Pages

Search This Blog

Tuesday, September 21, 2010

விருந்தளித்த கருத்தரங்கம் இவ்வாண்டு தந்தை பெரியார் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாள்


இவ்வாண்டு தந்தை பெரியார் அவர்களின் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா தமிழ்நாட்டில் மட்டுமல்ல; வட இந்தியாவிலும், வெளிநாடுகளிலும்கூட வெகு எழுச்சியுடன் நடைபெற்றுள்ளது.
தந்தை பெரியார்ச்ச் வாழ்ந்த காலத்தை விட, அவர் மறைந்த இந்தக் காலத்தில் தந்தை பெரியாரின் தேவை மிகவும் அதிகம் என்று உணரப்பட்டு வருகின்றது.
எல்லைகளைக் கடந்து...
கட்சிகளைக் கடந்து, நாட்டு எல்லை களைக் கடந்து தந்தை பெரியார் விரி வாகப் பேசப்படுகிறார். ஆஸ்திரேலி யாவில் வெளிவரும் மாத நாள்காட்டியில் செப்டம்பர் 17 - பெரியார் ஈ.வெ.ரா. பிறந்த நாள் என்று பொறிக்கப்பட்டுள்ளது.
காசியில் (வாரணாசியில்) பாட்னா வில், டில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கொண்டாடப்பட்டுள்ளது.
கடந்த சனியன்று (18.9.2010) மாலை 5 மணிக்கு, அமெரிக்காவின் வாசிங்டனில் வெகு நேர்த்தியாக நான்கு மணி நேரம் உலகத் தலைவராம் தந்தை பெரியார் விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்துள் ளனர்.
உலக நாத்திகப் பேரறிஞரான நியூயார்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் முனைவர் பால்கர்ட்சு (Chairman Institute for Science and Human Values) கலந்து கொண்டு கருத்துரை வழங்கியுள்ளார். ஒழுக்க வளர்ச்சிக்கு மதம் உதவாது என்ற உயர் கருத்தை வழங்கியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த முறை வந்தபோது கழக நடவடிக்கைகளையும், கல்விப்பணி களையும் பலபட பாராட்டிப் பேசியுள்ளார்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அன்று 1958 இல் பாடினாரே, மண்டைச் சுரப்பை உலகு தொழும் என்று - அந்தக் கவி ஞனின் தொலைநோக்குப் பார்வை - இதோ நம் கண் முன் யதார்த்தமாக ஒளிர்கிறது.
இந்தத் திசையில் கழகம் மேற் கொண்டு வரும் முயற்சிகளும், பணிகளும் மிகவும் குறிப்பிடத்தக்கன.
புதுடில்லி பெரியார் மய்யத்தின் எதிர் காலச் செயல்பாடுகள் பிரமிக்கத்தக்க தாக இருக்கும்.
பெரியார் தொலைக்காட்சி!
பெரியார் வலைக்காட்சியும், பெரியார் பண்பலையும், விடுதலை.இன் போன்ற அறிவியல் சாதனங்களும் தந்தை பெரியார் தத்துவங்களை, சிந்தனைக் கருவூலங்களை உலகெலாம் கொண்டு சேர்க்கும் என்பதில் எட்டுணையும் அய்ய மில்லை.
பெரியார் தொலைக்காட்சி என்பது நமது கனவு. அதனையும் தமிழர் தலைவர் நிறைவேற்றிக் கொடுப்பார் என்பது உறுதியாகும்.
தந்தை பெரியார் பிறந்த நாளன்று காலை முதல் இரவு 10 மணி வரை அடை மழையாக நிகழ்ச்சிகள் பெரியார் திடலில் நடைபெற்றன. ஒவ்வொன்றும் முத்து ஒளிதான்.
தந்தை பெரியார் - ஒரு புதுநோக்கு என்ற பார்வையில் அது அமைந்திருந்தது.
தமிழர் தலைவர் கி.வீரமணி
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் அந்தக் கருத் தரங்கம் அமைந்திருந்தது.
தந்தை பெரியார் அவர்களின் மனிதப் பார்வை எத்தகையது என்பதற்கு அய்யா வின் ஒரு கருத்துக் கதிரை வெளிப் படுத்தினார்.
யார் அந்நியன் என்பது குறித்து தந்தை பெரியார் வெளியிட்ட கருத்துரை அது.
என்னை அடிமை என்பவனும், வைப்பாட்டி மகன் என்பவனும், கிட்ட வரவேண்டாம் - தொட வேண்டாம் என்ப வனும், கிட்ட வந்தாலே, கண்ணில் பட்டாலே தோஷம் என்பவனும், நான் தொட்டதைச் சாப்பிட்டால் - என் எதிரில் சாப்பிட்டால் நரகம் என்பவனும் அந் நியனா? அல்லது உனக்கும், எனக்கும் வித்தியாசம் இல்லை, தொட்டாலும் பர வாயில்லை, நாம் எல்லோரும் சமம்தான் என்று சொல்லுகிறவன் அந்நியனா? என்பதை யோசித்துப் பாருங்கள் (குடிஅரசு, 6.9.1931) என்று தந்தை பெரியார் அவர்கள் 79 ஆண்டுகளுக்கு முன் சொன்ன கருத்தை எடுத்துக்கூறி, பார்வையாளர்களின் சிந்தனைக்கு அறிவு விருந்து படைத்தார்.
பேராசிரியர் வளர்மதி
இந்த உலகத்தில் உள்ள எல்லா அகராதிகளையும் கொண்டு வந்து போட்டு, ஏடு ஏடாய்ப் புரட்டிப் பார்த்தா லும், அழகும், பொருளும், சக்தியும் நிறைந்த வார்த்தையாகிய சுயமரியாதை என்ற வார்த்தைக்கு ஈடானதாகவோ, உள்ள வேறு ஒரு வார்த்தையை யாராலும் கண்டுபிடிக்க முடியாது - (குடிஅரசு, 1.6.1930) என்ற தந்தை பெரியாரின் கருத்தினை எடுத்துக்காட்டி, உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் பேரா சிரியர் வளர்மதி விளக்கவுரையாற் றினார்.
தமிழ்நாட்டின் புதுமைகளுக்கெல் லாம் புதுமையாக புரட்சிக் கருத்துகளை விதைத்தவர் அய்யா. இன்று ஏற்பட் டுள்ள விளைச்சல் அத்தனைக்கும் அய்யாவே சொந்தக்காரர் என்று கூறி, தந்தை பெரியார்தம் தொண்டரான தமது தந்தையார் சிறு வயதிலேயே தனக்கு ஊட்டிய ஈரோட்டுப் பாலைப் பற்றிப் பெருமையாகக் குறிப்பிட்டார் - அது தான் தமக்கு இன்றுவரை ஊட்டமாக இருப்பது என்றும் நன்றியுணர்ச்சி பொங்க வெளியிட்டார்.
பேராசிரியர் முனைவர் வீ.அரசு
சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத் தலைவர் பேரா சிரியர் முனைவர் வீ.அரசு புதிய கோணத்தில் தந்தை பெரியாரைப் படம் பிடித்தார்.
சங்க இலக்கியங்களில் இல்லாத ஜாதி பிற்காலத்தில் நுழைந்ததைச் சுட்டிக் காட்டினார்.
கி.பி.அய்ந்தாம் நூற்றாண்டில் தலை எடுத்த வைதிக மார்க்கம், தமிழ்ச் சமுதாயத்தின் போக்கில் பெரும் வீழ்ச்சி களை ஏற்படுத்தியதை வெளிப்படுத்தியது அவர்தம் உரைவீச்சு.
விஷ்ணு, சிவன் போன்ற கடவுள்கள் வேதங்களில் கிடையாது என்றும் அழுத்தமாகவே கூறினார்.
காலம் மாற, மாற சில கடவுள்களும் காணாமல் போவது ஏன் என்ற அறிவார்ந்த வினாவையும் எழுப்பினார்.
தந்தை பெரியார் அவர்களின் சிந்தனை ஓட்டம் தமிழ் மண்ணில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இங்கே பேசிய சென்னை மாநகர மேயர் அவர்கள், நடைபாதைக் கோயில்களை அகற்றுவோம் என்று துணிச்சலாகச் சொன்னார். மேற்கு வங்கத்திலோ, கேரளாவிலோ, ஒரு மேயரால் இப்படி கூறமுடியுமா? என்ற வினாவை எழுப்பினார் வீ.அரசு.
இடது சாரி ஆட்சிகளால் சாதிக்க முடியாதவற்றை, அரசியல் பதவிகளில் செல்லாமல் தந்தை பெரியார் சாதித்தது தான் தலைமையானது என்றும் அழுத்தமாகப் பதிவு செய்தார்.
சிற்பி பாலசுப்பிரமணியன்
பாரதியார் பல்கலைக்கழகத்தில் தமிழ்த் துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற பேராசிரியர் முனைவர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர் அவர்களோடு படித்தவர்) உரை புதிய கோணத்தில் அமைந்தி ருந்தது.
அரசியல் விடுதலையைவிட சமு தாய விடுதலைதான் முக்கியம் என்று தந்தை பெரியார் கருதியதற்கும், பாடு பட்டதற்கும் நியாயங்கள் அதிகம் உண்டு என்பதை நிறுவுவதற்குத் தக்க ஆதாரங் களை எடுத்துக்காட்டினார் சிற்பி.
காலனி ஆதிக்கத்தைவிட பார்ப்ப னர் ஆதிக்கம் இங்கு தலை தூக்கி இருப்பதை உணந்தவர் தந்தை பெரியார். அதனால்தான் அவர்தம் கொள்கை சமுதாய விடுதலையை நோக்கி அமைந்திருந்தது.
காங்கிரஸ்காரர்கள் சைமன் கமிஷ னைப் பகிஷ்கரித்த நேரத்தில் அதனை வரவேற்ற பாங்கு தந்தை பெரியாரு டையது என்றார்.
வெள்ளையர் ஆதிக்கத்தைக் காட்டிலும் பார்ப்பனீய ஆதிக்கம் கொடு மையானது என்று தந்தை பெரியார் கூறி வந்திருக்கிறார். சமூக சீர்திருத் தத்தை நோக்கிய தலைவர்கள் மகாத்மா, ஜோதிபா புலே, அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் சிந்தனைகளும் தந்தை பெரியாரின் சிந்தனை ஒட்டியே அமைந்திருந்தது கூர்ந்து சிந்திக்கத் தக்கதாகும்.
சமூக மாற்றத்தைக் கருதிய, இந்த மூவரும் ஒரே மாதிரியாகவே சிந்தித்தது நோக்கத் தக்கதாகும்.
இவ்வாண்டு தந்தை பெரியார் 132ஆம் ஆண்டு பிறந்த நாள் விடுதலை மலர் மிகப் பொருத்தமாக இம் மூலவர்களின் ஒத்திசை கருத்து எடுத்துக்காட்டப்பட்டுள்ளது அவை இதோ: ஜோதிராவ் புலே பேசுகிறார்:
இன்று ஆங்கிலேயர் ஆட்சி நடந்து வருகிறது. நாளை இது இல்லாமல் போகலாம். இது நீடித்திருக்காது. இது நிலைத்திருக்கும் என யாரும் உறுதி கூறவும் முடியாது. ஆனால், இந்த ஆட்சி நீடித்திருக்கும் காலம் வரையில் தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி பெற்றுக் கொள்ள முடியும். அதன் மூலம் தங்களை அறியாமையில் முடக்கி வைத்திருந்த - தங்களது சமூக, தனிநபர் கவுரவங்களைப் பறித்துக் கொண்ட - பார்ப்பனர்களின் அடிமை நுகத்தடியிலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக் கொள்ளலாம்.
(தனஞ்செய்கீர் எழுதிய மகாத்மா ஜோதிராவ் புலே பக்கம் 119)
அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார்:
சுதந்திர இந்தியா இந்து ராஜ்ய மாகவே இருக்கும். பார்ப்பனர்களும், பனியாக்களுமே ஆதிக்கம் செலுத்துவர். நமக்குச் சுதந்திர இந்தியா மட்டும் போதாது. ஜனநாயகத்தைப் பாதுகாப்ப தாகவும் அது இருக்க வேண்டும்.
(டாக்டர் அம்பேத்கர் தொகுப்பு நூல், பக்கம் 423 - தொகுதி 16)
தந்தை பெரியார் பேசுகிறார் (1925):
Speaking at a public meeting at Salem, E.V. Ramaswami Naicker said they must settle the Brahmin question even while the British Supremacy lasted, otherwise they would have to suffer under the tyranny of what he called “Brahminocracy”.
(A HUNDRED YEARS OF THE HINDU Page No. 337)
சேலம் பொதுக்கூட்டத்தில் பெரியார் இவ்வாறு பேசினார்: வெள்ளைக்காரர்கள் ஆட்சி நடக்கும் இக்காலக்கட்டத்திலேயே பார்ப்பனர் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காணப்பட வேண்டும். இல்லாவிட்டால், பார்ப்பனர் அல்லாதார், பார்ப்பனர்களின் ஆதிக்க நுகத்தடியின் கீழ் கிடந்து உழல வேண்டியதுதான் என்றார் பெரியார்.
பார்ப்பனிய ஆதிக்கத்தை வீழ்த்திடப் போர்வாளாக எழுந்த இவர்களின் செயல் பாடுகள் தங்களுக்குப் பேராபத்தாக அமைந்ததால்தான் - வெள்ளையர் களுக்கு வெஞ்சாமரம் வீசியவர்கள் இவர்கள் என்று ஆரியம் தலைப்பு மாற்றிப் பேசியது என்பது ஆழமாகக் கவனிக் கத்தக்கதாகும்.
தங்களுக்கு எதிரானவர்களை ராட் சதர்கள் என்றும், அசுரர்கள் என்றும், அரக்கர்கள் என்றும், கரடிகள் என்றும், குரங்குகள் என்றும் ஆரியம் தம் வேதங் களிலும், இதிகாசங்களிலும் திராவகச் சொற்களால் தீண்டவில்லையா?
பேராசிரியர் சிற்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் உரை அந்த வகையிலே தனித்தன்மை வாய்ந்ததாக அமைந்தி ருந்தது.
வணக்கத்திற்குரிய சென்னை மாநகர மேயர்
மதச் சார்பின்மையைக் காப்பாற்றும் தன்மையில், உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அண்மையில் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நடைபாதைக் கோயில்கள், அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோயில்கள் அகற்றப்படும் என்று அறிவித்தார். தான் என்றும் பெரியாரின் மாணவன் - அடிப்படையில் பகுத்தறிவு வாதி என்றும் பிரகடனம் செய்தார்.
காலை கருத்தரங்கம் எல்லா வகை களிலும் களைகட்டியது - கருத்துக்கு விருந்தளித்தது.
- கலி.பூங்குன்றன்

No comments:


weather counter Site Meter