குஜராத் இனப்படுகொலை (ழுநடிஉனைந) பற்றிய படுகொலையாளர்கள் மத்தியில் நடைபெற்ற தொலைப்பேசி உரையாடல்கள் அழிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், அது குறித்துத் தீவிர விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ. இராசா அவர்களுக்கும் கடிதம் எழுதியுள்ள தாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் இனப் படுகொலை தொடர்பாக முதலமைச்சர் மோடிக்கும், அதிகாரிகளுக்கும் இடையே நடந்த உரையாடல் படுகொலை செய்யப் பட்ட நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் (காங் கிரஸ்) எஹ்சான் ஜாப்ரி - முதலமைச்சர் நரேந்திர மோடி இடையிலான உரையாடல் - இவையெல்லாம் ஆவணப்படுத்தப்பட வேண்டியவையாகும். இவற்றை அழித்துவிட சதி நடக்கிறது என்ற தகவல் அதிர்ச்சி தரக்கூடியதாகும்.
சங் பரிவார், பா.ஜ.க. வட்டாரங்களைப் பொறுத்த வரை தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக எந்த எல்லைக்கும் சென்று எந்த மோசமான செய்கைகளிலும் ஈடுபடக் கூடியவர்கள் என்பது வெளிப்படை.
காந்தியாரைப் படுகொலை செய்த நாதுராம் கோட்சே என்ற பார்ப்பான் தனது கையில் இஸ் மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டிருக்க
வில்லையா! அதன்மூலம் காந்தியாரைப் படு கொலை செய்தவர் ஒரு முசுலிம் என்று மக்களை நம்பச் செய்து மதக் கலவரத்தை நடத்திவிடலாம் என்கிற நயவஞ்சகமும், சூழ்ச்சியும் தானே இதில் பதுங்கியிருக்கிறது?
காந்தியார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான கோப்புகள் காணாமல் போய்விட்டன என்று சொல்லப்படவில்லையா?
அதுவும் மோடி முதலமைச்சராக உள்ள நிலையில், தன்மீதுள்ள கொலை தொடர்பான சாட்சியங்களை மறைப்பதில், அழிப்பதில் அசகாய சூரராகச் செயல்படக் கூடியவர்தான் என்பது கட்சிகளைக் கடந்த பொதுமக்கள் மத்தியில் கூட நிலவும் அபிப்ராயம்தான்.
இராணுவத் துறையிலே சங் பரிவார் ஊடுருவியிருக்கும் பொழுது, காவல்துறை உள்பட அனைத்துத் துறைகளிலும் அவர்களின் ஆள்கள் அதிகம் இருக்கக்கூடிய வாய்ப்பு அதிகம்.
ஏற்கெனவே நரேந்திர மோடியின் அமைச்சர வையில் உள்துறை அமைச்சராக இருந்தவரே கொலை வழக்கில் சிக்கிக் கொண்டு பதவியை இழந்துள்ளார் - சிறைக்கும் அனுப்பப்பட்டுள்ளார். பெண் அமைச்சர் ஒருவரும் இந்த நிலைக்கு ஆளாகியுள்ளார்.
மோடியின் அமைச்சரவை சகாக்கள் - சிறு பான்மை மக்கள் படுகொலையில் சிக்கியிருக்கும் பொழுது, அவர்களின் படைத் தலைவர் நரேந்திர மோடி மட்டும் எப்படி சம்பந்தப்படாமல் இருக்க முடியும்?
தெகல்கா ஊடகம், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஊடுருவித் தந்திரமாக அவர்களின் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளதே!
இரண்டு நாள்கள் அவகாசம் தந்ததாகவும், அதற்குள் எது நடந்தாலும் காவல்துறை கண்டு கொள்ளாது என்றும் முதலமைச்சர் மோடி சொன்னதாக பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்களே கூறியிருக்கிறார்களே!
மோடி மட்டும் முதலமைச்சராக இல்லாமல் இருந்திருப்பாரேயானால் - அவரே களத்தில் இறங்கி இருப்பார் என்று அவர் கட்சியைச் சேர்ந் தவர்களே பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளனரே.
பாதிக்கப்பட்ட முசுலிம் மக்கள் நிவாரண முகாம்களில் முடங்கிக் கிடந்ததைக்கூடக் கொச்சைப்படுத்திப் பேசியவர் ஆயிற்றே இந்த மோடி மஸ்தான். தங்களின் மக்கள் தொகையைப் பெருக்கிட நிவாரண முகாம் பயன்படுகிறது என்று சொல்லவில்லையா? அந்தப் பேச்சு குறுந்தகடு (சி.டி.) வெளிவந்ததாகக் கூறப்பட்டது. பிறகு அதன் நிலை என்னாயிற்று என்றே தெரியவில்லை. அதே முறையில் பிரச்சினைக்குரிய தொலைப்பேசி உரையாடல்களை முற்றிலும் அழித்துவிட ஆன மட்டும் முயற்சிப்பார்கள். இதில் விழிப்பாக இருந்து இந்த முக்கியமான ஆவணத்தை தொலைப்பேசித் துறை பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
http://www.viduthalai.periyar.org.in/20100914/Page02.html
Search This Blog
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment