரன் உயர்பதவியில் அமர்ந்திருப்ப தற்காக ஊழல் என்று பேசுகிறார்கள். பணம் வாங்கியிருப்பார்கள் என்று பேசுகிறார்கள்.

இப்படி பேசுகிற அணி யார்? அ.தி.மு.க, பாரதீய ஜனதா கட்சி, சுப்பிரமணிய சாமிகள்.

இதே தொலைத் தொடர்பு துறையிலே பிரமோத் மகாஜன், அருண்ஷோரி காலத்திலே அவர்கள் அமைச்சராக இருந்த பொழுது ரூ.36 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறதே அதைப்பற்றி இவர்கள் ஏன் வாய் திறக்கவில்லை?

ஆசிரியர் 100 ஆண்டுகள் வாழ்க

சமூக நீதி குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். இந்துத்துவ மேலாண்மை சக்திகளின் ஆதிக்கத்தை முடியடிக்க வேண்டும். இந்தப் பணிகளை எல்லாம் தொடர்ந்து களத்தில் நின்று போராட நம்முடைய ஆசிரியர் தமிழர் தலைவர் அவர்கள் நூறு ஆண்டு கள் நல்ல உடல் நலத்துடன் வாழ வேண்டும்.

தமிழர்களின் இறையாண்மையைக் காக்க, தமிழ் மொழியைக் காக்க, தமிழர் இனத்தின் உரிமை களைக் காத்திட திராவிடர் கழகமும், தமிழர் தலைவரும் வேண்டும். பொடா, கிடா என்ற எந்த அச்சுறுத்தலுக்கும் பெரியார் திடல் மிரண்டதில்லை. திராவிடர் கழகத் தோடு விடுதலை சிறுத்தைகள் இயக்கம் என்றைக்கும் உறு துணையாக இருந்து களப்பணி ஆற்றும்.

பெரியார் உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார்

இன்றைக்கு ஆசிரியர் ஆற்றி வருகின்ற சமுதாயப் பணி, கல்விப் பணிகளை எல்லாம் பார்த்தால் தந்தை பெரியார் உயிரோடு இருந்தால் உச்சி முகர்ந்து பாராட்டியிருப்பார். ஆசிரியரும், கலைஞரும் ஒரே மாதிரியான சிந்தனை ஓட்டத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள். ஜாதியை ஒழிக்க முன் வருபவர்கள் யார்?

இன்றைக்கு ஜாதியை ஒழிக்க யார் முன் வருவார்கள்? கலைஞர் வருவார். தமிழர் தலைவர் வருவார். ஜாதி ஒழிப்பை தங்களது கொள்கையாக ஏற்றுக் கொள்கிறோம் என்று எத்தனை கட்சிக் காரர்களால் சொல்ல முடியும்?

தமிழர் தலைவரின் பிறந்தநாள் விழா தமிழகம் எங்கும் எழுச்சி விழாவாகக் கொண்டாட வேண்டும். - இவ்வாறு தொல். திருமாவளவன் பேசினார்.

இனமுரசு சத்யராஜ் உரை 
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண் டும் என்று இனமுரசு நடிகர் சத்யராஜ் 2.12.2010 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 78ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவில் கூறி விளக்கவுரையாற்றினார்.

இனமுரசு சத்யராஜ்

இவ்விழாவில் பங்கேற்று நாத்திக நன்னெறிச் செம்மல் இனமுரசு சத்யராஜ் தனது உரையில் குறிப்பிட்டதாவது:

கடவுள்-ஒரு பொய் நம்பிக்கை

தம்பி சாக்ரட்டீஸ் தொலைபேசியில் என்னிடம் பேசும்பொழுது தமிழர் தலைவர் பிறந்தநாள் விழாவில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும். அது மட்டுமல்ல பெரியார்திடலுக்கு நீங்கள் வந்து நீண்ட நாள் ஆகிவிட்டது என்று சொன்னார். பெரியார் திடலுக்கு அழைத்தால் விருந்துக்கு அழைப்பது போல, எனக்குப் பிடித்த கோழிக்குழம்பை வைத் திருங்கள், சாப்பிட வருகிறேன் என்றா சொல்ல முடியும்? நமக்கு வயிற்றை நிரப்புவதைவிட அறிவை நிரப்புவதுதான் ரொம்ப மிக முக்கியம். பெரியார் திடலுக்கு ஆசிரியர் அவர்களுடைய பிறந்தநாள் விழாவுக்கு நிச்சயம் வந்துவிடுறேன் என்று சொல்லிவிட்டு, ரிச்சர்ட்ஸ் டாக்கின்ஸ் எழுதிய கடவுள் ஒரு பொய் நம்பிக்கை என்ற நூலைப் படிக்க வேண்டும் என்ற ஆசை. ஏனென்றால் அதைப் படித்துவிட்டால் இன்னும் பல இடங் களில் பேசலாம். அந்த நூலை எனக்கு எடுத்து வையுங்கள் என்று சொன்னேன். அதே போல திராவிடர் கழக பொருளாளர் அய்யா சாமிதுரை அவர்கள் இந்த நூலை மேடை யில் எனக்கு வழங்கினார்கள். இந்த நூலைப் படித்து விட்டால் அடுத்து நடைபெறுகின்ற உலக நாத்திகர் மாநாட்டிலும் பேச வசதியாக இருக்கும் என்று கருதுகின்றேன். அதற்குள் இந்த நூலைப் படித்து முடித்துவிட வேண்டும். (கைதட்டல்).

பொதுவாகப் பார்த்தால் ஒரு மாணவன், தான்படித்து முன்னேற எந்த யுனிவர்சிட்டி நல்ல யுனிவர்சிட்டி என்று தேடுவான். ஆனால், பெரியார் திடலில் நம்முடைய ஆசிரியர் அவர்களைப் பொறுத்தவரை நிலைமை தலைகீழ்.

ஆசிரியர்தான் மாணவரைத் தேடிச் செல்கிறார்

ஆசிரியர்தான் ஒவ் வொரு சிறந்த மாணவ ரையும் தேடிப்பிடிக்கின் றார். நான் எம்.ஜி.ஆரு டைய தீவிர ரசிகன். நான் கல்லூரியில் படிக்கும் பொழுது, அய்யா, சாமி என்று சொல்லுபவர் மின்சாரக் கம்பியைத் தொடுவாரா? அரசமரத் தைச் சுற்றினால் அடி வயிறு பெருக்குமா? என்று சுவர் எழுத்து சுப் பையா எழுதிய வாசகங் களைப் படித்துக் கொண்டே செல்வதுண்டு. நாங்கள் எல்லாம் சினிமா தொழிலில் இருந் தாலும் அய்யா அவர் களுடைய வழிதான் உருப்படி யான சரியான வழி என்பதிலே தெளிவாக இருக்கிறோம்.

தமிழர் தலைவர் சொன்ன அறிவுரை

நான் ஒரு பேட்டி கொடுத்திருந்தேன். தாமரைப் பூவில் வெள்ளைப் புடவையில் ஒரு பெண் உட் கார்ந்திருப்பது போன்ற கடவுள்களை எல்லாம் நான் நம்புவதில்லை. தாமரைப் பூ மீது பெண் உட் கார்ந்தால் பெண்ணும் சேர்ந்து தண்ணீரில் மூழ்கி விடுவாரே!. ஆகவே, இவைகளை நான் நம்பு வதில்லை என்று சொன்னேன். எங்கோ ஒரு மூலையில் இந்தச் செய்தியைப் படித்துவிட்ட தமிழர் தலைவர் அவர்கள் உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னிடம் பேசினார்.

முன்னே-பின்னே அப்பொழுது எனக்கு அவரி டம் பழக்கமில்லை. உங்களுடைய பேட்டி யைப் படித்தேன்; உங்களுடைய தொழிலுக்கு இடைஞ்சல் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் என்று உண்மை யிலேயே அக்கறையோடு நான் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்று பக்குவமாகச் சொன்னார்.

எனக்கு மிரட்டல்

இந்த சத்யராஜ் திராவிடர் கழகத்திற்குக் கடமைப்பட்டிருக்கிறவன். பெரியார் திடலுக்கு நான் செல்வதை பல முறை மிரட்டிப்பார்த்தார்கள். நான் பெரியார் திடலுக்கு வந்து பேசிவிட்டுச் சென்ற பிறகு தான் ஏழு படங்கள் நூறு நாள்கள் ஓடி வெற்றிப்படமாகின.

டாக்டர் ஷாலினி அதே மாதிரி மனோதத்துவ டாக்டர் ஷாலினி, தொலைக்காட்சியில் பகுத்தறிவுக் கருத்துகளை பேசுவதைப் பார்த்து, உடனே தொலைபேசியில் அவரை ஆசிரியர் அழைத்துப் பாராட்டினார். அவ ரும் மிகச்சிறந்த கடவுள் மறுப்பாளராக தன்னு டைய கருத்துகளை உண்மை இதழில் எழுதுகிறார். இப்படி மாணவர்களைத் தேடிச் செல்வதுதான் ஆசிரியர் அவர்களுடைய வேலையாக இருக்கிறது.

அவரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும்!

இப்படிப்பட்ட நம் ஆசிரியரை நாம் போற் றிப் பாதுகாக்க வேண்டும். அவரை என்றைக்கும் மகிழ்ச்சியாக இருக்கும்படி நாம் வைத்திருக்க வேண்டும். அதே போல பெரியார் திடலுக்கு எனக்கு முன் னாள் வந்த சீனியர் தொல்.திருமாவளவன் அவர்கள். எப்படி கஷ்டப்பட்டு வந்தார் என்பதை ராணி பத்திரிகையில் படித்தேன். எனக்கு அவர் சீனியராக இருந்தாலும் தம்பிதான். தம்பி (பிரபாகரன்) என்றால் எல்லோரும் பாராட்டலாம்.

காவிரிப் பிரச்சினை ஒன்றில் நடிகர்கள் எல் லாம் கலந்துகொண்ட கூட்டத்தில் நான் உணர்ச்சிகர மாகப் பேசிவிட்டேன். தேசிய பாதுகாப்புச் சட்டம், தடா, பொடா என்று-ஒரு நான்கைந்து வக்கீல்-நோட்டீஸ் எனக்கு வந்தது. எனக்குக் கொஞ்சம் தயக்கம். உடனே ஆசிரியரை வந்து பார்த்தேன். அவர் இதெல்லாம் சர்வ சாதாரணம், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொன் னார்.

நமது ஆசிரியர் அய்யா அவர்களின் உண்மை இதழாகட்டும், தொல்.திருமாவளவன் அவர்கள் நடத்தும் தாய்மண் இதழ் ஆகட்டும் எனக்கு இவை பாடப் புத்தகங்கள்.

எம்.ஜி.ஆர் பாடல்...

ஆசிரியர் அய்யா அவர்களை ஒரு பாடல் மூலம் வாழ்த்திட விரும்புகிறேன்-எம்.ஜி.ஆர் பாட்டு இது. எத்தனை காலம் மனிதன் வாழ்ந்தான் என்பது கேள்வி இல்லை; அவன் எப்படி வாழ்ந்தான் என் பதை உணர்ந்தால் வாழ்க்கையில் தோல்வியில்லை என்று பாடி.

இதோடு என் உரையை முடித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு நடிகர் சத்யராஜ் பேசினார்.
http://www.viduthalai.periyar.org.in/20101203/news01.html
http://www.viduthalai.periyar.org.in/20101203/news02.html

No comments:


weather counter Site Meter