Pages

Search This Blog

Saturday, September 25, 2010

சமுக நீதி கடந்து வந்த பாதை -இன்றைய நிலை தமிழ் நாட்டில்


19 ஆம் நூற்றாண்டி கடைசி கால் பகுதி மற்றும் 20 ஆம் நூற்றாண்டின் முதலாவது கால் பகுதி ஆகிய கால கட்டங்களில் சென்னை அரசாங்கத்தின் எல்லா துறைகளிலும் , ஏறக்குறைய அனைத்து கல்வி நிலையங்களிலும் பார்ப்பனர்  ஆதிக்கம் மிக மிக அதிகமாக இருந்தது.
 
1971 ஆம் ஆண்டு தமிழ் நாடு சட்ட மேலவையில் எழுதப்பட்ட கேள்விக்கு அரசாங்கத்தின் தரப்பிலிருந்து கொடுக்க பட்ட பதில் சென்னை தலைமை செயலகத்தில் மாத சம்பளம் ரூ.50  முதல் 99 முடியவுள்ள மொத்தம் 208  பணியிடங்களில் அமர்த்தப்பட்ட பார்ப்பனர்கள் 128  ,பார்ப்பனர் அல்லாத இந்துகள் 52  ,முகம்மதியர்கள் 8 , இந்திய கிருத்தவர்கள் 18  ,மற்றவர்கள் 2.
 
இதே போல மாத சம்பளம் ரூ.நூறு முதல் 299  முடிய உள்ள 110 பணிகளில் பார்ப்பனர்கள் 78; பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 18 முகம்மதியர்கள் ஒருவர் இந்திய கிருத்தவர்கள் 7,மற்றவர்கள் 6.
 
மாத சம்பளம் ரூ 300 முதல் 499 முடியவுள்ள 13  பதவிகளில் பார்பனர்கள்  8 பார்பனர் அல்லாத இந்துக்கள் 3 ,இந்திய கிருத்தவர்கள் 2.
 
கல்வி துறையில்...
 
1915 ஆம் ஆண்டு மொத்தமுள்ள  518  பணிகளில் நியமிக்கப்பட்ட வர்கள் விவரம் :
 
பார்ப்பனர்கள் 399 ,பார்ப்பனர்கள் அல்லாத இந்துக்கள் 18, ஆங்கிலோ  இந்தியர்கள் மற்றும் கிருத்தவர்கள் 73,முகம்மதியர்கள் 28.
 
 1914 ஆம் ஆண்டு சென்னை பல்கலை கழகம் நடத்திய பல்வேறு தேர்வுகளும்,அவற்றில் தெரிய மாணவர்களின் எண்ணிக்கை வருமாறு
 
தேர்வு                            பார்ப்பனர்களின்                                 பார்ப்பனர் அல்லாதார் 
                                                எண்ணிக்கை                                        எண்ணிக்கை
 
இன்டர் மீடியேட்                775                                                                     240
 
பி.ஏ                                          210                                                                       60
 
பி.எஸ்ஸி                            159                                                                        49
 
எம்.ஏ                                        67                                                                          9
 
எல்.டி                                      95                                                                         10
 
(நூல்:"ஒ.தணிகாசலம் செட்டியார் சமுதாய நீதியின் மகத்தான தலைவர்" - பக்கம் 38-39,நூலாசிரியர் :ம.இளஞ்செழியன் எம்.ஏ.)
 
இன்றைய நிலை தமிழ் நாட்டில்
மருத்துவ கல்லுரி சேர்க்கை (2009 ஆம் ஆண்டு)
திறந்த போட்டி இடங்கள்                 460
பிற்படுதாபட்டோர்                                300
மிகவும் பிற்படுத்தப்பட்டோர்           72
தாழ்த்தப்பட்டோர்                                   18
முஸ்லிம்கள்                                            16
முற்படுத்தப்பட்டோர்                            54
200 க்கு 200 கட் ஆப் மதிப்பெண் பெற்றோர் எண்ணிக்கை 8 , அதில் பிற்படுத்தப்பட்டோர் 7, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 1
இந்த மாற்றதிக்கு யார் காரணம்? சிந்திப்பீர் !
குறிப்பு: தமிழ் நாட்டில் பொறியியல் கல்லூரிகள் மட்டும் 500 தாண்டி விட்டன.
 

No comments:


weather counter Site Meter