Pages

Search This Blog

Saturday, August 6, 2011

தேர்வா - தேர் இழுப்பா?

ஜூன் மாதத்தில் கல்வி நிறுவனங்கள் தொடங்கப்பட்டு காலாண்டுத் தேர்வுக்கான முனைப்புகள் நடைபெறவேண்டிய காலகட்டம் இது.

அ.தி.மு.க. அரசு கட்டிக் கொண்ட புண்ணியத் தால் பள்ளிகள் திறந்து 60நாள்கள் ஓடோடியும் புத்தகங்கள் கிடைக்காமல் பள்ளிக் கூடங்களில் மாணவர்கள், கோலி விளையாடிக் கொண்டு திரிகிறார்கள்.

வேலைவெட்டி இல்லாதவர்கள் என்ற பட்டியலில் பள்ளிக்கூட மாணவர்களும், ஆசிரியர்களும் இடம்பெற்றது பரிதாபமே!

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் அம்பாள் கோயிலில் தேரோட்டமாம்; இழுத்துச் செல்லப் பக்தர்களுக்குப் பஞ்சமாகிவிட்டதாம். என்ன செய்தார்கள் தெரியுமா? வெட்டி ஜாபிதா இருக்கவே இருக்கிறது என்று நினைத்துப் பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் அழைத்து வந்து தேரை இழுக்கச் செய்திருக்கின்றனர்.

ஆன்மீக தி.மு.க. (அ.தி.மு.க.) அல்லவா ஆட்சியில் இருக்கிறது!

மாணவர்களுக்கு இதைவிட வேறு என்ன உருப்படியான வேலை இருக்க முடியும்?

திருவரங்குளத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள் தேர் இழுக்கின்றனர் என்றால், திருநெல்வேலியில் தேர் இழுத்து விழாவைத் தொடங்கி வைக்க வர மறுத்த மாவட்ட ஆட்சியாளர் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆமாம், ஆட்சி எப்படிப்பட்டது என்பதுகூட புரியாமல் மாவட்ட ஆட்சியர் எனக்கு உருப்படியான வேலை இருக்கிறது. தேர் இழுப்பது கலெக்டரின் வேலையல்ல என்று சட்டப்படி தெரிவிக்கலாமா?

மாவட்டக் காவல்துறை அதிகாரிகளாக இருக்கக் கூடியவர்களே தீக்குண்டம் இறங்குகிறார்கள் என்பதையெல்லாம் ஏடுகளில் படித்திருக்க வில்லையா நெல்லை மாவட்ட ஆட்சியர்?

அண்ணாவின் பெயரை முன்னொட்டாக வைத்துக் கொண்டிருக்கும் கட்சியைச் சேர்ந்தவர் களில் ஒருவர்கூட அண்ணா கடைப்பிடித்த உளமார என்ற சொல்லைக்கூடப் பயன் படுத்தாமல் கடவுளின் பெயரால் என்று ஒட்டுமொத்தமாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர் என்றால், இதன் பொருள் என்ன?

அரசன் எவ்வழி - குடிமக்களும் அவ்வழி என்பதைப் புரிந்துகொண்டார்களோ... பிழைத் தார்களோ!

No comments:


weather counter Site Meter