Pages

Search This Blog

Thursday, December 9, 2010

காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சாமியார்? போலியா? ஒரிஜினலா?

போலியா?

பார்ப்பன ஏடுகள் பக்தியைப் பரப்புவதில் - மூட நம்பிக்கை களைக் குழைத்துத் தருவதில் முன்னணியில் எப்பொழுதும் இருப்பவை - தொழில் போட்டி யில் பார்ப்பனர் அல்லாதார் ஏடுகளும் ராஜாவை விஞ்சிய விசுவாசிகளாக இதழ்களை நடத்திக் கொண்டு திரிகின் றனர் - நாய் விற்ற காசு குரைக்கப் போவதில்லையே!

போலிச் சாமியார்களை நம்பாதீர்கள்! என்ற ஒரு தலைப்பிலே தினமலர் வார மலர் (28.11.2010) ஒரு கட்டுக் கதையை வெளியிட்டுள்ளது.

திருக்கோயிலூரைத் தலை நகரமாகக் கொண்டு மெய்ப் பொருளார் என்பவர் ஆட்சி செய்து வந்தாராம். திருநீறுப் பூசிய சைவ மெய்யன்பர்கள் மீது ஏகப்பட்ட மரியாதையாம் அவருக்கு.

முத்தநாதன் என்பவர் ஒரு நாத்திகனாம் - மெய்ப் பொரு ளாரின் பலகீனத்தைப் பயன் படுத்தி உடல் முழுவதும் திருநீறு அணிந்து அந்த அரசனைப் பார்க்க வந்தாராம்.

திருநீறு அணிந்த சாமியார் கள் வந்தால் அவர்களைத் தடுக்கக் கூடாது என்பது அரசக் கட்டளையாம்; அதனால் அந்த முத்தநாதன் அரசரின் அந்தப் புரத்திற்குள்ளேயே நுழைந்து விட்டானாம்.

ராணியுடன் அந்தப்புரத்தில் இருந்த அரசன் திடுக்கிட்டான்; ஆனால், திருநீறு கோலத்தில் வந்துவிட்டாரே, அரசன் என்ன செய்வான்?

திருநீறு அணிந்த ஆசாமி யின் பாதங்களைத் தொட்டுக் கும்பிட்டபோது மறைத்து வைத்திருந்த வாளால் தாக் கினாராம்; அவனைக் கொல்ல காவலாளி முயன்றபோது திரு நீறுப் பூசியவரைக் கொல்லக் கூடாது என்று அரசன் உத்தரவிட்டானாம்.

தன் பக்தனின் உண்மைப் பக்தியைக் கண்டு வழக்கம் போல சிவபெருமான் அங்குத் தோன்றி உயிர்நீத்த மெய்ப் பொருளாராகிய அரசனுக்கு உயிர் கொடுத்தானாம். அதன் பின் அரசன் பல காலம் சிவத் தொண்டு செய்ய கைலாயத் துக்கு அனுப்பி வைத்தாராம் சிவன்.

இந்த சிவன் தன் மதக் கோட்டைத் தாண்டி மற்ற மதப் பக்தர்களைச் சோதிக்கமாட்டார். அடுத்த மதக்காரன்தான் இந் தக் கடவுளைச் சீண்ட மாட்டானே!

இந்த யோக்கியதையில் உலகைப் படைத்தவன் ஒரு கடவுள் என்று கித்தாப்புப் பேச்சு ஒரு பக்கம்.

அந்தக் கோட்டுக்குள்ளேயே சென்று நாமும் கொஞ்சம் விளையாடுவோம். தன் பக் தனை சோதித்துத்தான் ஒரு கடவுளால் உணர முடியும் என்றால், அவன் எப்படி சர்வ சக்திக் கடவுளாவான்?

பிள்ளைக் கறியைக் கேட் டது, மனைவியைத் தன்னிடம் அனுப்பி வைக்கச் சொன்னது என்பது போன்ற நாகரிகமற்ற, ஒழுக்கமற்ற சோதனைகளை முன்னிறுத்துவதன்மூலம் இந்தக் கடவுள்களின் தரம் எவ்வளவுக் கீழானது என்பது விளங்கிவிடவில்லையா?

நாத்திகனைக் கொலை யாளி என்று காட்டவும், வேடக் காரன் என்று காட்டவும் புனையப்பட்ட கதை இது.

அயோத்தியில் பாபர் மசூதியை இடித்த அத்வானியும், கரசேவர்களும் நாத்திகர்களா? பக்தர்கள்தானே! இன்னொரு மதக்கடவுள் சம்பந்தப்பட்ட நினைவிடத்தையல்லவா அடித்து நொறுக்கினார்கள்?

எந்த நாத்திகன் எந்தக் கோயிலை இடித்தான்? நிரூபிக்க முடியுமா?

கடைசியாக தினமலர் என்ன கூறி முடிக்கிறது? போலிச் சாமியார்களை அவர் களின் உருவத்தைக் கண்டு கணிக்காதீர்கள் என்று அறிவுரை கூறுகிறது.

சாமியார்களில் என்ன ஒரிஜினல் சாமியார்? போலி சாமியார்? யானை லத்தியில் முதல் லத்தி என்ன, இரண்டாம் லத்தி என்ன?

அதுசரி, காஞ்சி சங்கராச் சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி என்ன சாமியார்? போலியா? ஒரிஜினலா? தினமலர், தின மணி, கல்கி, சோ கூட்டம் கொஞ்சம் பதில் சொன்னால் நல்லது!

- மயிலாடன்
http://www.viduthalai.periyar.org.in/20101209/news05.html

No comments:


weather counter Site Meter