Pages

Search This Blog

Wednesday, September 15, 2010

ஒழுக்கக்கேட்டை உரம் போட்டு வளர்ப்பதற்காகவே ஒரு மதம் - பிராயச்சித்தங்கள் - திருநீறு, கோபி சந்தனம், குங்குமம்! வெட்கக்கேடே உன் பெயர்தான் இந்து மதமா?

வாதவூர் புராணம் பிர மோத்தா காண்டம் திருநீற் றின் பெருமையை அடே யப்பா, எப்படியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறது.
அதிக தூர்த்தனாக இருந்த ஒரு பிராமணன் ஒரு இராத்திரி, ஒரு புலை மாது டன் வியபசாரம் (விபச்சாரம்) பண்ணிக் கொண்டிருக்கை யில், அம்மாதின் கணவன் கண்டு, அத்தூர்த்தனை வாளினால் வெட்டிக் கொன்று, வேலிக்கப்பால் எறிந்தானாம். அந்நேரம் பசியால் வருந்தி குப்பைச் சாம்பலில் புரண் டிருந்த ஒரு நாய், அப் பிராமணப் பிணத்தைக் கண்டு அதன் மேல் ஏறி, மிதித்துக்கொண்டு தசையைக் கடித்து இழுத்துத் தின்றது. நாய் காலிலே ஒட்டிக் கொண் டிருந்த குப்பைச் சாம்பல் பிராமணப் பிணத்தின்மேல் படிந்ததால் சிவ கணங்கள் வந்து உபசரித்து, புட்ப விமா னத்தில் ஏற்றுஞ் சமயம், பிரா மணனின் தூர்த்த நடத்தைக் காக அவனைத் தண்டிக்க யம தூதர்கள் வந்து சேர, அவர் களை சிவகணங்கள் விரட்டி யத்துத் துரத்திவிட்டு, காமார்த்த பிராமணனை சிவலோகத்தில் கொண்டு போய்ச் சேர்ந்தார்கள்.
- இதுதான் திருநீற்றின் மகிமை. மாற்றான் மனை வியிடம் தவறாக நடந்து கொண்டவன் அந்தப் பார்ப் பான். செத்துப்போன அந்தப் பார்ப்பான் உடலை நாய் கிழித்துத் தின்றதாம். நாயின் கால்களில் ஒட்டிக் கொண் டிருந்த அந்தச் சாம்பல் சாதா ரணமானது இல்லையாம் - அது திருநீறாம். அந்தத் திருநீறு அந்த அயோக்கிய னின் உடலில் பட்டதால், அவன் செய்த பாவங்கள் தொலைந்து ஓடிப் போய்விட்ட தாம். யம தூதர்கள் நரகத் துக்குக் கொண்டு போகத்தான் வந்திருப்பார்கள் - அவர்களை சிவ கணங்கள் துரத்தியடித் தார்களாம்.
பஞ்சமா பாதகங்களைச் செய்தாலும் பாவமில்லை; பாவங்களைத் தீர்க்க மாட்டுச் சாணியான சாம்பலை - திருநீறை யணிந்தால் போதும் என்ற எண்ணம் படிந்த நாட்டிலே ஒழுக்கத்துக்குத் தான் என்ன மரியாதை?
ஆமாம், இந்தப் பீடிகை எதற்கு? காரணம் இல்லா மலா? கொலைக் குற்றத்தின் கீழ் நடமாடிக் கொண்டிருக் கும் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதிக்கு நாடு எங்கும் பவள விழாவாம் - ஜெயந்தியாம் - அக்கிரகாரங் களில் அமோகமாக நடந்து கொண்டிருக்கிறது.
சென்னை சிறீகிருஷ்ண கான சபாவில் அவருக்கு நடத்தப்பட்ட பவள விழா ஜெயந்தியில் திருவாய் மலர்ந்துள்ளார், கேளுங்கள், கேளுங்கள்!
நெற்றிக் குறியீடுகளான திருநீறு, திருநாமம் ஆகிய வற்றிற்கு நம் தலை
யெழுத்தை மாற்றும் சக்தி உண்டு என்று உபதேசம் செய்துள்ளார். (காமகோடி செப்டம்பர் 2010).
நெற்றி வழிய சாம்பலை (திருநீறை) ஜெயேந்திர சரஸ் வதி அணிவதன் மர்மம் நன்னாவே புரிகிறது. சங்கர் ராமனை தீர்த்துக் கட்டினா லும் - அனுராதா ரமணனின் மார்பகங்களைப் பிடித்தாலும், அந்தப் பாவங்கள் எல்லாம் அவர் நெற்றித் திருநீற்றின் முன் எம்மாத்திரம்!
ஒழுக்கக்கேட்டை உரம் போட்டு வளர்ப்பதற்காகவே ஒரு மதம் - பிராயச்சித்தங்கள் - திருநீறு, கோபி சந்தனம், குங்குமம்!
வெட்கக்கேடே உன் பெயர்தான் இந்து மதமா?
- மயிலாடன்

No comments:


weather counter Site Meter