தாக்குப்பிடிக்கும் பார்ப்பனியம்
ஒவ்வொரு சிறு பொறியும் பெரும் தீயாகலாம் என்று சீனத்து விடிவெள்ளி மாசேதுங் அவர்கள் புரட்சிக்கான இலக்கணத்தை விளக்கினார். புரட்சி கள் சமுதாய மாற்றத்திற்கு அடிகோலுகின்றன. சமுதாயத் தளத்தில்தான் பொருளாதாரம் வளர் கிறது. சமத்துவம் ஒளிர்கிறது. ஆனால், இந்திய மண்ணில் மட்டும்தான் புரட்சிக்கூறுகளை மங்க வைக்கும் மதமும், சனாதனமும் அதைத் தூக்கிப் பிடிக்கின்ற பார்ப்பனியமும் இவ்வளவு புரட்சி களுக்குப் பிறகும் தொடர்கின்றன. இன்னும் ஆயுத பூஜை
இன்றும் சனாதனத்தைத் தூக்கி நிறுத்த முயலும் பார்ப்பனர்களும், அவர்களுக்குத் துணை போகும் வீடணர்களும் உள்ளனர். தகவல் தொழில்நுட்பப் புரட்சி, ஒவ்வொரு தனி மனிதன் கையிலும் செல்பேசியைக் கொடுத்து விட்டது. செல்பேசி வழியாகவே செய்தி முதல் பாடல் வரை கேட்கிற அறிவியல் புரட்சியைப் புறந்தள்ளி படித்தவர்கள் கூட அக்கருவிக்குப் பொட்டு வைத்து ஆயுத பூஜை செய்ய இன்றும் தவறுவதில்லை. எனவேதான் அறிஞர் அம்பேத்கர், ஓர் அரசு, தனிமனிதனுக்குச் செய்கின்ற கொடுமையைவிட, சமூக அமைப்பு மிகப்பெருமளவில் இழைக்கின்ற கொடுங்கோன்மையையும், ஒடுக்குமுறையையும் பெரும் பாலானவர்கள் உணர மறுக்கிறார்கள் (ஆடிளவ யீநடியீடந னடி டிவ சநயடணைந வாயவ ளடிஉநைவல உய யீசயஉவஉந வலசயலே யனே டியீயீசநளளடி யபயளேவ ய னேஎனைரயட ய கயச பசநயவநச னநபசநந வாய ய படிஎநசஅநவே உயயீ) என்று 1943ஆம் ஆண்டு ரானடே-காந்தி-ஜின்னா ஆகிய மூவரையும் ஒப் பிட்டு ஆற்றிய உரையில் குறிப்பிடுகிறார். மேலும், சீர்திருத்தச் சிற்பிகள்தான் அரசியல் தலைவர்களை விட மாவீரர்களாகப் போற்றப்படுகிறார்கள். அரசியல் களத்தைவிட சமூகக் களத்திற்குத்தான் நெஞ்சுரம் அதிகம் தேவைப்படுகிறது. அந்த நெஞ் சுரத்தை, வீரத்தைத் தமிழ்நாட்டில் விதைத்தவர் தந்தை பெரியார் அவர்கள். பெரியார் பெற்ற ஆற்றல்
வேதன் விதி என்றும், நாதன் கட்டளை என்றும் இந்த சமூக அவலங்களைச் சரியென்று ஏற்றுக் கொண்ட பெரும்பான்மையான மக்களுக்கிடையில் சீர்திருத்த இயக்கத்தை நடத்துவது என்பது மிகமிக அரிய செயலாகும். தந்தை பெரியார் ஒருவர்தான் தமிழ் மண்ணில் அந்த மாபெரும் சமூகப் புரட்சியை நிகழ்த்தி வெற்றி கண்டவர். வரலாற்றில் ஆரிய நரித்தனத்தின் விளைவால் சரிவுற்ற பல மன்னர்கள், பல சிந்தனையாளர்கள் பற்றி நன்கு உணர்ந்து, அவ்வித சதிகளையும் முறியடிக்கிற பேராற்றலைப் பெரியார் பெற்றிருந்தார். சமூக சீர்திருத்த இயக்கத்தை மக்கள் இயக்கமாக நடத்தியதால்தான் சதிகாரர்கள் அஞ்சினர். ஆரியர்களின் சதி எப்படி இருக்கும் என்பதை நன்கு உணர்ந்து, பெரும்பான்மையான மக்களை தனது சலியாத உழைப்பால் ஒன்றிணைத்து, சமூக சீர்திருத்தச் செம்மல்களிலேயே திராவிட இயக் கத்தை மக்கள் இயக்கமாக மாற்றியவர் தந்தை பெரியார் ஒருவர்தான். பெரியார், சுயமரியாதை இயக்கத்தின் ஆரம்ப காலத்தில் எழுதிய தலை யங்கமே இதற்குச் சான்று பகர்கின்றது.
1928 குடிஅரசு தலையங்கங்கள்
குடிஅரசு தலையங்கத்தில் பெரியார் 1928ஆம் ஆண்டு, கபிலரை ஏமாற்றிவிட்டோம்; புத்தரை ஏமாற்றிவிட்டோம்; கூன்பாண்டியனை ஏமாற்றி விட்டோம்; மூவேந்தர்களை அழித்துவிட்டோம்; முகமதிய அரசாங்கத்தை ஒழித்துவிட்டோம்; நாயக் கர் அரசாங்கத்தைப் பாழ்படுத்திவிட்டோம்; கம் பனைக் கொண்டே எங்களைக் கடவுளாகவும், தேவர்களாகவும் செய்து கொண்டோம்; இப்படிப் பட்ட எங்களுக்குச் சில பார்ப்பனரல்லாத கூலி களைப் பிடித்தே இப்புதிய சீர்த்திருத்த இயக்கத்தை ஒழித்து எங்கள் ஆதிக்கத்தைப் பழையபடி நிறுத்திக் கொள்ளச் செய்வதுதானா பிரமாதமான காரியம் என்ற வினாவை எழுப்பினார். அத்தலையங்கத்திலேயே இப்போதைய இயக் கம் அடிக்க அடிக்க எழும்பும் பந்து போலவும், வெட்ட வெட்டத் துளிரும் செடிகள் போலவும் பரவிவிட்டது..இனி என்றைக்கும் இந்த இயக்கமும், இந்த உணர்ச்சியும் மறையாது என்பதையும், யாரா லும் அழிக்க முடியாது என்பதையும் வெள்ளிடை மலை போல் விளக்கிவிட்டது. திராவிட இயக்கம் அமைத்த களத்தில் தலைமை யேற்றுப் போராடிய தந்தை பெரியாருக்கு உறு துணையாக பேரறிஞர் அண்ணா, தலைவர் கலை ஞர், ஆசிரியர் வீரமணியார் ஆகியோர் ஆற்றிய அளப்பரிய பணிகள் இன்றைய தமிழ்ச் சமுதாயம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு வழிவகுத்துள்ளன. ஆசிரியர் வீரமணியார், தந்தை பெரியார் வழியி லேயே பதவி, பட்டம், விருதுகளைப் புறந்தள்ளி தனது தனித்த ஆளுமையால், உழைப்பால் அவ்வப்போது ஆரிய ஆதிக்க சக்திகள் செய்துவரும் சதிவலைகளை வெட்டி வீழ்த்தி தந்தை பெரியார் ஊட்டிய உணர்வைத் தமிழர்களுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டி வருகிறார்.
இவ்வகையான அரும்பெரும் சமூகச் சீர்திருத்தப் பணிகளை உணர்ந்துதான் அறிஞர் அண்ணா அவர்கள் 1968இல் நியூயார்க் மருத்துவமனையில் இருந்து தந்தை பெரியார் அவர்களுக்கு ஒரு மடல் வழியாக பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவிக்கும்போது ஓர் அரிய உண்மையைக் குறிப்பிட்டுள்ளார்.
தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நானறிந்த வரையில் இத்தனை மகத்தான வெற்றி எந்த சமூகச் சீர்திருத்த வாதிக்கும் கிடைத்ததில்லை. அதுவும் நமது நாட் டில். ஆகவே, சலிப்போ, கவலையோ தாங்கள் துளி யும் கொள்ளத் தேவையில்லை. வரலாற்றில் அண்ணா பதித்த மேற்கூறிய வைர வரிகள் சமூக சீர்திருத்தப் பணியை ஆற்றிய பெரியாருக்கும், இப் பணியைத் தொடர்கின்ற பெரியாரின் தளபதிகளுக் கும், தொண்டர்களுக்கும் அளித்த நற்சான்றிதழா கும். திராவிட இயக்கத் தொடரோட்டத்தில் ஆசிரியர் வீரமணியார் பதித்த சிறப்புகள் பலப்பல. 10 வயதிலேயே தந்தை பெரியாரின் கைப்பற்றியவர். கலைஞருடன் 60 ஆண்டுகால நட்பு!
தலைவர் கலைஞருடன் கடந்த 60 ஆண்டுகளாக நட்புப் பூண்டு, கலைஞர் ஆட்சி அமைக்கும் போதெல்லாம், தோன்றாத் துணையாக, தோள் கொடுக்கும் சுயமரியாதைக் கதிரொளியாக வலம் வந்து கொண்டிருப்பவர். வீரமணியார் கண்ட களங்கள் பலப்பல. நிகழ்த் திய பேருரைகள் பல ஆயிரங்களைக் கடந்து நிற்கும். அவர் பதித்த எழுத்துகள் எண்ணிலடங்கா. சென்ற திங்களில் துபாய் நாட்டில், கடந்த வாரத்தில் மலே சியா நாட்டில், இந்த திங்களில் சென்னையில், தஞ்சையில், திருச்சியில், மதுரையில், நெல்லையில் என தமிழகத்தின் பட்டி தொட்டிகளில் எல்லாம், கொள்கை முழக்கம் செய்கிறார். உடல் நலம் பாதிக்காதா? ஓய்வு தேவையில்லையா? என்று என் போன்று அன்பு செலுத்தும் பலர் அவரைக் கேட் பதுண்டு. மருத்துவர் இருக்கிறார், மருந்தும் இருக் கிறது, கவலை இல்லை, தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொள்வேன். பெரியாரின் பணியினைத் தோளில் சுமந்து சுற்றி வருவேன் என்று தனது 67 ஆண்டு கால பணியைத் தொய்வில்லாமல் தொடர் கிறார். வீரமணியாரின் வெற்றிக்குப் பின்னால் அவரது இணையரின் அளவற்ற அன்பும், தோன் றாத் துணையும் துணை நிற்கின்றன. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பொரு ளாதாரத்தில் முதுகலைப்பட்டத்தைப் பெற்று முதன்மை மாணாக்கராகத் திகழ்ந்து, சட்ட இயல் பயின்று, சில காலம் வளம் கொழிக்கும் வழக்கறிஞர் தொழிலை மேற்கொண்டு, தந்தை பெரியார் அழைத்தவுடன் விடுதலை ஆசிரியராக முழு நேரப் பொறுப்பேற்றார். அன்று தொடங்கிய அயராத பணி இன்றும் தொடர்கிறது. இந்திய சமூக அரசியல் வாழ்வில், காந்தியைவிட, ஜின்னாவைவிட ரானடே ஏன் உயர்ந்து நிற்கிறார் என்று அறிஞர் அம்பேத்கர் ஓர் ஆய்வுரை நிகழ்த்தினார்.
அம்பேத்கர் கருத்துப் பார்வையில் வீரமணி
அவ்வுரையில், ரானடே சட்டம் பயின்றவர், நீதிபதி பொறுப்பு வகித்தவர், பொருளியல் மேதை, அரசியல் தலைவர், வரலாற்று ஆய்வாளர், கல்வியாளர் போன்ற பல ஆளுமைகள் இருந் தாலும், வரலாற்றில் சமூக சீர்திருத்தவாதியாகத்தான் எல்லா தலைவர்களையும்விட உயர்ந்து நிற்கிறார் என்று சமூக சீர்திருத்தத்தின் சான்றாண்மையை, பெருமையை அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டார். அறிஞர் அம்பேத்கரின் கருத்திற்கு நமது வீரமணி யார் அடையாளமாகவே உள்ளார். நமது ஆசிரி யரும் பொருளாதார முதுகலைப் படிப்பில் முதல் மாணவராகத் திகழ்ந்தவர், சட்டம் பயின்றவர், பொருளாதார, வரலாற்று இயல்களை நன்கு படித் தவர், பன்முக ஆற்றல்களோடு தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்கிறவர். திராவிடர் கழகத்திற்குத் தலைமை தாங்குவது என்பது எளிய செயலன்று. செயற்கரிய இப்பணி யினைச் செம்மையுடன் ஆற்றிவருகிறவர் நமது ஆசிரியர். எதிர்ப்புகளைக் கண்டு அஞ்சாதவர். வரலாற்றில் ஆதிக்க சக்திகள், அச்சக்திகளின் முக வர்கள், எதிர்ப்பவர்களை எப்படி வீழ்த்துவதற்கு சதி செய்வார்கள் என்பதை நன்கு உணர்ந்தவர். நெறி யான பணியாலும். நேர்மைத் திறனாலும், நெஞ்சுரத்துடன் இவ்வகை எதிரிகளை முறியடித்து வருபவர் நமது ஆசிரியர் அவர்கள். வெற்றி வீரர் வீரமணி வாழ்க!
திராவிடர் இயக்கத்தின் தளபதியாக, தமிழர் தலைவராக, நெடுங்கடலில் நெடும் பயணத்தில் திறனுடன் கப்பலைச் செலுத்தும் மாலுமி போல, கொள்கை இலக்கை அடைவதற்கு வழிகாட்டும் தமிழர் தலைவர். 2010 டிசம்பர் 2ஆம் நாள் 78 அகவையை எட்டிப் பிடிக்கிறார். ஆசிரியர் வீரமணியாருடைய அறிவும், மானமும், மாண்பும், தொண்டும், தோழமையும் குற்றால அருவி போல பாய்ந்து திராவிட இயக்கத்திற்கு வலிமையையும், வனப்பையும் இணைக்கின்றன. களங்கள் பல கண்டு தொண்டால் சிறந்து நிற்கும் வெற்றி வீரர் வீரமணியார் வாழ்க! வாழ்க!!
பேராசிரியர் மு.நாகநாதன், எம்.ஏ.,எம்.எல்.,பிஎச்.டி.,டி.லிட்.
(துணைத் தலைவர், தமிழ்நாடு அரசு திட்டக்குழு)
http://www.viduthalai.periyar.org.in/20101201/news44.html
No comments:
Post a Comment